Saturday, November 26, 2016

Fidel Castro dies

Fidel Castro dies
Fidel Castro, Cuba’s former President has died. He is aged 90.
Castro ruled Cuba for almost half a century as a powerful leader. In 2008 he handed over the powers to his brother Raul.
Castro ruled the country as a one-party basis without allowing the opposition.
In 1959, Castro had established the first communist state in Cuba after overthrowing the military dictatorship of Fulgencio Batista. He ruled the country almost 50 years and finally he handed over the powers to his bother in 2008.
During his regime he reduced illiteracy, stamping out racism.
Throughout his regime he maintained the antagonistic relationship with the US.
His father was a wealthy sugarcane farmer in Cuba. He studied law and practised as lawyer. Later, he ran for election to the Cuban House of Representatives. But Batista, (dictatorship) seized power without any such election.
After that Castro and his men made an attack on the Moncada Army which was failed and he was sentenced to 15 years in prison.
The US backed the dictator Batista.
After the release of Castro from jail in 1955 under general amnesty, he adopted guerrilla attacks and won. He took over as Prime Minister in 1960.
He nationalised all US owned businesses in Cuba.
In 1961 internal war started to overthrow Castro, near the Bay of Pigs, which ended in disaster.
Castro publicly declared himself a Marxist-Leninist when Cuba was desperately depend on Soviet Union.
US President John F.Kennedy publicly declared not to re-invade Cuba.
Castro did not support opposition and he banned all the opposition newspapers, jailed the opponents. Castro changed his title from Prime Minister to President.
Due to medical reasons, he resigned and handed over the powers to his brother Raul.
During Castro’s power there were several attempts on his life and in all occasions he escaped luckily. 

Friday, November 25, 2016

அரசியல்வாதியைத் தாக்கிய அணில்

அரசியல்வாதியைத் தாக்கிய அணில்

சிகாகோ நகரில், அணில்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றும் அவைகளை தீர்த்துக்கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆவேசமாகப் பேசி இருக்கிறார்; இது எப்படியோ அங்குள்ள அணில்களுக்குத் தெரிந்து விட்டதாம்! அதில் ஒரு பெரிய அணில் அந்த அரசியல்வாதியை தாக்க நினைத்தது;

அந்த அரசியல்வாதியின் பெயர் ஹவ்வார்டு புரூக்கின்ஸ்; அவர் தினமும் காலையில் சைக்கிள் பயிற்சிக்குச் செல்வாராம்; அப்படி ஒரு நாள் சைக்கிளில் போய்க்  கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய அணில் அவர்மீது விழுந்து தாக்கியதாம்! அதில் அவர் கீழே விழுந்து அவரின் மண்டை உடைந்தது; மூக்கு உடைந்தது; பல பற்களை உடைந்துவிட்டன; ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்து ஒரளவு தேறி இருக்கிறார்;

அவர் சொல்கிறார், “நான் நல்லாவே சைக்கிள் ஓட்டுவேன்; என்னை அந்த அணில் வேண்டுமென்றே தாக்கி உள்ளது; நான் அவைகளுக்கு எதிராகப் பேசிதால், அவைகள் கோபம் கொண்டு, மனித வெடிகுண்டு போல, ஒரு பெரிய அணில் “அணில் வெடிகுண்டாகி” என்னை திட்டமிட்டுத் தாக்கி பழிவாங்கி உள்ளது” என்று பேட்டி அளித்துள்ளார்;

அந்த அரசியல்வாதியின் பேச்சு அணில்களுக்கு அவ்வளவு கோபத்தையா உண்டாக்கி இருக்கும்?

“I can think of no other reason for this squirrel’s actions that it was like a suicide bomber, getting revenge,” he told the Chicago Tribune.
**


Thursday, November 24, 2016

Thanks Giving Day

Thanks Giving Day

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 4-வது வியாழக்கிழமை இந்த நன்றி தெரிவிக்கும் விழா என்னும் Thanks Giving Day அமெரிக்கர்களால் கொண்டாடப் படுகிறது; இந்தியாவில் அறுவடைத் திருநாளாக இதை கொண்டாடுகின்றனர்; உணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்று இதைக் கொண்டாடுகின்றனர் அமெரிக்கர்கள்; (கனடாவில் இதையே அக்டோபர் இரண்டாம் திங்கள் கிழமை கொண்டாடுகிறார்கள்); இந்தியாவில் தை மாதம் 1-ம் தேதி கொண்டாடுகின்றனர்; வடஇந்தியாவில் மகர சங்காரந்தி என்றும், தென்இந்தியாவில் பொங்கல் என்றும் பெயர்;

1620-ல் மேபிளவர் (Mayflower) என்ற கப்பல் ப்ளோமவுத் துறைமுகத்தில் இருந்து (இங்கிலாந்தில் உள்ள துறைமுகம்) புது உலகம் காணப் புறப்பட்டது; கடலில் தத்தளித்து தடுமாறி 66 நாட்கள் கடந்து, அதிலிருந்த 102 பயணிகளும் ஒரு இடத்தை அடைகின்றனர்; அது அவர்கள் வரவேண்டிய இடம் இல்லை; மறுபடியும் ஒருமாதம் கடலில் திரிந்து கடைசியாக அடைந்த இடமே மாசாசூசெட்ஸ் துறைமுகம்; இது அமெரிக்காவில் உள்ளது; அங்கு தங்கி, தங்களின் உணவுக்காக முதல் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்கின்றனர்; அதை அங்குள்ள ஆதி அமெரிக்க மக்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்கின்றனர்; இந்த விருந்து நிகழ்ச்சியை நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடுகின்றனர்;

இன்றும் அதேபோல, பழைய பழக்க வழக்கத்தில் உள்ள உணவைச் சமைத்து சாப்பிட்டு, நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வார்களாம்!

இதை, 1789-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு சட்டமாகவே இயற்றி இருக்கிறார்; அப்போதிலிருந்தே இந்த நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாடப்படுகிறதாம்! பின்னர் ஜனாதிபதியாக வந்த அப்ரகாம் இதை ரத்து செய்து விட்டாராம்! 

பின்னர், 1941லிருந்து தேசிய விடுமுறை நாள் அறிவித்து கொண்டாடி வருகின்றனர் அமெரிக்கர்கள் அனைவரும்!

அமெரிக்காவில்இன்று இப்போது வியாழக்கிழமை தொடங்குகிறது; (இந்தியாவில் இப்போது வியாழக்கிழமை முடிகிறது);

நியூயார்க் நகரில் மட்டும் சுமார்  3 மில்லியன் மக்கள் தெருவில் கூடி நின்று அந்தப் பேரணியை பார்வையிடுகின்றனர்; பெரிய திருவிழாவாக நடக்கிறது; வரும் இளம் தலைமுறைகளுக்கு அதன் சரித்திரத்தை சொல்வதற்காக இந்த ஏற்பாடாம்!

நாமும் அவர்களின் நன்றி தெரிவிக்கும் விழாவை வாழ்த்திச் சிறப்பிப்போம்!

**

ஹேடிஸ் (Hades) எமன்


ஹேடிஸ் (Hades) எமன்

ஜீயஸ் கடவுளுக்கு இரண்டு தம்பிகள்; ஹேடிஸ் மற்றும் பொசிடான்; இந்தப் பிரபஞ்சத்தை மூன்றாகப் பிரித்துக் கொண்டனர்; அதில் பொசிடானுக்கு கடலையும், ஹேடிஸ்க்கு பாதாள உலகத்தையும் கொடுத்துவிட்டு, மீதி உள்ள பூமியையும், ஆகாயத்தையும் மூத்தவரான ஜீயஸ் கடவுள் எடுத்துக் கொண்டார்; ஜீயஸ் கடவுள்தான் மற்ற கடவுள்களுக்கு எல்லாம் அரசன்; (கிரேக்க இதிகாசத்தில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது);

ஹேடிஸ் பாதாள உலகத்துக்கு கடவுள்; பாதாள உலகம் என்றால் இறந்த மானிடர்கள் செல்லும் சொர்க்க-நரகம் இருக்கும் இடமாக இருக்கலாம்; எனவே இந்த ஹேடிஸ்தான் எமன் கடவுளாக இருக்க முடியும்; எமதர்மராஜன்;

ஹேடிஸ் கருப்பு தலைமுடியுடன் , கருப்பு தாடியுடன் இருப்பார்; ஒரு சாரட் வண்டி வைத்திருப்பார்; அதை நான்கு கருப்பு குதிரைகள் இழுத்துக் கொண்டிருக்கும்; (இங்கு எமனின் வாகனம் கருப்பு எருமை மாடு); இந்த ஹேடிஸ் திருமணம் செய்து கொண்டார்; அவர் மனைவியின் பெயர் பிரெசெபோன்; அவள் இறந்தவர்களுக்கு ராணி, எமனின் மனைவி;

