கந்தரலங்காரம்-14
குப்பாய வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இரு நான்கு வெற்பும்
அப்பாதியாய் விழ மேரும் குலுங்க விண்ணாரும் உய்யச்
சப்பாணி கொட்டிய கை ஆறு இரண்டு உடைச் சண்முகனே!
(குப்பாய வாழ்க்கையுள் = இந்த உடல், ஒரு கூடு போன்ற
சரீரத்தில் (உடலில்) கூத்தாடிக் கொண்டிருக்கும் ஐவர் என்னும் ஐம்புலனங்களினால்
ஆட்டுவிக்கும் இந்த பாச நெஞ்சை ஈடேற்றுவாய் முருகா! இரு நான்கு வெற்பு என்னும்
எட்டு மலைகளும், பாதி பாதியாய் பிளந்து விழ, மேரு மலையும் நடுங்க, விண்ணவர்
என்னும் தேவர்கள் உய்ய, சப்பாணி விளையாட்டில் கை கொட்டி விளையாடும் பன்னிரண்டு கைகளை
(ஆறு இரண்டு கைகள்) உடைய சண்முகக் கடவுளே!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-14)
No comments:
Post a Comment