Saturday, October 4, 2014

ஸம அஹம் ஸர்வ (சர்வமும் சமமே)

ஸம அஹம் ஸர்வ பூதேஷூ
(நான் எல்லோருக்கும் நடுநிலையானவன்தான்) ---- ஸ்ரீகிருஷ்ணன்

ஸமோ ஹம் ஸர்வபூதேஷூ ந மே த்வேஷ்யோ ஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி தூ மாம் பக்த்யா மயி தே தேஷூ சாப்யஹம்:

நான் யாரிடமும் பொறாமை கொள்வதும் இல்லை;
நான் யாரிடமும் பாரபட்சம் காட்டுவதும் இல்லை;
நான் எல்லோரிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன்;
ஆனாலும், அன்புத் தொண்டுபுரிபவன் யாராக இருந்தாலும் எனது நண்பனே! 
அவன் என்னில் இருக்கிறான்.
ஆதலால், நான் அவனுக்குப் பிரியமானவனாக இருக்கிறேன்.

(ஸம அஹம் ஸர்வ பூதேஷூ = எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கிறேன்)
(மே த்வேஷ்ய அஸ்தி ந = எனக்கு துவேஷம் என்ற வெறுப்பு இல்லை).
(ப்ரிய பஜந்தி து மாம் பக்த்யா மயி = என் பிரிய நண்பர்கள் என்னில் பக்தியுடன் இருக்கின்றனர்)
(தே தேஷூ ச அபி அஹம் = அவர்களில் கூட நானும் நிச்சயமாக இருக்கிறேன்).


No comments:

Post a Comment