மற்ற கடவுள்களுக்கு இந்த ஹேடிஸை என்ற எமனைப் பிடிக்காது; ஏன் மனிதர்களுக்கும் இந்த ஹேடிஸ் என்ற எமனைப் பிடிக்காது; ஹேடிஸ் அப்படி ஒன்றும் பொல்லாதவர் இல்லை; நேர்மையாக நடப்பாராம்; இறந்தவர்களைக் கூட்டிக் கொண்டு போவதால், அவரை பொதுவாக எல்லோருக்கும் பிடிக்காமல் போய் விட்டது;
யாராவது இறந்து பாதாள உலகம் சென்று விட்டால், திரும்பி வர முடியாதாம்! ஆனால் ஒருவர் மட்டும் அங்கு போய் விட்டு திரும்ப வந்திருக்கிறார்; அவர் பாடகர்  ஆர்பியஸ் (Orpheus: o:fies); அந்த பாடகரின் மனைவி பெயர் யூரிடைஸ்; இந்த யூரிடைஸ் இறந்து விட்டாள்; எனவே ஹேடிஸ்-எமன் வந்து அவளைக் கூட்டிக் கொண்டு பாதாள உலகம் சென்று விட்டார்; பாடகர் ஆர்பியஸ், இறந்த தன் மனைவியை தேடிக் கொண்டு திரிகிறார்; அப்படியே பாதாள உலகத்துக்கு வந்துவிட்டார்; மனைவியை அங்கு பார்க்கிறார்; ஆர்பியஸ் சோகமான பாடல் ஒன்றைப் பாடுகிறார்; இதில் மயங்கிய ஹேடிஸ்-எமன் அவர் மீது இரக்கம் கொள்கிறார்; பாடகரின் விருப்பப்படி அவரின் மனைவியை திரும்ப கூட்டிக் கொண்டு மண்ணுலகம் செல்லும் படி கூறுகிறார்; ஆனால் ஒரு நிபந்தனை; “போகும்போது, நீங்கள் உங்கள் மனைவியை பார்க்கக் கூடாது; பார்த்தால் மறுபடியும் அவர் இறந்து விடுவார்என்று ஹேடிஸ்-எமதர்மராஜன் நிபந்தனை விதிக்கிறார்;

ஒப்புக்கொண்டு பாடகர் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு பாதாள உலகத்தை விட்டு வருகிறார்; மனைவி பின் தொடர்ந்து வருகிறார்; வரும் வழியில், மனைவியின் சத்தத்தையே காணவில்லை; சந்தேகப்பட்டு திரும்பிப் பார்க்கிறார்; ஆனால் மனைவி அவர் பின்னாலேயேதான் வருகிறார்; அப்படிப் பார்க்கும்போது, அவளின் முகத்தைப் பார்த்து விடுகிறார்; நிபந்தனை மீறப்படுகிறது; எனவே மனைவி மறுபடியும் இறந்து விடுகிறாள்;  மறுபடியும் மனைவி பாதாள உலகத்துக்கு போய் விடுகிறாள்; இனித் திரும்ப வரமாட்டாள்;
பொதுவாக, ஹேடிஸ்-எமன் வெளியில் எங்கும் போய் சுற்றித் திரிவதில்லை; வேலைபளு அப்படி; அப்படி வெளியே வந்தால் மற்றவர்களுக்கு பிடிப்பதில்லையாம்! மண்ணுலகுக்கு இறப்பின் காரணமாகவே வரவேண்டி உள்ளதாம்; வேறு வேலையாக வர முடியாதாம்!

ஒருமுறை, மண்ணுலகில் சிசிபஸ் என்ற மன்னனை பிடிக்க வரவேண்டி இருந்ததாம்; அவனுக்கு ஆயுள் முடிந்து விட்டது; ஆனால் அவனோ, ஒவ்வொரு முறை ஹேடிஸ்-எமன் பூமிக்கு வரும்போது, அந்த சிசிபஸ் மன்னன் தப்பித்துக் கொள்வானாம்! சாவை ஏமாற்றிக் கொண்டே இருந்த மனிதன் இவன்தானாம்! சிரஞ்சீவி போல!

ஒருநாள், சிசிபஸை, ஹேடிஸ்-எமன் பார்த்து விட்டார்; போலீஸ் முறையில் கையில் விலங்கு மாட்டி இழுத்துக் கொண்டு போகலாம் என்று நினைத்தாராம்; தப்பிவிடக் கூடாது என்பதற்காக அப்படி விலங்கு போடுவாராம்; அப்படி விலங்கு போட்டால், மனிதனின் உயிர் பிரியாதாம்! உயிருடன்தான் மனிதன் இருப்பானாம்!  இந்த தந்திரத்தை தெரிந்து கொண்ட சிசிபஸ் மன்னர், தன்னை விலங்கு மாட்டி இழுத்துக் கொண்டு செல்லும்படி ஹேடிஸ்-எமனிடம் கூறுகிறான்; இவனின் தந்திரத்தை தெரிந்து கொண்ட ஹேடிஸ்-எமன் அப்படிச்  செய்யாமல், விலங்கு மாட்டாமல், தன் பக்கத்திலேயே நடந்து வரும்படி கூறினார்; அதனால், பாதாள உலகம் வந்தவுடன் சிசிபஸ் மன்னர் இறந்து விடுகிறார்; அங்கு பாதாள உலகத்தில் அவனைத் தள்ளிவிடுகிறார்; தன்னை ஏமாற்றிய இவன், இங்கும் ஏதாவது தில்லு-முல்லை வேலை செய்வான் என அறிந்த ஹேடிஸ்-எமன், அங்கு அவனுக்கு கடுமையான வேலையைக் கொடுக்கிறார்; ஒரு பெரிய பீப்பாயைக் கொடுத்து, அங்குள்ள உயரமான மலையில் அதை தள்ளி ஏற்றச் சொல்வாராம்; ஏற்றி முடித்தவுடன் அதை கீழே இறக்கச் சொல்வாராம்; மீண்டும் அதை மலை உச்சிக்கு ஏற்றச் சொல்வாராம்; இப்படி நாள் முழுவதும் அதே வேலை அவனுக்கு; தப்பிக்கவே முடியாது அவனால்;

ஹேடிஸ்-எமனுக்கு துணையாக ஒரு நாய் கூடவே இருக்குமாம்! அந்த நாய்க்கு மூன்று தலை இருக்குமாம்! அந்த நாயின் பெயர் செர்பரஸ்; அதுதான் ஹேடிஸ்-எமனுக்குப் பாதுகாப்பு;

பாதாள உலகத்தில் மொத்தம் ஒன்பது நதிகள் உள்ளனவாம்; (இந்திய இதிகாசத்திலும் இப்படி சொல்லப்பட்டுள்ளது); அதில் ஒரு நதியின் பெயர் ஸ்டிக்ஸ் (Styx); அங்குதான் இறந்தவர்களின் மிச்ச மீதியை தள்ளி விடுவார்களாம்; இந்த நதிதான் பாதாள உலகத்துக்கும் பூமிக்கு இடையில் உள்ள நதி ஆகும்; இதைத் தாண்டித்தான் பாதாள உலகத்துக்குப் போக முடியும்; அந்த நதியில் சரோன் என்ற ஒரு படகோட்டி இருக்கிறான்; அவன், இறந்தவர்களை கரையேற்றும் வேலையை செய்வான்; இறந்தவர்களை அங்கு உள்ள நதியில் தள்ளி விடுவானாம்; (கடும் தண்டனை கொடுக்க வேண்டியவர்களை மட்டும் பாதாள உலகத்துக்கு கூட்டிக் கொண்டுபோய் கொடுமைப் படுத்துவார்கள் போலும்!)
**


Hera ஹெரா (ராணிக் கடவுள்)

Hera ஹெரா (ராணிக் கடவுள்)
கிரேக்க இதிகாசத்தில் ஜீயஸ் கடவுள் தான், கடவுள்களுக்கு எல்லாம் தலைமைக் கடவுள் (சிவபெருமான் மாதிரி); கடவுள்களுக்கு ராஜாவான ஜீயஸ் கடவுளுக்கு முதல் மனைவிதான் இந்த ஹெரா என்ற பெண் கடவுள் (பார்வதி மாதிரி); ஹெராவை கடவுள்களின் ராணி என்பர்;

