Monday, October 6, 2014

நினைவுகள்-42

இராமன் இராவணனைக் கொன்று சீதையைச் சிறைமீட்டபோது, இராமனுக்கு வயது 40.

ஒரு மனிதனுக்கு வாழ்வில் இனிப்பான காலங்களே இந்த 40 வயதுக்குள்தான். ஆனால், 26 வயதில் காட்டுக்குப் போய் மனைவியைப் பறிகொடுத்து, அவளைத் தேடித்திரிந்து, 40 வயதில் மீட்கிறார் இராமர். வாழ்வின் ஒரு சுகத்தையும் காணாத ஒரு வாழ்க்கை.

இராமனை நாம் பெருமையாகப் பார்த்தாலும், அவரைப் பொறுத்தவரை அந்தப் பிறவியில் அவருக்கு ஒரு பிரயோசனமும் இருந்திருக்காதுதான்.
ஏதாவது சாபக்கேடாக இருந்திருக்குமா? ஆமாம்.

முன்காலத்தில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கிறது. அந்த யுத்தத்திலே, பிருகு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்றுவிடுகிறார். இதனால் மிகக் கோபமடைந்த பிருகு முனிவர் விஷ்ணுவை சபிக்கிறார். "நீ, அடுத்து மனிதனாகப் பூமியிலே பிறந்து, உன் பத்தினியை பறிகொடுத்து, தவித்துத் திரியவேண்டும்" இது சாபம்.

மனித உலகில் நடக்கும் எந்தச் செயலும் நாம் நடத்தி வைப்பதில்லை. எல்லாம் ஏற்கனவே இயற்றப்பட்ட இயல்பின்படியே (already programmed) இயங்குகிறதாம்.

இதில் நம் பங்கு என்று ஏதும் இல்லை. ஒவ்வொருவரும் ஒரு வேலையை செய்து முடிக்கும் ஆட்கள். அவ்வளவே! எனவே சாதனைகள் நமதல்ல. ஏற்கனவே இறைவன் நமக்கு ஏற்படுத்தி வைத்த வேலை, அவ்வளவே!

விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஏழாவது அவதாரம்தான் இந்த இராம அவதாரம். ரகுகுலத்தில் பிறந்ததால் இவருக்கு இராகவன் என்றும் பெயர்.

இவரின் கதையை முதலில் சொன்னவர் வால்மீகி; அடுத்துச் சொன்னவர் வசிஷ்டர்; பின்னர் சொன்னவர் போதாயனர்;

தமிழில் மிக அழகாக வர்ணித்தவர் கம்பர்; இவர் பெரும்பாலும் வால்மீகியின் கதையையே மொழிபெயர்த்தார். அவ்வாறு மொழிபெயர்த்தாலும், கவி நயம் முழுக்க கம்பனுடையதுதான் இதன் சிறப்பு.



No comments:

Post a Comment