கணபதி தோத்திரம்:
"சகல சிருட்டிகளுக்கும்
மூலாதாரமாய் உள்ளவரே! அண்ட பிண்ட சகல சராசரங்களையும் உம்மிடத்தில் அடக்கி இருக்கின்றீர்
என்பதற்கு அடையாளமாக பேழை வயிற்றைக் கொண்டிருக்கும் பெருமானே! உலகத்தில் உள்ள சகல விக்கினங்களையும்
தீர்க்கும் விக்கினேஸ்வரரே! ஓங்கார சொரூபி! அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் அண்ட பிண்டங்களில்
ஓங்கார ஓசையானது ஓயாது ஒலிக்கின்றதே, அதைக் கேட்டு,
அதனால் உம்மைத் தியானிக்க, உலகமாயை எங்களை விடாது
உலைக்கின்றதே! இதை அகற்றி, எங்களை நல்வழிப்படுத்தல் மூலகாரணமாகிய
உமது கடமை அன்றோ! முத்தியையும் சித்தியையும் அளிக்கும் முழுமுதற் கடவுளே! நாம் போகும்
இடங்களில் எங்களோடு நின்று சகல விக்கினங்களினின்றும் எங்களை இரட்சித்துக் காப்பாற்றும்!"
**
No comments:
Post a Comment