கந்தரலங்காரம்-11
குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசை இடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசை படு கால் பட்டு அசைந்தது மேரு அடி இட எண்
திசை வரை தூள் பட்டது அத்தூளின் வாரி திடர் பட்டதே!
(குசை நெகிழா = கூர்மை குன்றாத வெற்றி தரும் வேலாயுதத்தை உடைய எங்கள் முருகப்
பெருமானே! அவுணர் = அசுரர்களின் குடல் குழம்பிக் கலங்கும்படி, வாசி என்னும்
குதிரையின் வேகத்தைப் போன்ற வேகமுள்ள உனது மயில் வாகனத்தில் வரும்போது, அதன் பீலி
என்னும் தோகைகள் வேகமாக ஆடும்! அப்போது, (கால்=காற்று) அதனால் ஏற்படும் காற்றில் மேரு
மலையே அசைந்தது; மயில் தன் காலின் அடியை வைக்க, அதனால் எண் திசை (எட்டுத் திசை)
மலைகளும் பொடிப் பொடியாயின! அதனால் வாரி எறியப் பட்ட தூசிகள் கடல் திடல் போல ஆனது!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-11)
No comments:
Post a Comment