கந்தரலங்காரம்-15
தாவடி ஓட்டு மயிலிலும் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ படி மாவலிபான்
மூவடி கேட்ட அன்று
மூது அண்ட கூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!
(தாவி அடி எடுத்து ஓடும் மயிலிலும், தேவர் தலையிலும்,
என் பாடலின் அடி கொண்ட ஏட்டிலும், பட்டதன்றோ, உன் திருவடிகள்! (படி=நிலம்) (மாவலிபான்
= மாவலி சக்கரவர்த்தி) மாவலி மன்னரிடம் மூன்று அடி நிலம் கேட்ட அன்று, பெரிய
விண்ணுலகத்து முகடு தட்டும்படி, தன் சிவந்த காலடியை நீட்டிய பெருமானான விஷ்ணுவின்
மருகமான முருகா உன் சிறிய திருவடிகளே!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-15)
No comments:
Post a Comment