குழந்தையின்மை
என்பது மிகுந்த வருத்தம் அளிக்கும் வாழ்க்கையே! மானிடப் பிறப்பு எடுப்பதே, தன்
வாரிசுகளை உருவாக்கி விட்டுச் செல்வதே என்றும், மனிதச் சங்கிலி அறுந்துவிடாமல்
இருக்க வாரிசுகள் தேவை என மனிதன்
நினைக்கிறான்.
மனுஸ்மிருதியிலும்,
ஒருவன் தன் வாரிசை உருவாக்கிவிட்டால்தான், அவன் இறந்த பிறகு மோட்சம் செல்ல
முடியும் என்றும், அவ்வாறு இறந்தவன் மோட்சம் செல்வதற்கு, அவன் வாரிசு பிண்டம்
அளிக்க வேண்டும் என்றும் ஒரு கோட்பாடு காலம் காலமாகி இங்கு நிலவி வருகிறது>
குழந்தை
இல்லாதவர் நிலையோ, வாழ்வு முழுமையடையாமல் போய்விடுமோ என்று நினைக்க வைக்கிறது.
மருத்துவ முன்னேறங்கள் வந்திருந்தாலும், அது ஓரளவே குழந்தை பிறப்பை
அதிகப்படுத்துகிறது. மருத்துவ சிகிச்சையை மீறியும் குழந்தையின்மை இருப்பதும்
ஆச்சரியமில்லைதான்.
ஆனால்,
அதற்கு ஆணின் விந்து தேவையில்லையாம்! மனிதனின் தோலில் இருந்து எடுக்கும் செல்
மூலம் கருவை உருவாக்க முடியும் என்ற ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளனவாம்!
உலகிலுள்ள
15% மக்கள் குழந்தை இல்லாமல் இருக்கின்றனராம்! இனி அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி இந்தச் சாதனையை எலிகளைக் கொண்டு செய்த சோதனையில் வெற்றி
கண்டுள்ளார். இவரை ஊக்குவித்தது, ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற இரு விஞ்ஞானிகளின்
கண்டுபிடிப்பான, வளர்ந்த செல்களை மறுபடியும் கருச் செல்களாக மாற்ற முடியும் என்று
கண்டுபிடித்துள்ளனர். (இந்த இரண்டு விஞ்ஞானிகள்
- பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கார்டன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா
யாமனகா).
**
Vanakkam thalava.seen it now only
ReplyDelete