மும்பாய் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு;
1948 ஜனவரியில் நடந்த மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய
விசாரனை வேண்டுமாம்; புதிய கமிஷன் நியமித்து, அதில் உள்ள சதியை மீண்டும் விசாரிக்க
வேண்டுமாம்; டாக்டர் பங்கஜ் பாண்டிஸ் என்பவர் இந்த பொதுநல மனுவை மும்பாய்
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்; இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பின் டிரஸ்டி
ஆவார்; ஏற்கனவே மகாத்மா காந்தி கொலை பற்றி விசாரனை செய்த ஜே.எல்.கபூர் கமிஷன்,
கொலை சதியை முழுமையாக வெளிக் கொண்டுவரவில்லை என்று கூறுகிறார்;
ஏற்கனவே நடந்த அந்த வழக்கில் அரசு தரப்பில், “காந்தியை, ஒரு கொலையாளி,
தன் ரிவால்வார் மூலம் சுட்டான் என்றும், அந்த ரிவால்வார் மொத்தம் ஏழு குண்டுகள்
கொண்ட துப்பாக்கி என்றும், அதில் மூன்று குண்டுகள் காந்தியின் உடம்பில் பாய்ந்தது
என்றும், மீதி நான்கு குண்டுகளுடன் அந்த ரிவால்வாரை போலீஸ் பறிமுதல் செய்தது”
என்றும் சொல்லப் பட்டுள்ளது;
ஆனால், இந்த பொதுநல வழக்கின் கூற்றுப்படி, “1948 ஜனவரி 30ல், காந்தியின்
உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளது என்றும், அதற்கு ஆதாரமாக அன்றைய தின
செய்தித் தாள்களிலும் அவ்வாறே நான்கு குண்டுகள் பாய்ந்து இறந்ததாகவே
சொல்லப்பட்டுள்ளது” என்றும் கூறி உள்ளார்;
அப்படி என்றால், அந்த நான்காவது புல்லட் எங்கிருந்து வந்தது, யார்
சுட்டது என்றும் கேள்வி எழுப்பி, அதனால் புதிய விசாரனைக் கமிஷன் கேட்டுள்ளார்;
இது மும்பாய் ஐகோர்ட்டில் ஜூன் 6ம் தேதி மும்பாய் ஐகோர்ட் தலைமை
நீதிபதி DH வகேலா தலைமை தாங்கும் பெஞ்சில் வர இருக்கிறது;
நாத்துராம் கோட்சே சுட்டதில் மூன்று புல்லட்டுகள் மட்டுமே காந்தி
உடலில் பாய்ந்தது, மீதி நான்கு புல்லட்டுகள் அவன் ரிவால்வாரிலேயே இருந்துள்ளது
என்றால், காந்தி உடலில் பாய்ந்த நான்காவது புல்லட் யாருடையது என்ற கேள்வியை
எழுப்பி உள்ளார்; நாத்துராம் கோட்சே தவிர, வேறு கொலையாளி இருக்கிறானா என்று
கேட்கிறார்;
காந்தி கொலையில் வேறு சதி உள்ளதா என்றும், இந்த கொலைக்கும்
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கும் சம்மந்தம் உள்ளதா என்றும் கேட்கிறார்;
காந்தி-ஜின்னா பேச்சு, காந்தி பாகிஸ்தான் சென்று மக்களை நேருக்கு நேர் சந்திக்க
முடிவு செய்திருந்தது, அதற்கு முன்பே காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணி, இவைகளும்
விசாரிக்கபட வேண்டியதே என்கிறார்;
காந்தி கொலை வழக்கில் வீரசவர்க்கர் சேர்க்கப்பட்டு, முடிவில் அவர்
விடுதலை ஆனார்; இந்த வீரசவர்க்கர்கருக்கு எதிராக, கபூர் கமிஷன் விசாரனையில் சில விரும்பத்தகாத
சொற்கள் சொல்லப்பட்டுள்ளன என்றும் அதையும் நீக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்;
வீரசவர்க்கர் மீது இந்த மனுவை தாக்கல் செய்த டாக்டர் பங்கஜ் அபிமானம் உள்ளவராம்;
**
No comments:
Post a Comment