“பொன் கிடைத்தாலும் புதன்
கிடைக்காதுதான்”
புதனின் தந்தை சந்திரன்.
புதனின் தாய் தாரை.
ஆனால் கவிஞர்கள் எல்லாம் சந்திரனைப்
பெண்ணாக வர்ணித்தனர்.
ஆனால் உண்மையில் சந்திரன் ஆண்தான்
போலும்.
சூரியனும் ஆண்தான்.
சூரியனின் மகன் சனி.
ஒன்பது கிரகமுமே
சொந்தக்காரர்களாகத்தான் இருப்பார்கள் போல!
சந்திரனின் மகன்தான் புதன்.
புதன் என்றால் Mercury.
சூரியனுக்கு மிக அருகில் புதன்
இருக்குமாம். நாலரைக் கோடி கி.மீ.
புதன்தான் எல்லாக் கிரகத்தைக்
காட்டிலும் மிகச் சிறிய கிரகமும்.
ஆனால் சந்திரனைவிட ஒன்னறை மடங்கு
பெரியது.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.
இதற்கு 24 மணி ஆகிறது. எனவே ஒரேநாளில்
பகல் இரவைப் பார்த்துவிடும்.
ஆனால், புதன், சூரியனைச்
சுற்றுவதற்கு 88 நாள்கள் தேவைப்படுகிறதென நினைத்திருந்தார்கள். ஆனால் 58
நாட்கள்தான் ஆகிதென்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். பகல் இரவு 58 நாளுக்கு
ஒருமுறைதான். 58 நாட்கள் புதனின் ஒருபக்கம் இருட்டாகவே இருக்கும்.
சூரியனுக்கு அருகில் இருப்பதால், சூரியனின்
வெளிச்சம் படும்பகுதி 400 டிகிரி சூடாக இருக்கும். புதனின் மறுபக்கம் இருட்டுப்
பகுதி கடும் குளிராக இருக்கும். அதனால், இங்கு எந்த
உயிரினமும் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறார்கள்.
சந்திரனின் மகன்தான் புதன் என்று
சொன்னதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனாலும், சந்திரனைப் போலவே,
புதனிலும் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை காட்சிகள் பார்க்கலாமாம். அதனால்,
தந்தையைப் போல பிள்ளை என்று நினைத்துச் சொல்லி இருப்பார்களோ?
Mercury-மெர்குரி (புதன்) என்றால்
Merchant மெர்சண்ட் (வியாபாரம்) என்று பொருள். அதனால் புதன் பணத்துக்கும்,
வியாபாரத்துக்கும், உரிய தெய்வம். அதனால்தானோ என்னவோ
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று சொல்லி முக்கிய வியாபாரத்தை
ஆரம்பிக்கிறார்கள்.
ரோமன் மித்தாலஜிப்படி, (இதிகாசப்படி)
புதன் என்பவன் வியாழனின் மகன்.
எல்லாக் கடவுளுக்கும் அரசன் ஜூப்பிடர்
(Jupiter). இவர்தான் குரு, வியாழன்.
ஜூப்பிடர் என்னும் வியாழனின் இளைய
மகன்தான் இந்த மெர்குரி என்னும் புதன்.
மெர்குரி என்னும் புதனின் தாயார் பெயர்
மெய்யா.
இந்த மெய்யா தான் அட்லஸின் மகள்.
புதன் நிறைய திறமை உடையவர். வேகமாகப்
பறப்பார். மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்.
சமாதான முடிவை எடுப்பவர். பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பவர். அதனால்தான், எந்தப்
பெரிய பிரச்சனையானாலும், குரு என்னும் வியாழன் எப்போதும் தன் இளைய மகனான புதனையே
அனுப்பி வைப்பாராம்.
No comments:
Post a Comment