அரசியல்வாதியைத் தாக்கிய அணில்
சிகாகோ நகரில், அணில்களின் அட்டகாசம் தாங்க
முடியவில்லை என்றும் அவைகளை தீர்த்துக்கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என
ஆவேசமாகப் பேசி இருக்கிறார்; இது எப்படியோ அங்குள்ள அணில்களுக்குத் தெரிந்து
விட்டதாம்! அதில் ஒரு பெரிய அணில் அந்த அரசியல்வாதியை தாக்க நினைத்தது;
அந்த அரசியல்வாதியின் பெயர் ஹவ்வார்டு புரூக்கின்ஸ்; அவர்
தினமும் காலையில் சைக்கிள் பயிற்சிக்குச் செல்வாராம்; அப்படி ஒரு நாள் சைக்கிளில் போய்க்
கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய அணில்
அவர்மீது விழுந்து தாக்கியதாம்! அதில் அவர் கீழே விழுந்து அவரின் மண்டை உடைந்தது;
மூக்கு உடைந்தது; பல பற்களை உடைந்துவிட்டன; ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு,
அறுவைச் சிகிச்சை செய்து ஒரளவு தேறி இருக்கிறார்;
அவர் சொல்கிறார், “நான் நல்லாவே சைக்கிள் ஓட்டுவேன்;
என்னை அந்த அணில் வேண்டுமென்றே தாக்கி உள்ளது; நான் அவைகளுக்கு எதிராகப் பேசிதால்,
அவைகள் கோபம் கொண்டு, மனித வெடிகுண்டு போல, ஒரு பெரிய அணில் “அணில் வெடிகுண்டாகி”
என்னை திட்டமிட்டுத் தாக்கி பழிவாங்கி உள்ளது” என்று பேட்டி அளித்துள்ளார்;
அந்த அரசியல்வாதியின் பேச்சு அணில்களுக்கு அவ்வளவு
கோபத்தையா உண்டாக்கி இருக்கும்?
“I can think of no other reason for this squirrel’s
actions that it was like a suicide bomber, getting revenge,” he told the Chicago
Tribune.
**
No comments:
Post a Comment