ஜீயஸ் கடவுள் இந்த பூமியையும், ஆகாயத்தையும் காக்கும் கடவுள் ஆவார்; அவரின் மனைவியான ஹெரா பூமியில் உள்ள பெண்களுக்கு கடவுள் ஆவார்; இவளுக்கு ஈரிஸ் கடவுள் ஒரு குழந்தை; ஈரிஸ் கடவுள் போர், சண்டைக்களுக்கான கடவுள்; மற்றொரு மகன் ஹிபீஸ்டஸ் (Hephaestus); இவன் நெருப்புக்கும், அதில் உருவாக்கும் பொருள்களுக்கும் கடவுள் ஆவான்; ஹெரா பெண்கடவுளுக்கு ஒரு மகளும் உண்டு; அவள் பெயர் இலித்தியா (Ilithyia); இந்த இலித்தியா குழந்தைப் பிறப்புக்கு உரிய கடவுள் ஆவாள்;

தலைமை கடவுளான ஜீயஸ் கடவுளின் மனைவியான ஹெரா ஒரு பேரழகி; அன்பானவள்; எனவே இவளைக் கடவுள்களின் ராணி என்பர்; கட்டுப்பாடு நிறைந்தவள்; இவள் அழகின் மீது இவளுக்கு ஒரு கர்வம் உண்டாம்!  ஏற்கனவே ஒரு அழகிப் போட்டியில் இவளையும், ஏதெனாவையும், அப்ரடைட்டியையும் போட்டிக்கு அழைத்து, அங்கு மனிதகுல ராணியான ஹெலனை “உலகப் பேரழகி” என்று தீர்ப்புச் சொல்லியதில், ஹெராவுக்கு மிகுந்த கோபம் உண்டானதாம்! இதை ஏற்பாடு செய்த ஒரு தேவதையை கொக்காக ஆகும்படி சபித்து விட்டாளாம்!

கடவுள்களின் ராஜாவான ஜீயஸ்-க்கு மனைவியாக இருப்பதால், இவளே மனிதர்களின் திருமணங்களுக்கு இவளே கடவுள் ஆவாள்; இவளது திருமண வாழ்க்கை அவ்வளவு இன்பமானதாக இல்லாமல் இருக்கிறதாம்! இருந்தாலும் இவளே திருமணங்களுக்கு கடவுள் ஆவாள்! இவளின் கணவனான ஜீயஸ் கடவுளுக்கு மற்ற பெண்களைக் கண்டால் ஆசை வந்துவிடுமாம்! அதனாலேயே அவன் மனைவி ஹெரா ராணி கடவுளுக்கு தான்தான் பெரியவள் என்ற கர்வமும் இருக்குமாம்!

ஜீயஸ் கடவுள் எங்கு செல்கிறார், எந்தப் பெண்ணைச் சந்திக்கிறார் என்று கண்காணிப்பதற்காக, ராணி கடவுளான ஹெரா ஒரு “ஆயிரம் கண்கள்” கொண்ட ஒரு அரக்கனான அர்கோஸ் என்பவனை ஜீயஸ் கடவுள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அனுப்பி வைப்பாளாம்; இதில் எரிச்சல் அடைந்த ஜீயஸ் கடவுள், தன் மகன் ஹெர்மிஸ் என்பவனைக் கூப்பிட்டு, அந்த அரக்கனைக் கொல்லுமாறு அனுப்பினாராம்; இந்த ஹெர்மிஸ்தான் பறக்கும் திறன் கொண்ட சிறுவனான கடவுள்; அவன், இந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை; அந்த அரக்கனின் ஏதாவது ஒரு கண் முழித்துக் கொண்டு இருக்கிறதாம்; எனவே இந்தச் சிறுவன் கடவுள், பாட்டுப்பாடி, அரக்கனின் ஆயிரம் கண்களையும் தூங்க வைத்துவிட்டு, அந்த அரக்கனை ஒரு வழியாகக் கொன்றானாம்!

இறந்த அரக்கனைப் பார்த்த, ஜீயஸ் கடவுளின் மனைவியான ஹெரா, அந்த இறந்த அரக்கனின் கண்களை பிடுங்கி எடுத்து, அதை மயில்களின் தோகையில் வைத்து விட்டாளாம்! அவள் அதில் ஏறிச் சுற்றி வருவாளாம்! கணவனைக் கண்காணிக்க இந்த மயிலின் கண்கள் உதவுகிறதாம்! (அந்த மயிலைத்தான் முருகன் வாங்கிக் கொண்டாரோ?); ஹெராவுக்கு மயில்கள் இல்லாமல், பசுமாடு, சிங்கம், சேவல் இவளைகளும் பிடிக்குமாம்; அவைகளையும் அவ்வப்போது உபயோகித்துக் கொள்வாளாம்!

மனைவியின் பார்வையில் இருந்து தப்பிக்க வழிதெரியாத ராஜா கடவுளான ஜீயஸ், ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்; ஒரு ஆவிக் கடவுளான இளம் பெண்ணான எக்கோ பெண் கடவுளிடம் ஒரு உதவியைக் கேட்கிறார் ஜீயஸ் கடவுள்; தன் மனைவி ஹெராவுக்கு கதைகள் சொல்லும்படி கேட்டாராம்! இந்த இளம் பெண் கடவுளும், ஹெராவுக்கு பிடித்த கதைகளை நாள்முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்குமாம்! அப்படி கதை கேட்கும்போது, ஹெரா, தன் கணவனை கண்காணிக்க மறந்து விடுவாளாம்! அந்த சந்தர்பத்தில், ஜீயஸ் கடவுள் ஊர் சுற்ற போய் விடுவாராம்! இந்த விஷயத்தை பின்னர் தெரிந்து கொண்ட ஹெரா ராணிக் கடவுளுக்கு எக்கோ மீது கோபம் வந்ததாம்! கோபத்தில், “இனி உனக்கு கதை சொல்லும் திறமையே இல்லாமல் போகக்கடவது” என்று சாபம் கொடுத்து விட்டாளாம்! அதற்குப் பின்னர், எக்கோவுக்கு அந்த திறமையே போய் விட்டதாம்! யாராவது ஏதாவது சொன்னால், அதைத் திருப்பிச் சொல்லும் திறமை மட்டுமே எக்கோவுக்கு இப்போது இருக்கிறதாம்! கவலையில் எக்கோ, மறைந்து ஒரு மலையில் போய்ச் சேர்ந்து விட்டாளாம்; அதற்குப்பின்னர் யாராவது மலைக்கு பக்கத்தில் நின்று கொண்டு எதையாவது சத்தமாகச் சொன்னால் ,அதை மட்டும் திருப்பிச் சொல்வாளாம்; (எக்கோ கடவுள் பெயரில்தான் எக்கோ என்னும் எதிரொலி உண்டானதோ?);
**


அப்ரடைட்டி பெண் கடவுள் (Aphordite)

