வளைகுடா நாட்டின் “எத்திஹாட்” ஏர்லைன்ஸ் புதிய
விமானப் பயணத்தை துவக்கி உள்ளது; இதில் மும்பாய்-நியூயார்க் செல்ல ரூ.25.22 லட்சம்
ரூபாயாம். அதுவும் ஒருமுறை போவதற்குறிய டிக்கெட் கட்டணமாம். மறுபடி திரும்பிவர,
மறுபடியும் ரூ.25 லட்சத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
மாட்டுவண்டி
பிரயாண காலத்திலிருந்து, மாறி வந்துவிட்டோம். ஆனால் இவ்வளவு தூரம் மாறி
வந்திருக்கிறோம் என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த விமானத்தில்
மூன்று ரூம்கள் கொண்ட சூட் உள்ளதாம். தனி எடுபிடி வேலையாள். தனி ஷெப். உண்மையிலேயே
வீட்டில் இருப்பது போன்றே இருக்குமாம். (நாம் என்ன, பறந்து கொண்டேவா இருக்கப்
போகிறோம்? கீழே இறங்கித் தரையில் நடந்துதானே ஆகவேண்டும்?) இதுக்கு எதுக்கு இவ்வளவு
செலவு? இந்த ப்ளைட்டுக்கு பெயர் என்னவாம்? “எத்திஹாட் ஏர்பஸ்-ஏ-380”.
மும்பாய்க்கும்
நியூயார்க்கும் இடையே சுமார் 7,800 கி.மீ. தூரம்தான். சாதாரண ப்ளைட்டுகளில்
ரூ.50,000 டிக்கெட் பணம். தொடர் 15 மணி நேரப் பயணம்.
உலகம்
வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது!
**
No comments:
Post a Comment