மதம்
மாறலாம், ஜாதி மாறமுடியாது.
மனிதனுக்கு
மதம் அவசியமா இல்லையா என்பது பெரிய விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால்
மதங்களை உருவாக்கியதே, மனிதனை நெறிப்படுத்தத்தான்! ஆனால், இப்போதெல்லாம் மனிதன்,
மதத்தால் மதம் பிடித்து அலைகிறான்!
மதம்
மாறுவது என்பது தனி மனிதனின் விருப்பமே! அது, அவனின், கடவுள் நம்பிக்கையின்பால்
பட்டது. ஒரு காலத்தில் ஒரு கடவுள் பிடிக்கும், எனவே அந்த மதத்தில் இருப்பான்.
மற்றொரு காலத்தில் அந்த கடவுள் பிடிக்காது, அல்லது வேறு ஒரு கடவுள் பிடிக்கும்.
எனவே வேறு மதத்துக்கு மாறிவிடுவான். கட்சிதாவல் மாதிரிதான் இதுவும்.
மதம்
மாறுவது தனிமனிதனின் சுதந்திரம். ஆனால், மதம் மாறினால், அவன் ஏற்கனவே இருந்து வந்த
ஜாதி மாறாது என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாப்பில்
ஒரு தனித்தொகுதி. அதில் ஷெட்யூல் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டுமே போட்டியிட
முடியும். ஏற்கனவே ஷெட்யூல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர், முஸ்லீம் மதத்துக்கு மாறி
விட்டார். பின்னர் அந்த தொகுதியில் எம்எல்ஏ வுக்கு போட்டியிட்டு வென்றார். ஆனால்,
அவர் மதம் மாறி விட்டதால், அவர் ஷெட்யூல் வகுப்பை சேர்ந்தவர் என்று கருத முடியாது
என அவர் மீது தேர்தல் வழக்கு போடுகின்றனர். பஞ்சாப் & ஹரியான ஐகோர்ட் அவரின்
தேர்தல் செல்லாது என்கிறது. இவர் மதம் மாறிவிட்டதால், ஜாதியையும் இழந்து விடுவார்
என்பது ஐகோர்ட் கருத்து.
ஆனால்,
அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அதில் சுப்ரீம் கோர்ட், அவரின்
அப்பீலை அனுமதித்து, “மதம் மாறினாலும், அவரின் ஜாதி மாறாமலேயே இருக்கும்” என்ற
தீர்ப்பை வழக்கியது.
It is
settled in law that a person can change his religion and faith but not the
caste, to which he belongs, as caste has linkage to birth.
**
No comments:
Post a Comment