ஊர்களின்
தமிழ்ப் பெயர்கள்:
ஊர் என்பதன் மற்ற தமிழ்ப் பெயர்கள் =
பாக்கம், இருக்கை, பாழி, பட்டினம், பள்ளி,
முட்டம், பூக்கம், சம்வாகம்,
நொச்சி, பூரியம், பாடி,
பூண்டி, கோட்டம், வாழ்க்கை,
மடப்பம், குடி, குடிக்காடு,
குறிஞ்சி, குப்பம், அருப்பம்,
நத்தம், சும்மை, அகரம்,
புரம், சேரி, அகலுள்,
வைப்பு, உறையுள், வேலி,
நகரம், பக்கணம் (பத்தணம்), கிராமம், கருவடம், குறும்பு,
வேசனம், தாமம், நிவேசனம்,
பதி, பேடு, புரி.
நீரும் வயலும் உள்ள ஊர் = கிராமம்.
சிறு கிராமம் = நூறு குடிகள்
நிறைந்தவூர்.
பெருங்கிராமம் = ஐந்நூறு
குடிநிறைந்தவூர்.
இராசதானி = புரம், புரி,
நகரம்.
மலை செறிந்தவூர் = கேடம்.
மலையும் ஆறும் சூழ்ந்தவூர் = கருவடம்.
ஐஞ்ஞூறு (ஐநூறு) கிராமத்தின் தலைமை
கிராமம் = மடப்பம்.
பலபல தீவிற்பண்டம் விற்கும் ஊர் =
பட்டணம்.
நெல்லும் புல்லும் நிறைந்த மலை ஊர் =
சம்வாகம்.
கழியிருக்கை = தோணாமுகம்.
சிற்றூர் = பட்டு, நொச்சி,
பள்ளி.
குறிஞ்சி நில ஊர் = குறிச்சி, சிற்றூர்,
சீறூர்.
முல்லை நில ஊர் = பாடி.
நெய்தல் நில ஊர் = பட்டினம்.
பாலை நில ஊர் = குறும்பு.
மருத நில ஊர் = புரி, குடம்,
நகரம், பூக்கம், புரம்,
குடி, நிகாயம், பள்ளி,
சரணம், ஆவாசம், பாக்கம்,
தாவளம், நிகமம், தாமம்,
நிலயம், கோட்டம், பதி, வாழ்க்கை, சேர்வு, பாழி, வசதி.
No comments:
Post a Comment