அப்ரடைட்டி Aphordite: (afre’dide)
பெண் கடவுளான “அப்ரடைட்டி”  ஒரு பேரழகி; இவள் பிறப்பே வித்தியாசமானது; பொங்கிவந்த கடல் நுரையில் பிறந்தவள்; பேரழகியாக, முழுப் பெண்ணாகவே கடல் அலையில் பிறந்து வந்தவள்; எனவே இவள்தான் காதலுக்கு கடவுள் ஆவாள்;  சிட்டுக்குருவி, புறா, வாத்து இவைகளின் மீது இவளுக்கு கொள்ளை ஆசையாம்!
இவளைத் திருமணம் செய்தவன் ஹிபிஸ்டஸ் (Hephaestus) என்னும் கடவுள்; இவனோ நெருப்புக்குக் கடவுள்! என்னதான் காதலுக்கு இவள் கடவுளாக இருந்தாலும், இவள் கணவனுடன் இவள் அவ்வளவு பிரியமாக இல்லையாம்! இவளுக்கோ, ஏரிஸ் (Ares) மீது காதலாம்! (காதல் தேவதையே குழப்பமானவள்தான் போலும்!)
அப்ரடைட்டியும் அவளின் மகன் ஈரோஸ் (Eros) என்ற குட்டிக் கடவுளும்தான் மக்களின் காதல் கடவுளாக விளங்கி வருகின்றனராம்; மக்கள் காதல் கொள்வதற்கு இவர்களே காரணமாம்! ஈரோஸ் கையில் தான் காதலின் சின்னமான வில்லும் அம்பும் (மன்மத அம்பு) இருக்கிறதாம்!  இந்த அப்ரடைட்டி கடவுள், காதலுக்குகாக சண்டையை ஏற்படுத்துவாளாம்! சண்டை என்றால் சின்ன சண்டை இல்லை, பெரிய போர்களையே உண்டாக்குவாளாம்! ஈரிஸ் (Eris) என்ற தேவதைதான் அந்த சண்டையை நிறுத்தி சமாதானம் ஆக்குவாளாம்!
ஒருநாள், ஈரிஸ் என்ற தேவதை ஒரு “தங்க ஆப்பிள்” பழத்தை உருவாக்குகிறாள்; அந்த ஆப்பிள் பழத்தில், ஒரு வாசகத்தை எழுதுகிறாள், “யார் பேரழகியோ அவர்களுக்கு இந்த ஆப்பிள்” என்று; பின்னர், அந்த ஆப்பிள் பழத்தை தூக்கி எறிகிறாள்! யாருக்குக் கிடைக்கும் பார்க்கலாம் என நினைக்கிறாள்! அந்த ஆப்பிள் பறந்து சென்று, பெண் கடவுள்களான ஏதெனா, ஹெரா, அப்ரடைட்டி ஆகியோர் முன்னர் விழுகிறது; அந்த மூன்று பெண் கடவுள்களும், இந்த ஆப்பிள் என்னை நோக்கித்தான் விழுந்தது என்றும் எனவே நானே பேரழகி என்று மூவருமே நினைக்கிறார்கள்; இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க ஆரம்பிக்கிறது; முடிவில், இதை ஒரு போட்டியாக வைத்துக் கொள்வோம் என்றும் யார் பேரழகி என்று அதில் முடிவெடுக்கலாம் என்று ஒப்புக் கொள்கிறார்கள்!
இந்தப் போட்டிக்கு யாரை நீதிபதியாக நியமிப்பது என யோசித்து, மனிதர்களில் ஒருவரான “இளவரசன் பாரிஸ்” என்பவனைத் தேர்ந்தெடுக்கின்றனர்; மூவருமே அவனை சந்திக்கின்றனர்;
ஹெரா சொல்கிறாள், “இளவரசனே! என்னை நீ பேரழகியாகத் தேர்ந்தெடுத்தால், நான் உன்னை இந்த உலகத்துக்கே மன்னன்  ஆக்குவேன்” என்கிறாள்;
ஏதெனா சொல்கிறாள், “இளவரசனே! என்னை நீ பேரழகியாகத் தேர்ந்தெடுத்தால், உன்னை யாரும் ஜெயிக்க முடியாத மிகப் பெரிய வீரனாக ஆக்குவேன்” என்கிறாள்;
அவனுக்கு இரண்டு பேர்கள் சொல்வதிலும் இஷ்டமில்லாமல் இருக்கிறான்;
அப்ரரைட்டி சொல்கிறாள், “நீ என்னைப் பேரழகி என்று முடிவு செய்தால், இந்த பிரபஞ்சத்திலேயே மிக அழகியை உனக்கு பரிசாகக் கொடுப்பேன்” என்கிறாள்;
இந்த அப்ரரைட்டி சொல்வதில், இவனுக்கு ஆசை ஏற்படுகிறது; ஒரு பேரழகியை மனைவியாக அடையலாம் என்று முடிவு செய்கிறான்;
எனவே, இளவரசன் பாரிஸ், அப்ரடைட்டி-தான் பேரழகி என்று தீர்ப்பைச் சொல்லி விடுகிறான்;
இதைத்தான், தங்க ஆப்பிளை தூக்கி எறிந்த ஈரிஸ் தேவதை எதிர்பார்க்கிறது; பிரச்சனைக்கு இதுதான் வழி என நினைக்கிறது;
ஒப்புக் கொண்டபடி, உலகிலேயே மிகுந்த பேரழகியை இப்போது இளவரசன் பாரிஸூக்கு அப்ரடைட்டி பெண் கடவுள் காண்பிக்க வேண்டும்; ஆனால் அந்த உலகப் பேரழகிக்கோ ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது; அவள் பெயர் ஹெலன் (Helan); மெனிலயஸ் (Menelaus) என்ற மன்னரின் மனைவி அவள்; அந்த மெனிலயஸ் மன்னனோ ஸ்பார்டா (Sparta) என்ற நாட்டுக்கு மன்னன்; அவன் மனைவிதான் ஹெலன் என்ற பேரழகி; இவளே அந்த நாட்டு ராணி;
இப்படி இருக்கும்போது, அந்தப் பேரழகியை (திருமணமானவளை) எப்படி இளவரசன் பாரிஸ் திருமணம் செய்ய முடியும்? பிரச்சனை இங்குதான் ஏற்படுகிறது;
இளவரசன் பாரிஸ், ஸ்பார்ட்டா நாட்டுக்குப் போகிறான்; அங்கு அந்த நாட்டு மன்னன் மெனிலயஸைச் சந்திக்கிறான்; அவனுடன் நட்புக் கொள்கிறான்; அவன் அரண்மனையிலேயே தங்கி இருக்கிறான்; ஒருநாள், ஸ்பார்ட்டா நாட்டு மன்னன் மெனிலியஸை, பக்கத்து நாட்டுக்கு போருக்கு போகிறான்; அப்போது தன் நண்பன் இளவரசன் பாரிஸை, தன் அரண்மனையில் மனைவிக்கு துணையாக இருக்குமாறும், அவன் போர் முடித்து வந்தவுடன், இளவரசனை அவனின் ஊருக்கு பயணம் அனுப்புவதாகவும் சொல்லி விட்டு போருக்கு போய் விட்டான்; அவன் போர் முடித்து திரும்ப வருவதற்குள், இளவரசன் பாரிஸ், மன்னன் மெனிலயஸையின் மனைவியான பேரழகி ஹெலனுடன் பழகி, காதல் கொள்கிறான்; அவளைக் கூட்டிக் கொண்டு அந்த நாட்டை விட்டே  தப்பித்து ஓடிவிடுகிறான்;
போர் முடிந்து வந்த மன்னன் மெனிலியஸ், தன் மனைவியைக் காணாது தவிக்கிறான்; நண்பன் பாரிஸ்தான் இந்த துரோகத்தைச் செய்தான் என்று தெரிந்து, அவனை நாடு நாடாகத் தேடுகிறான்; எங்கும் கிடைக்கவில்லை; ஒருவழியாக, பாரிஸ், ஹெலனுடன் டிராய் நகரில் ஒளிந்து கொண்டு இருப்பதாக தூது கிடைக்கிறது; கிரேக்க நாட்டில் உள்ள மற்ற மன்னர்களை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு டிராய் நாட்டின் மீது போர் தொடுக்கிறான்; அதுவே ட்ரோஜான் போர் (Trojan War) என்று கிரேக்க இதிகாசங்களில் சிறப்பாக பேசிப்படுகிறது; சுமார் 10 வருடங்கள் இந்தப் போர் நடக்கிறது; டிராய் நகரை அழித்து மனைவியை மீட்கிறான்;
**

Wednesday, November 23, 2016

ஜீயஸ் கடவுள் (Zeus)

ஜீயஸ் தலைமைக் கடவுள் (Zeus: zju:s or zoos)
கிரேக்க இதிகாசத்தில், ஜீயஸ் கடவுள்தான், மற்ற எல்லாக் கடவுள்களுக்கு எல்லாம் தலைமைக் கடவுள்; இவரே மூத்தவர்; இவருடன் கூடப் பிறந்த இளைய சகோதர்கள் இருவர்; ஹேடஸ் (Hades), மற்றும் பொசிடான் (Poseidon); இந்த மொத்த பிரபஞ்சத்தையும் இந்த மூன்று சகோதரர்களும் பங்கு பிரித்து ஆட்சி செய்து வருகிறார்கள்; ஹேடஸ்-க்கு பாதாள உலகத்தைக் கொடுத்து விட்டார்; மற்றொரு சகோதரரான பொசிடானுக்கு கடல் உலகைக் கொடுத்து விடுகிறார்; ஜீயஸ் கடவுள் மட்டும் ஆகாயத்தையும், பூமியையும் வைத்துக் கொள்கிறார்; ஜீயஸ் கடவுள் தான் மழைக்கும் கடவுள்; மின்னல், இடி இவைகளுக்கும் இவரே கடவுள்; இவர் கையில் எப்போதும் மின்னல் போன்ற ஒரு ஆயுதத்தை வைத்திருப்பார்;
ஜீயஸ் கடவுளே, எல்லாக் கடவுள்களுக்கும் தலைமைக் கடவுள் என்றாலும், மற்ற அதிகாரங்கள் இவரின் கையில் இல்லையாம்! மற்ற விஷயங்களை இவரின் மற்ற மகன்களும், மூன்று மகள்களும் தீர்மானிப்பார்களாம்! கடவுள் பிரச்சனை என்றாலும், மனிதன் பிரச்சனை என்றாலும், இந்த மற்ற கடவுள்கள்தான் தீர்மானிப்பர்!  அவர்கள் எடுத்த முடிவை ஜீயஸ் கடவுள் மாற்றிவிட முடியாதாம்!

ஜீயஸ் கடவுள் புத்திசாலிக் கடவுள் என்றாலும், சில நேரங்களில் சுதப்பி விடுவாராம்! இவர்தான், மனிதர்களுக்கு சட்டங்களையும், நீதியையும் வழங்குவாராம்! இவரே மனிதர்களுக்கு நல்ல குணங்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் கொடுத்தவராம்!

