பூனையின்
கின்னஸ் ரெக்கார்டு
பூனையின்
வயது 30ஐ தாண்டி விட்டது ஒரு கின்னஸ் சாதனையாம்! இன்று உலகில் மிக மூத்த பூனை இதுதானாம்!
இது பிறந்த தேதி மார்ச் 26, 1986. பிறந்ததிலிருந்தே அதன் பாதுகாவலரான Gail Floyd அவர்களிடம் வசித்து வருகிறதாம். இந்த பூனையை பூனை என்று சொல்லக்கூடாது என
அதற்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார். அந்த பூனையின் பெயர் ஸ்கூட்டர் Scooter. இந்த ஸ்கூட்டர் (பூனை) இதுவரை அமெரிக்காவின் மொத்த மாநிலங்களான 50
மாநிலங்களையுமே தன் ஓனருடன் பயணம் செய்து பார்த்து விட்டதாம். இன்னும் வேறு
நாடுகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதாம்.
அதே
நேரத்தில், ..... உலகில் மூத்த பெண்மணியான 116 வயது பெண்மணியான அமெரிக்காவின்
அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த சூசன்னா ஜோன்ஸ் இப்போதுதான் இறந்திருக்கிறார்.
இவருக்கு முன்னர், ஏப்ரல் 2015ல் ஜப்பானில் வாழ்ந்த 117 வயது பெண்மணியான மிசாவோ
ஒக்காவா என்பவர் டோக்கியோவில் வாழ்ந்தவர் கின்னஸ் ரெக்கார்டு செய்தவர்.
பெண்கள்தான்
அதிக வயதுவரை உயிருடன் இருந்திருக்கிறார்கள்.
**
No comments:
Post a Comment