ஜான்சன்
& ஜான்சன் கம்பெனி பவுடர் வியாபாரம் செய்கிறது. இது, பவுடர் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களை
போதுமான அளவு தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்யவில்லையாம்.
அந்த
பவுடரை வாங்கி உபயோகப்படுத்திய ஒரு பெண்மணிக்கு கர்ப்ப பை கேன்சர் வந்துவிட்டதாம்.
எனவே கோர்ட்டில் வழக்கு போட்டார். அந்த பவுடர் கம்பெனி, அந்த பெண்மணிக்கு $55 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறி
உள்ளது.
இந்த
கம்பெனி மேலும் 1200 வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறதாம். அதில் இந்த
தீர்ப்பு அந்த கம்பெனிக்கு பெருத்த அடியாம்! இந்த தீர்ப்பை எதிர்த்து பவுடர்
கம்பெனி அப்பீல் செய்யப் போகிறதாம். எங்க பவுடர் நல்ல பவுடர்தான்! சுகாதாரமானது!
30 வருட பாரம்பரியமிக்கது என்று பவுடர் கம்பெனி சொல்கிறது. ஆனால் அந்த பெண்மணி,
அந்த பவுடரை தன் அந்தரங்க பாகங்களில் பூசிக் கொண்டதால்தான் கர்ப்ப பை கேன்சர் வந்தது
என்று அவர் வக்கீல் மூலம் வாதம் செய்திருக்கிறார்.
**
No comments:
Post a Comment