ஜீயஸ் கடவுள் ஊர் சுற்றுவதில் மன்னனாம்! சில நேரங்களில் மாறுவேடத்திலும் ஊர், உலகத்தைச் சுற்றி வருவாராம்! (சிவபெருமானை ஞாபகப்படுத்துகிறதோ!); ஒருநாள், இவரும் இவரின்  மகனான ஹெர்மிஸ் (நாரதன் போன்ற) பறந்து செல்லும் தூது செல்லும் கடவுளான இவனுடன் இருவரும் ஊர் சுற்றிவரப் புறப்படுகிறார்கள்; அப்போது இருவருமே மாறு வேடத்தில் மனிதர்களைப் போன்று உருவம் எடுத்துச் செல்கின்றனர்; ஒரு ஊரில் இறங்கி, அங்குள்ள மக்களிடம், பசிக்கு சாப்பாடு கேட்டு நிற்கின்றனர்; இரவில் தங்குவதற்கு ஏதாவது இடம் இருக்கிறதா என்றும் விசாரிக்கின்றனர்; யாரும் இவர்கள் இருவரையும் சட்டை செய்யவில்லை; எல்லோருமே விரட்டி அடிக்கிறார்கள்! ஒரு வயதான கணவனும் மனைவியும் இருக்கும் வீட்டுக்கு வருகிறார்கள்; ஆனால் அந்த வயதான முதியவர்கள் மிக மிக ஏழைகள்; ஆனால் இவர்கள் இருவர் மீதும் இரக்கம் கொண்டு, அவர்களுக்கு உணவு, நீர், கொடுத்து, இரவில் அவர்கள் வீட்டில் தங்குவதற்கும் இடம் கொடுக்கிறார்கள்;

மறுநாள் காலையில் எழுந்தவுடன், ஜீயஸ் கடவுளும், அவர் மகன் ஹெர்மிஸ் கடவுளும் தங்களின் மாறுவேடத்தை கலைத்துவிட்டு, கடவுள் உருவத்தில் வெளிப்படுகிறார்கள்; அந்த ஊரில் பெரிய வெள்ளம் வரும்படி ஏற்பாடு செய்கிறார் கடவுள்; அந்த ஊரில் உள்ள எல்லா வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன; ஆனால், கடவுளுக்கு உதவிய இந்த முதியவர் வீடு மட்டும் சேதம் இல்லாமல் அப்படியே இருக்கிறது; முதியவர்களைப் பார்த்து “உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்” என்று ஜீயஸ் கடவுள் கேட்கிறார்; ஆனால் அவர்கள் எதையும் கேட்கவில்லை; “நாங்கள் இப்படியே வாழ்ந்து கொள்கிறோம், ஆனால், கணவன் மனைவியாகிய நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்துவிட வேண்டும் என்பதே எங்கள் ஆசை” என்று கேட்கின்றனர்; கடவுளும் அப்படியே செய்வதாக சொல்லிச் செல்கிறார்;

அவர்கள் இருவரும் ஒரு கோயிலில் ஆண் பூஜாரியாகவும் பெண் பூஜாரியாகவும் வேலை பார்க்கிறார்கள்; ஒரே நாளில் இறக்கிறார்கள்; அப்படியே அந்த கோயிலில் உள்ள ஒரு மரமாக இருவரும் ஆளுக்கு ஒரு கிளையாக விரிந்து பரந்து வளர்கிறார்கள்;
**






ஏரிஸ் கடவுள் (Ares)

ஏரிஸ் கடவுள் (Ares: E:ri:z:)
இவன் சண்டைக் கடவுள்; தலைக் கவசம் அணிந்திருப்பான்; ஒரு கையில் ஈட்டியும், மறு கையில் தடுப்புக் கவசமும் வைத்திருப்பான்; சண்டைக்குப் போவதுபோலவே இருப்பான்; ஆனால் இவன் பயந்தாங்கொள்ளி! ஒருநாளும் உண்மையில் சண்டை போட்டது கிடையாது; கிரேக்கர்கள் பொதுவாக சண்டையை விரும்ப மாட்டார்களாம்! அதனால், இவனை ஒரு கடவுளாகவே கிரேக்க மக்கள் நினைக்க மாட்டார்களாம்!

தலைமைக் கடவுளான ஜீயஸுக்கும் அவனின் ஒரு மனைவியான ஹெராவுக்கும் என்ற பெண் கடவுளுக்கும் பிறந்தவன்; பிறந்ததிலிருந்தே பெரிய சத்தம் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பான்; ஆனால் சண்டை போட மாட்டான்; பெரிய வீரனைப் போல பாசாங்கு செய்து கொள்வான்; அப்படி மிரட்டியே காரியம் சாதித்துக் கொள்வான்! ஆனால் இன்னொரு பெண் கடவுளான ஏதனா (Athena) உண்மையில் சண்டைக் கடவுள்; இவள் உண்மையில் பெரிய சண்டைக்காரி!

ஒருமுறை, அரக்கர்களுக்கும் கடவுளுக்கும் சண்டை ஏற்படுகிறது; அரக்கர்கள் இந்த உலகை ஆள வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; அதனால் கடவுள்களிடம் பெரிய போரை ஏற்படுத்துகிறார்கள்; முதலில் இந்த பயந்தாங்கொள்ளி ஏரிஸ் உடன் சண்டையிட்டு, அவனை வீழ்த்தி, அவனை ஒரு ஜாடிக்குள் போட்டு மூடி விடுகிறார்கள்; ஏரிஸ் கத்திக் கதறுகிறான்; தன்னை காப்பாற்றும்படி கூக்குரல் இடுகிறான்; ஆனால் மற்ற கடவுள்கள், இவனின் கூக்குரலை கண்டு கொள்வதாக இல்லை; இவன் வெளியே வந்து மட்டும் சண்டையிடவா போகிறான்; ஜாடிக்கு உள்ளேயே இருக்கக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள்; மற்ற கடவுள்கள் எல்லோரும் சேர்ந்து அரக்கர்களுடம் போர் புரிகிறார்கள்; அரக்கர்களை கொன்று வெற்றி பெறுகிறார்கள்; பின்னர், நிதானமாக வந்து, ஜாடிக்குள் இருக்கும் ஏரிஸை வெளியே விடுவிக்கிறார்கள்!  “ போருக்கு முன்னரே உன்னை விடுவித்திருந்தால், நீ எப்படி சண்டை போட்டிருப்பாய் என்று எங்களுக்குத் தெரியும்” என்று ஏளனமாக சிரித்து அவனை வெறுப்பேற்றுகிறார்கள் மற்ற கடவுள்கள்;

ஏரிஸின் இந்தக் குணத்தால், இவன் எப்போதும் ஒரு பக்கமாக இருக்க மாட்டான்; ஒரு கட்சியிலும் இருக்க மாட்டான்; யாருக்கும் நம்பிக்கையாகவும் இருக்க மாட்டான்; எங்காவது சண்டை, போர் நடந்தால் அங்கு சென்று, வேடிக்கை பார்ப்பான்! 

ஒருமுறை, கிரேக்க மக்களுக்கும் டிராய் நகர மக்களுக்கும் போர் ஏற்படுகிறது; அதில் கடவுள்களும் பங்கேற்றனர்; இந்த பயந்தாங்கொள்ளி சண்டைக்கடவுளான ஏரிஸ், தன் தாய்க்கு சத்தியம் செய்து கொடுக்கிறான்; “நான், கிரேக்கர்கள் பக்கமாக இருந்து மற்ற கடவுள்களுக்கு போரில் உதவியாக சண்டை செய்வேன்” என்று சத்தியம் செய்து தன் தாய் ஹெராவுக்கு கொடுக்கிறான்; ஆனால், இவன் அப்ரோடைட் என்ற பெண் கடவுள் மீது காதல் கொண்டுள்ளான்; அவளோ காதல் தேவதை என்னும் காதல் கடவுள் ஆவாள்; அவளோ, டிராய் மக்களான ட்ரோசான்கள் பக்கமாக சேரச் சொல்கிறாள் இந்த ஏரிஸை; இவன்தான் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சேருபவன் ஆயிற்றே!  எனவே அந்த சண்டையில் கடவுள்பக்கம் இவன் நிற்கவில்லை; இது ட்ரோசான்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது; ஆனால், டையோமெடஸ் (Diomedes) என்னும் கடவுளுடன் சண்டைக்குப் போகிறான்; அந்த டையோமடெஸ் பெரிய போர்வீரன்; இந்த ஏரிஸை ஒரே அடியாக அடித்து தூக்கி எறிகிறான்; பயந்து கொண்டு ஓடிப்போய், ஒலிம்பஸ் பின்னால் ஒழிந்து கொள்கிறான்; தன் தகப்பன் ஜீயஸ் கடவுளிடம் சென்று அழுகிறான்; அவரும் இவன் மீது இரக்கப்பட்டு இவனின் காயத்துக்கு கட்டுப் போடுகிறார்; இந்த மகனைப் பெற்றதற்காக பெருமை கொள்ளவில்லை அவனின் தகப்பன்;

கடவுளின் மகனாக இருந்துகொண்டு சண்டைக்குப் பயம்படுகிறான் இந்த ஏரிஸ்;

இப்படிப்பட்ட ஆட்கள் இப்போதும் இருக்கிறார்கள்!

