“கல்வி
என்பது வியாபாரம் அல்ல” --- இந்திய சுப்ரீம் கோர்ட் சாட்டையால் அடித்துள்ளது.
மத்திய
அரசு நீட் NEET என்னும் நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவு
இடுகிறது. மாநில அரசுகள் தாங்களே மாநில அளவில் நுழைவு தேர்வு CET நடத்திக் கொள்வோம் என்கிறது.
இந்த
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதத்து உள்ளாகிறது.
இந்திய
அரசியல் சாசனம் ஆர்ட்டிகிள் 254 என்ன சொல்கிறது?
மத்திய
அரசுக்கும் மாநில அரசுக்கும், அவரவர் சட்டம் இயற்றும் அதிகாரங்களை பிரித்துக்
கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்ய
வேண்டும் என்று இந்த ஆர்ட்டிகிள் 254 சொல்கிறது.
254(1)
மத்திய அரசு சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட விஷயங்களில், மாநில அரசும் சட்டம்
இயற்றி, அதனால் குழப்பம் ஏற்பட்டு இருந்தால், மத்திய அரசின் சட்டமே செல்லும்.
மாநில அரசின் சட்டம் செல்லாது.
254(2)
சில சட்டங்களை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்தே சட்டம் இயற்றிக் கொள்ளலாம்
என்று சில வகை உள்ளது. அதன்படி மத்திய அரசும், மாநில அரசும் ஒரே விஷயத்தைப் பற்றி
இருவேறு சட்டங்கள் இயற்றி இருந்தால், மாநில அரசு இயற்றிய சட்டமானது, மத்திய அரசு
இயற்றிய சட்டத்துக்கு முரணாக இல்லாதவரை அது செல்லும்.
2013ல்
சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பை கொடுத்தது. அது மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்
தீர்ப்பு. அதன்படி, மைனாரிட்டி கல்வி நிறுவனங்கள் தங்களின் கொள்கையை தாங்களே
வகுத்துக் கொள்ளலாம். அதில் அரசு தலையிட முடியாது என்று தீர்ப்பு. அதன்படி NEET சட்டத்துக்குப் புறம்பானது.
ஆனால்,
இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு.
Justices
Anil R Dave, AK Sikri, RK Agarwal, Adarsh K Goel and R Banumathi.
அதன்படி,
NEET
தேர்வு மருத்துக் கல்லூரி
அட்மிஷனுக்கு எழுதுவது கட்டாயம் என்றும் அந்த முறை செல்லுபடியாகும் என்று
தீர்ப்பு. CET மாநிலங்கள் பொதுவாக அட்மிஷன் தேர்வை வைத்துக்
கொள்ளலாம் என்று கூறி உள்ளது.
ஆர்ட்டிகிள்
254ன்படி உயர்நிலைக் கல்வி (Higher Education) மத்திய அரசின்
பொறுப்பில் உள்ளது. எனவே உயர் கல்வி விஷயங்களில் மத்திய அரசின் சட்டமே செல்லும்
என்றும் மாநில அரசு சட்டம் செல்லாது என்றும், எனவே மருத்துவ கல்வி விஷயத்தில்
மத்திய அரசின் NEET Notification மட்டுமே செல்லும் என்று
சொல்லி உள்ளது.
எது
எப்படி இருந்தாலும், கல்வியை காசாக்காதீர்கள். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின்
கல்வியில்தான் உள்ளது!!!
The Supreme Court Bench said, "Education is treated as a noble 'occupation' on 'no profit, no loss' basis. Thus, those who establish and are managing the educational institutions are not expected to indulge in profiteering or commercialise this noble activity.
The State can lay down regulatory measures for private aided or unaided, minority or non-minority institutions."
The Supreme Court Bench said, "Education is treated as a noble 'occupation' on 'no profit, no loss' basis. Thus, those who establish and are managing the educational institutions are not expected to indulge in profiteering or commercialise this noble activity.
The State can lay down regulatory measures for private aided or unaided, minority or non-minority institutions."
CET = The Common Admission Test. or Common Entrance Test.
**
No comments:
Post a Comment