Friday, October 3, 2014

அந்தப் பழமொழி நாய்க்குத் தெரியாதாம்!

அந்தப் பழமொழி நாய்க்குத் தெரியாதாம்:

நம்ம ஊர் நீதிபதி, பிரிட்டீஸ் நீதிபதியை அவரின் வீட்டில் சென்னையில் பார்க்கச் சென்றாராம். (அந்தக்காலத்தில்).

இருவரும் வெகுநேரம் பேசிவிட்டு, நம்மூர் நீதிபதி கிளம்புகிறார். அவர் பஞ்சகச்ச வேஷ்டி கட்டி இருக்கிறார். மேல்கோர்ட்டு வேறு. பிரிட்டீஸ் நீதிபதியின் நாய்க்கு வேஷ்டியைப் பிடிக்கவில்லையோ அல்லது அவரைப் பிடிக்கவில்லையோ தெரியவில்லை. குரைக்க ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட கடிக்கவரும் நிலை. நம்மூர் நீதிபதி பயந்து கத்திவிட்டார். 

நண்பரே! உமது நாயைப் பிடியும். என்னைக் கடிக்கவருகிறது. சீக்கிரம் வாரும்! கூக்குரல். ஆனால், பிரிட்டீஸ் நீதிபதி நிதானமாக, “அவன் கடிக்க மாட்டான் நண்பரே! மிக நல்லவன். உமக்குத் தெரியாதா, ‘குரைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழியை’ என்று நிதானமாக கூறினார்.

இவருக்கோ மரணபயம். கோபம் வேறு. “இந்தப் பழமொழி உமக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்; ஆனால் அந்த நாய்க்கு இந்தப் பழமொழி தெரியாதே!” சீக்கிரம் வந்து உமது நாயை பிடியும் என்று கெஞ்சினார்.






No comments:

Post a Comment