**

ஹெர்மிஸ் கடவுளும், நாரதனும்

ஹெர்மிஸ் (Hermes: he:mi:z)
கிரேக்க இதிகாசத்தில் இந்த கடவுளுக்கு தூதுக் கடவுள் என்று பெயர் (Messenger God); கிரேக்க தலைமைக் கடவுளான ஜீயஸ் (Zeus: zju:s or zoos) கடவுளின் மகன்களில் ஒருவர்; ஜீயஸ்-க்கும் அவரின் ஒரு மனைவியான ‘மையா’ (Maia) என்ற பெண் கடவுளுக்கும் பிறந்தவனே இந்த ஹெர்மிஸ் கடவுள்;

இளமையான கடவுள் இந்த ஹெர்மிஸ்; புத்திசாலியும்கூட! பறக்கும் தொப்பி அணிந்திருப்பான்; கால்கள் இரண்டிலும் பறக்கும் செருப்பை அணிந்திருப்பான்; நினைத்த இடத்திற்கு நொடியில் பறந்து சென்று விடுவான்; இவன் புத்திசாலி என்பதால், புத்திசாலி திருடர்களின் கடவுள் என்றும் கூறுவர்; இவனே தலைமைத் திருடன் என்றும் சொல்வர்; இவன் பிறந்ததிலிருந்தே திருடும் பழக்கம் உள்ளவனாம்! இவன் குகையில் பிறந்தான்; இவன் பிறந்த சிறிது நேரத்திற்கெல்லாம், இவனே இவனுக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையைச் செய்து கொண்டானாம்! ஒரு ஆமையின் ஓட்டை எடுத்து, அதில் ஓட்டை போட்டு அதில் கம்பிகளைக் கட்டி, வீணை போன்ற ஒரு இசையை உருவாக்கி கொண்டானாம்! இசையை முதலில் கண்டுபிடித்தவனும் இவனே! பொதுவாக, தாய் தான், தன் குழந்தைக்கு பாட்டுப்பாடி தூங்க வைப்பாள்! ஆனால் இவனோ, இவன் உருவாக்கிய அந்த லைர் என்னும் இசைக் கருவியைக் கொண்டு, இசைத்து, அவனின் தாயைத் தூங்க வைப்பானாம்!

அவர் பிறந்த குகையை விட்டு வெளியே வந்து, உலகத்தை சுற்றிப் பார்க்க நினைக்கிறான்! இவனின் பறக்கும் திறமையைக் கொண்டு பறந்து இந்த உலகைச் சுற்றி வருகிறான்! அப்படி உலகைச் சுற்றச் செல்லும்போதெல்லாம், தாளாட்டுப்பாடி, அவனின் தாயைத் தூங்க வைத்துவிட்டு செல்வானாம்; திரும்பி வரும்வரை அவனின் தாய் தூங்கிக் கொண்டிருப்பாளாம்! இவன் வெளியே சென்று உலகைச் சுற்றி வந்தது, அவனின் தாய்க்கு தெரியவே தெரியாதாம்!

அப்போலோ கடவுள் பசுமாடுகள் வைத்திருந்தானாம்; இந்த மாடுகளைப் பார்த்தவுடன், இந்த ஹெர்மிஸ் அவைகளின் மீது ஆசை கொண்டு, அவைகளைத் திருடிக் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறான்; அந்த பசுக்களின் வால் பகுதியில் ஒரு பெரிய செடியை கட்டி விட்டானாம்; அந்த மாடுகள் நடந்து இவனுடன் வரும்போது, அந்த மாட்டின் கால்தடத்தை, அந்த செடி தரையில் புரண்டு வருவதால் அழித்து விடுமாம்! மாடு எந்தப் பக்கம் போனது என்று யாருக்கும் தெரியாதாம்! புத்திசாலி திருட்டுக் கடவுளின் யோசனை இது!

அப்போலோ கடவுளுக்கு இது தெரியாது; யார் நம் பசுக்களைத் திருடிச் சென்று என்று விசாரணை நடத்துகிறான்; அதில், ஒரு பாலகன் இந்த வேலையைச் செய்திருக்கிறான் என்று கண்டுபிடித்து விட்டான்! அவனைப் பிடித்து விசாரணை செய்கிறான்! ஹெர்மிஸ் சிறுவன் ஒரு இனிமையான பாடலை இசைத்துப் பாடுகிறான்; அதில், அப்போலோ கடவுள் மெய் மறக்கிறான்! அந்தப் பசுக்களுக்கு ஈடாக இந்த இசைக் கருவியை அப்போலோ கடவுள் வாங்கிக் கொள்கிறான்; அதிலிருந்து அந்த இசைக்கருவி அப்போலோவிடம் சேர்ந்து விட்டது;

இவன் விண்ணில் பறந்து செல்லும் திறமை இவனின் தகப்பனான ஜீயஸ் கடவுளுக்குத் தெரியவருகிறது; அவசரச் செய்திகளை மற்ற கடவுள்களுக்கு அனுப்புவதற்கு, தன் மகனான இந்த ஹெர்மிஸை உபயோகித்துக் கொள்கிறார் தலைமைக் கடவுள் ஜீயஸ்;

இவனிடம் மற்றொரு கெட்ட பழக்கமும் இருந்தது; அநியாயத்துக்கு மிக அதிகமாகப் பொய் பேசுவான்; இவனை நம்பி ஒரு விஷயத்தையும் சொல்ல முடியாது; அதை மாற்றி பொய் சேர்த்துச் சொல்லி விடுவான்; ஆனால், இவன் வேகமாகப் பறந்து போகும் திறமை வைத்திருப்பதால், இவனை விட்டால் வேறு ஆள் கிடையாது செய்து சொல்லி அனுப்ப; எனவே இவனின் தந்தை சொல்லிவிடும் செய்தியை, இவன் பாணியில் மாற்றிச் சொல்லி விடுவான்!

இவன் உலகம் சுற்றுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு இவனே கடவுள் ஆவான்; அதனால்தான், கிரேக்க நாடுகளில் உள்ள தெருக்களின் சாலை சந்திப்பில் இவனின் சிலையை வைத்திருப்பார்களாம்!

இவனை வைத்துத்தான் மரத்தான் உருவானதாம்; அந்தக் காலத்தில், ஒரு செய்தியை அனுப்ப ஒரு ஆளை நியமிப்பர்; அவன் ஓடி மற்றொரு நகருக்குச் செய்தியைத் தெரிவிப்பான்; அங்கிருப்பவன் ஓடி அடுத்து உள்ள நகருக்குச் செய்தியைத் தெரிவிப்பான்; அப்படி ஒரு மராத்தான் சண்டையில் வெற்றி பெற்றதை பெய்டிப்பிடிஸ் (Pheidippides) என்பவன் ஓடி செய்தி சொல்லி, மூர்ச்சை ஆகி இறந்தான்; அவன் நினைவாகத்தான் இப்போதும் மரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறதாம்;
இந்த ஹெர்மிஸ் பறப்பதற்காக ஒரு மேஜிக் கொம்பு வைத்திருந்தான்; அதன் பெயர் காடுசியஸ் (Caduceus); இதற்கு இறக்கைகள் உண்டு; அந்த கொம்பை ஒரு பாம்பு சுற்றிக் கொண்டிருக்கும்; இப்போது உள்ள மருத்துவர்களின் இலச்சினையாக (சிம்பலாக) இந்த காடுசியஸ் உள்ளது; இது ஒரு கொம்பில் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதுபோல செய்யப்பட்டிருக்கும்;

இது இந்திய இதிகாசத்தில், ஒரளவு நாரதனைக் குறிப்பதுபோல உள்ளது; அவனும் நினைத்த நேரத்தில் எந்தக் கடவுளையும் சென்று பார்ப்பான்; பொய் பேசுவான்; அல்லது உண்மையை மாற்றிப் பேசுவான்! கையில், இந்த ஹெர்மிஸ் வைத்திருப்பதைப் போன்ற ஒரு இசைக் கருவியும் வைத்திருப்பான்; இவனை கடவுள், தன் தூதுவனாகவே பயன்படுத்தி வந்தார் என்றே இந்திய இதிகாசங்கள் சொல்கிறது;
**


Keats மகாகவி கீட்ஸ்

Keats கீட்ஸ்

"Beauty is truth, truth beauty --that is all.
Ye know on earth, and all ye need to know." --(Keats)
'அழகுதான் உண்மை, உண்மை அழகு; இந்த உலகில் இதை நீ அறிவாய், நீங்கள் எல்லோரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்."
--இது மகாகவி கீட்ஸ்-ன் கவிதை வரிகள்.

