மூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்!
"பேசா எழுத்துடன் பேசும் எழுத்துறின் ஆசான பரநந்தி ஆம்".
(ஔவை).
பேசாத எழுத்து அறிவு;
பேசும் எழுத்து சிவம்;
இவை இரண்டும் சேர்ந்தால் குருவும், கடஷனாமாகும்;
பேசாத எழுத்து "ம்" இதை வாய்திறந்து உச்சரிப்பதில்லை;
பேசும் எழுத்து "ஓ" இதை வாய் திறந்துதான் சொல்ல முடியும்.
ஓம் என அமைந்தால் ஆசானாகிய பரநந்தி எனப்படும் மூலப்பரம்பொருள்
ஆகும்;
அதாவது,
ஓம் என்னும் மூலமந்திரமாகிய பிரணவத்தை முறைப்படி ஓதினால் (உச்சரித்தால்)
அவ்வாறு உச்சரிப்பவரின் மனம் ஒடுங்கும்;
மனம் ஒடுங்கப் புலன் ஒடுங்கும்;
புலன் ஒடுங்கச் செயல் ஒடுங்கும்;
செயல் ஒடுங்கவே,
இடைகலை, பிங்கலை, இடைநாடியாகிய
சுழுமுனை ஆகிய மூன்றும் ஒன்றாகி நாடி சுத்தி ஏற்படும்.
இதைத்தான் "மூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்" என்று
யோகர்சுவாமி பாடினார்;
நாடி சுத்தி ஏற்பட்டால், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியானது,
ஆதாரங்களை நோக்கிப் பாயும்; பாய்ந்து, பிரமாந்திரத்திற்கு மேலே பன்னிரண்டு விரற்கடை தூரத்தில் விளங்கும் துவாத சாந்தப்
பெருவெளியாகிய தில்லை வெளியிலே நடமிடும் பரம்பொருளாகிய பரநந்தியைக் கூடி, ஆன்மா அத்துவிதமாகிப் பரநந்தி ஆகும்.
நன்றி: செல்லத்தம்பி சீறீக்கந்தராசா அவர்களின் "அவ்வையார்
காட்டிய வழி" நூலிலிருந்து.
**
No comments:
Post a Comment