கந்தரலங்காரம்-16
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம்
என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழுபாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் துளைக்க வைவேல்
விடுங்கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே!
(நிலையற்ற மனத்தைத் தடுத்து நிறுத்துங்கள்! வெகுளி
என்னும் கோபத்தை விட்டு ஒழியுங்கள்! தானத்தை எப்போதும் செய்து வாருங்கள்! உண்மை
நெறியில் இருந்தபடியே இருங்கள்! ஏழு உலகத்தில் உள்ளவர்களும் உய்யும்படி, கொடிய
கோபத்தை உடைய சூரனுடன் மலையையே திறக்கும்படி துளைக்க, வைவேல் என்னும் கூரிய
வேலாயுதத்தை விடும் கோன் என்னும் முருகக் கடவுளுடைய அருள் வந்து தானே உமக்கு
வெளிப்படுமே!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-16)
No comments:
Post a Comment