இந்த வரிகளின் பொருள் இன்னும் சர்ச்சைக்குறியதாகவே இருந்துவருகிறது.
(Ode on a Grecian Urn - "கிரேக்க ஜாடி பற்றிய கவிதை" என்ற கவிதைத் தொகுப்பில் இந்த வரிகள் உள்ளன.) கவிஞர் கீட்ஸ் எழுதிய வரிகள்; இதை அவர் 1819ல் எழுதினார். அப்போது அந்த இளம் கவிஞன் கீட்ஸ்-க்கு 19 வயதுதான்.
 இந்த இளம் கன்றுக் கவிஞன்தான் ஐரோப்பிய கவிஞர்களிலிலேயே முதன்மை கவிஞன். மற்ற கவிகள் இவனுக்கு அடுத்துத்தான் என்று ஆங்கிலேய உலகம் அடித்துச் சொல்கிறது.
உலகில் உள்ள எல்லாக் கவிஞனைப் போலவே இவனும், பிறப்பிலோ, படிப்பிலோ, பணத்திலோ ஏழ்மையாகவே இருந்திருக்கிறான். இளம் வயதிலேயே தந்தை, தாயை இழந்துவிட்டவன். (He had no advantages of birth, wealth or education; he lost his parents in childhood.) ஒரு சகோதரனை காசநோயில் பறிகொடுத்து விட்டான். மற்றவன் அமெரிக்கா சென்று விட்டான். வறுமை இவனை விரட்டிக் கொண்டே வந்தது. வறுமையாலேயே, அவன் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடியாமலேயே போய்விட்டதாம். இவனும் இவனின் தாயைப்போல, சகோரதரனைப் போல, அதே காசநோயால் 25 வயதில் இந்த உலகை விட்டுவிட்டுச் சென்றவன். இவன் 19 வயதிலிருந்து 25 வயதுவரை எழுதிய கவிதைகள் உலகப் புகழ்பெற்றவைகள்.

"A thing of beauty is a joy forever:
Its loveliness increases;
It will never pass into nothingness."
"My imagination is a monastery and I am its monk."
"Nothing ever becomes real till it is experienced."


இந்தக் கவிஞனின் நோயின் பாதிப்பு அதிகமாகி, லண்டனை விட்டு ரோமுக்கு சென்று அங்கு மரணத்தை தழுவியவன்.

இவன் இறப்பு உறுதி என்று தெரிந்தபின், தன் நண்பனிடன் "நான் இறந்த பின், என் கல்லறையில் என் பெயரையோ, இறந்த தேதியையோ எழுதி வைக்க வேண்டாம்; அதற்குப் பதிலாக கீழ்கண்ட இந்த வாசகத்தை மட்டும் எழுதிவிடு' என்று கேட்டுக் கொண்டானாம்.

"Here lies One whose Name was written in Water."
"இங்கு ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்; அவனின் பெயர் தண்ணீரில் எழுதப்பட்டிருக்கிறது."

இறப்புக்குப்பின் புகழின் உச்சிக்கு சென்ற கவிஞன்.
**

Monday, November 14, 2016

இருது சங்கார காவியம்:

இருது சங்கார காவியம்:
இருது சங்கார காவியம் என்பது வடமொழியில் காளிதாச மகாகவி இயற்றிய “இருது ஸம்ஹார” என்னும் சிறு காப்பியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த நூலாகும்; இருது ஸம்ஹார என்பது இருதுகளின் கூட்டம் என்று பொருள்படும்; இருது = பருவகாலம் (Season), ஸம்ஹார = கூட்டம்; ஸம்ஹார என்பது வடமொழி; இதைத் தமிழில் சங்காரம் என்று கூறலாம்; சங்காரம் என்னும் சொல் அழித்தல் என்னும் பொருளில் பெருமளவில் வழங்கப்படுகிறது; இங்கு கூட்டம், சமூகம் என்பதே பொருந்தும்; எனவே இருது சங்காரம் என்பது ஆறு பருங்களின் வர்ணனைகளும் ஒருங்கே அமைந்த நூல் எனப் பொருள்படும்; ஆறு இருதுகள்: இளவேனில் (வசந்த இருது, சித்திரை, வைகாசி), முதுவேனில் (கிரீஷ்ம இருது, ஆனி, ஆடி), கார் (வர்ஷ இருது, ஆவணி, புரட்டாசி), கூதிர் (சரத் இருது, மார்கழி, தை), பின்பனி (சிசிர இருது, மாசி, பங்குனி) என்பனவாகும்; இந்த ஆறு இருதுகளையும் கவி வர்ணித்திருக்கின்றார்; மகாகவி, கிரீஷ்ம இருதுவை முதலாகக் கொண்டு அவற்றை வருணனை செய்துள்ளார்;

இருது சங்காரம், காளிதாச கவி இளமையில் இயற்றிய காப்பியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்; காளிதாசன் இயற்றிய ஏனைய தலைசிறந்த காப்பியங்களாகிய  இரகுவம்சம், குமாரசம்பவம், சாகுந்தலம், மேகதூதம், என்பனவற்றில் காணப்படும் கற்பனைத் திறமும் சொல்லாட்சியும் பொருள் செறிவும் போன்ற கவிதைப் பண்புகள் இந்த நூலில் இல்லை என்பதே ஆதாரம் என்கின்றனர்;

காளிதாசன் இந்த நூலில் இயற்கை வர்ணனையோடு மக்களின் இதயத்து இயல்பாய் எழும் உணர்ச்சித் திறங்களையும் இயைபு பெற வருணனை செய்கின்றார்; இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து இயற்கை அழகைப் பருகித் திளைத்த இன்பம் இதயத்தில் கவிதையாகச் சுரந்து பெருகி உலகினரை இன்புறுத்தும் ஒப்பற்ற கலைப்பண்பு வாய்ந்தவர் காளிதாசன் என்னும் மகாகவி; இயற்கை ரகசியங்களை நுனித்து நோக்கும் ஆற்றலிலும் அதனை வளம்பெறப் பாடும் புலமையிலும் தலைசிறந்தவன் மகாகவி; இயற்கைத் தோற்றங்களை அப்படியே தத்ரூபமான சொல் ஓவியங்களாய்ச் சித்தரித்துக் காட்டுதலும், இயற்கை நிகழ்ச்சிகளால் மக்கள் உள்ளத்தில் விளையும் உணர்ச்சி வேகங்களை அவற்றோடு தொடர்புபடுத்தி அகப்பொருள் குறிப்புத் தோன்றக் கவிதை புனைதலுமே காளிதாசர் போன்ற பெரும் புலவர்களின் தனிப் பண்பாகும்; ஆகவே, மக்கள் வாழ்க்கையோடு மிக நெருங்கிய தொடர்புபெற ஆக்கிய கவிதைகளே அமரத்துவம் பெறுவன என்பது வால்மீகி, காளிதாசர், திருவள்ளுவர், கம்பர் முதலிய அமரகவிகள் வாயிலா நாம் அறிய முடியும்;

ஒவ்வொரு பருவ காலத்திலும் இயற்கையன்னை அளிக்கும் காட்சிகளை வருணனை செய்தவற்கென்றே இலக்கிய உலகில் முதன்முதல் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர்) எழுதப்பட்ட காவியம் இந்த இருது சங்காரமே எனலாம்; வடமொழிப் புலவர்கள் இயற்கை வருணனை பாடுங்கால் இருதுகளை ஆதாரமாகக் கொண்டு ஆறாக வகுத்து செய்யுள் செய்தவர்; தமிழ்ப் புலவர்கள், திணையை ஆதாரமாகக் கொண்டு ஐந்தாக வகுத்து செய்யுள் செய்வர்; இதுவே வேறுபாடு; அகம் என்பது சிருங்காரம் என்னும் காமச்சுவையாகும்; தமிழ்ப் புலவர்கள், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்று ஐந்தாக வகுப்பர்; வடமொழிப் புலவர்கள், கூடுதல் (புணர்தல்), கூட்டம் பெறாமை என இரண்டாக வகுத்து, கூட்டம் பெறாமையுள், பிரிதல் முதலிய ஏனைய நான்கையும் அடக்குவர்; கூட்டம் பெறாமை என்பது பூர்வராகம், மானம், பிரவாகம், கருணம் என நான்கு வகைபடும் என்பர்; பூர்வாகம் என்பது தமிழில் கைக்கிளைத் தினை போன்றது; மானம் என்பது ஊடலையும், பிரவாகம் என்பது பிரிதலையும், இருத்தலையும், கருணம் என்பது இரங்கலையும் குறிப்பனவாம்;

