உலகமே
வாட்ஸ்அப்-புக்குள் மூழ்கி உள்ளது.
எதற்கெடுத்தாலும்
வாட்ஸ் அப் தான்.
பிரேசில்
நாட்டு நீதிபதி, சமீபத்திய ஒரு தீர்ப்பில், அந்த நாட்டில் உள்ள எல்லா மொபைல்
சர்வீஸ் கம்பெனிகளும், “வாட்ஸ் அப்” வசதியை ஒரு 72 மணி நேரத்துக்கு நிறுத்திவிட
வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார். ஏன் என்று காரணம் சொல்லவில்லையாம்.
ஏற்கனவே
இதே போல, பிரேசில் நாட்டு நீதிபதி, இப்படியான ஒரு உத்தரவை டிச.15, 2105ல்
பிறப்பித்தார். ஆனால், பேஸ்புக் கம்பெனி (வாட்ஸ் அப் நடத்தும் கம்பெனி) அந்த
நீதிபதியின் உத்தரவை மதிக்கவில்லையாம். உடனே அந்த பேஸ்புக் அதிகாரியை சிறையில்
தள்ளியது. ஆனால் மேல் கோர்ட் தலையிட்டு அந்த தண்டனையை நிறுத்தி வைத்தது.
ஏதோ
முக்கியமான வழக்கு ஒன்று நடந்துகொண்டிருக்கும்போல! அதைப் பற்றி யாரும் ஏதும்
வாட்ஸ் அப்-பில் விமர்சனம் செய்யக் கூடாது என்ற காரணமாக இருக்கலாம்! உண்மையான காரணம் தெரியவில்லை!
ஆமாம்! "வாட்ஸ் அப்" இப்போது நெருப்பு மாதிரிதான் இருக்கிறது. ஒரு விஷயம் வெளிவந்த
அடுத்து நிமிடத்தில் உலகத்தையே பார்த்துவிட வைக்கிறது இந்த வாட்ஸ் அப்.
**
No comments:
Post a Comment