Tuesday, October 14, 2014

ஊர்வசி


ஊர்வசியின் கணவர் புரூரவன்.
இவன் தகப்பனார் பெயர் புதன்.
இவனின் தாய் பெயர் இளை.
(வைவசுவத மனுவின் மகள்தான் இந்த இளை).

புரூவரன் மிகப் பெரிய சக்கரவர்த்தி. பிரசித்தி பெற்றவன். இவன் தானம் செய்வதிலும், தெய்வ வழிபாட்டிலும் மிகச் சிறந்து விளங்கியவன்.

இவன் ஒருநாள் ஊர்வசியைப் பார்த்து விட்டான். அவளின் அழகில் மயங்கி, அவளை தனக்கு மனைவியாகும்படி கேட்கிறான்.

அழகிகள் எப்போதும் திருமணத்துக்கு நிபந்தனை விதிப்பது இயல்பு. அதன்படி அவளும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள்.

"நான் உமக்கு மனைவி ஆக வேண்டும் என்றால், நீர் எப்போதும் என்னைவிட்டு பிரியாமல் என்னுடனேயே இருக்க வேண்டும்." என்ற நிபந்தனையை விதிக்கிறாள். அதற்கு மன்னனும் ஒப்புக்கொண்டு அவளை மனைவியாக்கி வெகுகாலம் வாழ்ந்திருக்கிறான்.

நாராயணன் தன் தொடையிலிருந்து இந்த ஊர்வசியை உருவாக்குகிறார். தவத்தை கெடுக்க வந்த தேவபெண்களின் அழகைக் குறைத்து அவர்களை ஒடவைக்க நினைத்தவர், அவர்களைக் காட்டிலும் அழகான பெண்ணாக ஊர்வசியை உருவாக்கினார். தொடையிலிருந்து வந்ததால் ஊர்வசி என்று பெயராம்.




No comments:

Post a Comment