இந்த நூலில் முதுவேனில் பருவ வருணனையை நோக்கினால், “சூரியன் மிக உக்கிரமாக எரித்தாலும், இரவு நிலாப் பொருந்திக் குளிர்ந்து இனித்தாலும், ஆடவரும் பெண்களும் வெம்மை தீரப் பலகால் பூஞ்சனையாடலும், காமவின்பம் கைம்மிகாது கட்டுப்படுதலும், செயற்கை நீர் அருவிகளும் பனிநீரும் சந்தனமும் நிலா முற்றமும் முத்துமாலையும் யாமத்து வீணை இன்னிசையையும் சங்கீதமும் என்பது இளம் காதலர்களுக்குத் தாபத்தைக் குறைத்து இன்பம் செய்தலும்; மகளிர் மென்பட்டாடை அணிதலும், விலங்கும் பறவையும் வெய்யிலின் வெப்பத்தினால் குளம் குட்டைகள் எல்லாம் நீர் வற்றிப் போக, விலங்கினம் மெலிந்து நீர்தேடி அலைதலையும்; காடெங்கும் காட்டுத்தீ  சுவாலை விட்டுப் பரவி மரம் செடி கொடிகளை எரித்தலும்; வெஞ்சுரத்துச் சென்றவன் பிரிவுத் துயராலும் வெப்பத்தாலும் தாபமுறுதலும்; இல்லத்தைப் பிரிந்து வழிசென்றோர் மாலை காலத்தையும் இளமங்கையரைக் கண்டு விரக முறதலும்; இளநங்கையர் பூந்தண் சுனையாடியும் வேனிலில் பூக்கும் பாதிரி மலர் மாலை அணிந்தும் இரவில் நிலா முற்றத்தில் இருந்து கீதவாத்திய கானம் செய்தும், வேனில் வெம்மையைப் போக்கி இன்புறுதலும் என்னும் பல செய்திகளை கவியாக வர்ணித்திருக்கிறார்;

தொல்காப்பியத்தில், “காலையும், மாலையும் நண்பகலன்ன கடுமை கூர, சோலை தேம்பி, கூவல் மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம்பயன் துறந்து, புள்ளும், மாவும், புலம்புற்று, இன்பமின்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின், இன்பத்திற்கு இடையூராகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலும் சிறப்புடையதாயிற்று” என்கிறது;
மகாகவி, இருது சங்காரத்தில் ஆறு பருவங்களின் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு காதலன், தன் காதலியை விளித்துச் சொல்வதாக அமைத்துள்ளார்; ஒவ்வொரு சருக்கமும் அதில் வருணனை செய்யப்பட்ட இருது காதலிக்கு எல்லா நலன்களையும் நல்குக என வாழ்த்தும் ஒரு வாழ்த்துச் செய்யுளைக் கொண்டு முடியும்;

காளிதாசன், உவமை நலங்களையும், அரிய கற்பனைகளும், உருவகங்களும், தன்மை நவிற்சியும் என்னும் அழகுகள் பொலிந்து விளங்கி உள்ளார்;
(இருது சங்கார காவியம் என்னும் நூலில் யாழ்ப்பாணம் தி.சதாசிவ ஐயர் எழுதிய முன்னுரை இது: 1950ல் பதிப்பிக்கப்பட்ட நூல் இது)

**

Friday, November 11, 2016

மகரயாழ்

மகரம் (Delphinus):
வான மண்டலத்தில் பூமிக்கு வடதுருவத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டத்துக்கு மகரக் கூட்டம் என்று பெயர்; இதை கிரேக்க இதிகாசத்தில் Delphinus (டெல்பினஸ்) என்கிறார்கள்; அதன் பெயர் Dolphin டால்பின்; இந்திய ஜோதிட விஞ்ஞானத்தில் இதை மகரயாழ் என்கிறார்கள்; இது கடலில் வாழும் டால்பின் மீன்தான்; இதை மீன் என்றும் சொல்ல முடியாது; இது பாலூட்டி வகையைச் சேர்ந்தது; மனிதனுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்; ஏன், கடவுளுக்குக்கூட உதவி செய்தாக கிரேக்க புராண வரலாறு உண்டு;

கிரேக்க புராணம்:
குரோனஸ் (Cronus) தான் ஆதி கடவுள்; இவரின் மூன்று மகன்கள்; இவர்கள் Zeus, Poseidon, and Hades (ஜீயஸ், பொசிடான், ஹாடஸ்);  இந்த சகோதரர்கள் மூவரும் இந்தப் பிரபஞ்சத்தை பாகப் பிரிவினை செய்து கொள்கிறார்கள்; அதில், இந்த பிரபஞ்சத்தை மூன்றாகப் பிரித்து, அதில், ஜீயஸ் ஆகாயத்தையும் (Sky), பொசிடான் கடல் எல்லையையும் (Sea), ஹாடஸ் பாதாள உலகத்தையும் (Underworld) பிரித்துக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள்;

பொசிடானுக்கு கடல் கிடைக்கிறது; கடலுக்கு அடியில் மிகப் பிரமாண்டமான அரண்மனை மாளிகையை கட்டிக் கொள்கிறான் பொசிடான் கடவுள்; எல்லாம் இருந்தாலும் ஒரு மனைவி இல்லாதது வெறுமையாகத் தெரிகிறது; மனைவியை தேடித் திரிகிறான்; ஆம்பிடிரைட் (Amphitrite) என்னும் ஒரு அழகியைச் சந்திக்கிறான்; அவள் ஒரு தேவதை (nymph) நிம்ப்; அவளையே தனக்கு மனைவி ஆகும்படி கேட்கிறான்; ஆனால் அவள், அவனை விரும்பாததால், மற்ற தேவதைகளிடம் ஓடி ஒளிந்து கொள்கிறாள்; எத்தனையே தூதுகளை அனுப்பிப் பார்க்கிறான் பொசிடான் கடவுள்; பலிப்பதாக இல்லை; அவனும் விடுவதாக இல்லை; அவளைத் தேடித் திரிகிறான்; டால்பினைத் தூது அனுப்புகிறான்; அது அவளிடம் சென்று, அன்பாகப் பேசி அவள் மனதைக் கசிய வைத்து, கூட்டிக் கொண்டு வருகிறது; பொசிடானுக்கு மகிழ்ச்சி; அவளைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறான்; டான்பின் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக, அதற்கு ஆகாய மண்டலத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி நட்சத்திரமாக ஜொலிக்க வைக்கிறான்; இப்படித்தான் டால்பின் “மகரக் கூட்டமாக” வானில் ஜொலிக்கிறது;

கிரேக்கி இதிகாசத்தில் இன்னொரு கதையும் உண்டு:
அரியான் (Arion) என்ற மகாகவி வாழ்கிறார்; அவர் ஒருமுறை கப்பலில் கிரீஸ் நாட்டுக்கு வருகிறார்; இத்தாலியில் சிலர் இவர்மீது பொறாமை கொண்டு அவரைக் கொல்ல நினைக்கிறார்கள்; அவர் பாடல்களில் சேர்த்த பணத்தை களவாடி விடுகின்றனர்; கப்பலிலேயே அவரை கொல்வதற்கு கூட்டமாக வாள்களுடன் கூடி அவரைப் பிடித்துக் கொண்டனர்; அவர், “கடைசியாக ஒரு பாடல் பாடிக் கொள்ள அனுமதியுங்கள்” என்று கெஞ்சுகிறார்; சரி பாடிக் கொள்ளுங்கள் என்கின்றனர்; இவர், மிகச் சோகமான பாடல் ஒன்றைப் பாடுகிறார்; அது, இறந்தவர்களை நினைத்துப் பாடும் துக்கப் பாடல்; அந்த சோகப் பாடலைக் கேட்ட டால்பின் மீன்கள் அந்த கப்பலைச் சுற்றி கூடவே வருகின்றன; பாட்டு முடிந்தவுடன் கடவுளை நினைத்துக் கொண்டு அரியான் கவிஞர் கடலுக்குள் குதிக்கிறார்; அவர் குதித்தவுடன், டால்பின் மீன்கள் அவரைக் காப்பாற்றி தன் உடலில் சுமந்து கொண்டு கரை சேர்ந்து அவரை காப்பாற்றி விடுகின்றன; இசைக்கு கடவுள் அப்போலோ (Apollo); தனக்காக தன் கவிஞரைக் காப்பாற்றிய டால்பின் மீன்களை, அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்தப் பிரபஞ்சத்தில் வான மண்டலத்தில் அவைகளுக்கு ஒரு இடத்தைக் கொடுத்து சிறப்பிக்கிறான் அப்போலோ கடவுள்;

இந்த டால்பினைத்தான், இந்திய வானவியல் சாஸ்திரம் மகரயாழ் என்று பெயரிட்டுள்ளது;

**