Saturday, August 9, 2014

சபிண்டா திருமண உறவுகள்

Sapinda Relationship (சபிண்டா உறவு)
தன் தந்தைவழி, தாய்வழி ரத்த உறவுகளை சபிண்டா  (Sapinda)என்பர். 'சக-பிண்டம்' என்ற அர்த்தத்தில் இருக்குமோ?
இந்தமாதிரியான சபிண்டா உறவுகளில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறது பண்டைய சாஸ்திரங்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல, பொதுவாக எல்லா நாடுகளிலுமே இருந்துவந்த பழக்கம்தான்.
சபிண்டா உறவு என்பது 'தாய் வழிஉறவாக இருந்தால், மூன்று தலைமுறைக்கும், தந்தைவழி உறவாக இருந்தால் ஐந்து தலைமுறைக்கும்' இந்த ரத்த உறவு தொடரும். இந்த உறவுகளில் திருமணம் செய்யக் கூடாது. ஏனென்றால், இவர்களை நமது உடன்பிறந்தவர்களைப் போல நினைத்துக் கொள்ள வேண்டும். ஒரே இரத்தம் என்ற உறவு. ஒரே கோத்திரம்.
தந்தைவழி, தாய்வழி சபிண்டா உறவு என்றால், நமது தந்தையுடன் பிறந்தவர்களின் குழந்தைகள், மற்றும் நமது தாயுடன் பிறந்தவர்களின் குழந்தைகள் -- இவர்களைத்தான் சபிண்டா ரத்த உறவு என்று சொல்வர். ஆங்கிலேயர்கள் இவர்களை 'Cousin' என்று பொதுவாகவே அழைக்கின்றனர்.
Cousin =  நம் பெற்றோருடன் உடன்பிறந்தவர்களின் குழந்தைகளைப் பொதுவாக சொல்லும் உறவுமுறை.
ஆனால் இந்தியாவில் வேறு முறை:
Cousin-களில் தந்தையின் சகோதரன் குழந்தைகளும், தாயின் சகோதரி குழந்தைகளை மட்டும் நாம் சபிண்டா உறவு என்று (சகோதர, சகோதரி உறவு) என்று நாம் நினைக்கிறோம்.
மாறாக, நமது தந்தையின் சகோதரி குழந்தைகளையும், நமது தாயின் சகோதரர் குழந்தைகளையும் சபிண்டா உறவாக நாம் நினைப்பதில்லை, மாறாக அவர்களை திருமண உறவாகவே கருதுகிறோம்.
இந்து திருமணச் சட்டம் 1955 (The Hindu Marriage Act 1955)
இந்து திருமணச் சட்டம் 1955ல் சபிண்டா உறவில் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அந்தச் சட்டத்தில் விதிவிலக்காக, ஏதாவது ஒரு பகுதியில், 'சபிண்டா உறவுக்குள்' திருமணம் செய்து கொள்வது நீண்டகால பழக்க வழக்கமாக இருந்தால், அதற்கு சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது. இந்த விதிவிலக்கைக் கொண்டுதான், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 'அத்தை-மகள், மாமன்-மகள்' இவர்களை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (இந்த வழக்கம் இல்லையென்றால், இந்த  இந்துதிருமணச் சட்டப்படி இது தவறாகும். நமது ஊரில் Cousin marriages சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது).
ஒரே கோத்திரம் என்பது சகோதர-சகோதரி உறவில் இருப்பதால், பழங்காலத்தில் இத்தகைய உறவுக்குள் திருமணம் செய்யாமல் தவிர்த்து வந்தனர். (பழக்கமா, இல்லை விஞ்ஞானபூர்வ காரணமா என்று தெரியவில்லை).
கனடாவில் 1913-ல் இப்படியொரு வித்தியாசமான ஒரு கோர்ட் வழக்கு வந்தது.
1904ல் கனடாவில் உள்ள கியூபெக் (Quebec) நாட்டில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்தை அங்குள்ள சர்ச்சில் நடத்துவது வழக்கம். பழைய சர்ச் பதிவேடுகளைப் பார்த்தபோது, இவர்கள் இருவரும் ஒரு பொதுவான ரத்த உறவு போல (Sapinda Relationship) உள்ளதாக, கணவன் திடீரென்று சர்ச் பதிவேடுகள் மூலம் கண்டுகொண்டு, திருமணமாகி 6 வருடங்கள் கழித்து இந்த பிரச்சனையை கிளப்பி, மனைவியை டைவர்ஸ் கேட்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், 1781ல் இவர்கள் இருவரின் தாத்தாவின், தாத்தாவின் தாத்தா ஒரே ஆளாம். எனவே இவர்கள் சபிண்டா உறவில் இருப்பதால், இவர்களின் திருமணம் செல்லாதாம்.
இவரின் மனைவியோ, அதெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்துவிட்டோம், இனிமேலும் அவ்வாறே வாழ்வோம் என்று எவ்வளவோ கேட்டும், கணவன் பிடிவாதமாக இருக்கிறான். வழக்கும் கோர்ட்டுக்கு செல்கிறது. மாநில சுப்ரீம் கோர்ட் டைவர்ஸ் கொடுக்கிறது. மனைவி அப்பீல் செய்து பிரைவி கவுன்சில் கோர்ட்டுக்கு செல்கிறார். (கியூபெக் நாடும், இந்தியாவைப் போலவே பிரிட்டீஸ் காலனி  நாடு என்பதால், இந்தியாபோலவே இதற்கும் பிரைவி கவுன்சில் கோர்ட் லண்டனில்தான் உள்ளது.)
பிரைவி கவுன்சில் கோர்ட்டும், "இந்தத் திருமணமானது சபிண்டா உறவுக்குள் இருப்பது உண்மைதான். (இந்த சபிண்டா உறவை அங்கு Levitical degree லெவிட்டிகல் டிகிரியில் உள்ள உறவு என்று சட்டம் சொல்கிறது.)
ஏற்கனவே திருமணம் ஆகி சர்ச் சர்டிபிகேட் இருப்பதால், அந்த உறவை சர்ச்சின் பாதிரியார் ஏற்றுக் கொண்டதாகவே அர்த்தம். எனவே அந்தத் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கணவனும் மனைவியும் கேட்க முடியாது. திருமணம் என்பது ஆயுட்கால பந்தம் என்றும், அந்த திருமணம் செல்லும்" என்றும் அப்பீல் கோர்ட் கூறிவிட்டது. ஒருமுறை திருமணம் செய்துவிட்டால், இறப்பு மட்டும்தான் அந்த கணவன்-மனைவியைப் பிரிக்க வேண்டுமே தவிர மற்ற எதுவும் பிரிக்க முடியாது என்பது அங்குள்ள வழக்கம்! 

Article 126  expressly prohibit marriages between persons who are within what are known as the Levitical degrees.
"Marriage is also prohibited between uncle and niece, aunt and nephew."
Article 161: "When the parties are in possession of the status and the certificates of their marriage is produced, they cannot demand the nullity of such act."
Article 185: "Marriage can only be dissolved by the natural death of one of the parties; while both live it is indissoluble."
Hence this Appeal is allowed and the marriage should be declared valid and subsisting.

(அவரும் இந்த மன உறுத்தலுடனேயே மனைவியுடன் வாழ்ந்து, இறந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.)

.

No comments:

Post a Comment