Saturday, August 9, 2014

இன அலைகழிப்பு

இன அலைகழிப்பு (Race segregation)
படைப்பிலேயே வித்தியாசம்.
மனிதனைப் பல இனமாகப் படைத்தவன் கடவுள்.
ஐரோப்பாவில் வெள்ளையர்; ஆப்ரிக்காவில் கறுப்பர் இனங்கள்; ஆசியாவில் ஜாதிகள்; ஜாதிகளும் ஒருவகையில் வெள்ளை-கறுப்பு அடையாளங்களே!
இன வித்தியாசத்தை விதைத்தவன் கடவுள்; அதை ஊதிப் பெரிதாக்கியவன் உயர்இன மனிதன்.
வெள்ளை மதிக்கப்பட்டது; கறுப்பு அடிமையானது.
வெள்ளை இனம், 'தன்னைக் கடவுளின் நேரடிக் குழந்தை' என்றும், 'தனக்கு அடிமை வேலை செய்யவே, தன் கடவுள், தனக்குக் கறுப்பு இனத்தை கொடுத்தான் ' எனவும் தத்துவ விளக்கமும் உண்டு.
ஏன் கறுப்பு இனம் அடிமையானது. ஏன் அடிமையாகியே இருந்தது. என்ன கட்டாயம்? கறுப்பு இனத்துக்கென  இந்த பூமியில் ஒரு கண்டமே இருந்தது; ஆட்டு மந்தையென அவ்வளவு கூட்டம்! பின் ஏன் ஒரு சிறுபான்மை வெள்ளை இனத்துக்கு  இது அடிமையானது?
இங்கு, நிறத்தில் குறை இருந்ததாகத் தெரியவில்லை. உழைப்பில் குறையிருந்ததாகத் தெரிகிறது. தன்னை மேம்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. அவ்வளவே! ஐரோப்பாவின் முழு முன்னேற்றத்துக்கும் அவர்கள் "கப்பலைக் கண்டுபிடித்ததும், பீரங்கியை கண்டுபிடித்ததுமே மிக மிக முக்கிய காரணம்"  என்கிறது வரலாறு. இது சரித்திர உண்மைதான்.
ஐரோப்பியர் முயற்சி செய்தனர்; ஆப்ரிக்கர் முடங்கிக் கிடந்தனர். இந்த அளவே வித்தியாசம். நிறம் ஒருபோதும் பிரச்சனையாக இருந்திருக்கவே முடியாது.
தனக்காக உழைக்கவில்லை; அடுத்தவரின் கட்டாயத்தில் உழைத்தனர் கறுப்பர்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் வழக்கு - 1896ல் நடந்த மிகப் பிரபலமான வழக்கு இது (Plessy vs. Ferguson, 1896):
அமெரிக்காவிலுள்ள Louisiana மாகாணத்தில் 1890ல் ஒரு சட்டம் கொண்டு வரப்படுகிறது. அதில் ரயில் பெட்டிகளில் 'வெள்ளையர் பெட்டிகள், கறுப்பர் பெட்டிகள்' என இனம் பிரிக்கப் படுகிறது. வெள்ளையர் பெட்டியில் எந்தக் காரணம் கொண்டும் கறுப்பர் ஏறக் கூடாது. மீறி ஏறினால் அப்போதைய மதிப்பின்படி 25 டாலர் அபராதம் அல்லது 20 நாட்கள் சிறை தண்டனை. இந்த கட்டுப்பாட்டை நடைமுறைப் படுத்தவில்லை என்றால், அந்த ரயில்வே அதிகாரிக்கும் அபராதமும் உண்டு.
ஒரே ஒரு சலுகை மட்டும்: 'குழந்தைகளை கவனிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நர்ஸ்களுக்கு மட்டும் இந்த இன வேறுபாட்டை பார்க்கத் தேவையில்லை'.
இந்தச் சூழ்நிலையில் ஒரு வித்தியாசமான நிகழ்வு நடக்கிறது. Plessy என்பவர் ஒரு Caucasian. அப்படி என்றால், இவர் உடலில் 1/8 பங்கு ஆப்ரிக்க ரத்தமும், 7/8 பங்கு காகேசியன் ரத்தமும். இவர் அந்த ரயில் பெட்டியில் எந்த பிரிவில் உட்காருவார் அல்லது இவரை எந்த பெட்டியில் உட்கார வைப்பது? இவராகவே வெள்ளைப் பெட்டியில் உட்காருகிறார். ஆனால், இவரை, போலீஸை வைத்து வெளியேற்றி, குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்புகிறார்கள்.
அமெரிக்காவின் அரசியல் சாசன 13-வது திருத்தத்தின்படி - அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது (Abolishing Slavery).
14-வது திருத்தத்தின்படி - இந்த மாதிரி வித்தியாசமான இன உணர்வை வளர்க்கும் சட்டத்தை எந்த மாநிலமும் கொண்டுவரக் கூடாது.
எனவே கறுப்பு-வெள்ளை ரயில் பெட்டி, 14-வது திருத்த சட்டத்துக்கு எதிராகவே உள்ளதென வழக்கு கோர்ட்டுக்கு வந்தது.
"The power to assign a particular coach obviously implies the power to determine to which race the passenger belongs, as well as the power to determine who, under the laws of the particular State, is to be deemed white and who a colored person.
வாதியின் வாதம் என்னவென்றால், 'கறுப்பும் இல்லாமல், வெள்ளையும் இல்லாமல், கலந்த நிற மனிதனுக்கு (mixed-பல இனம்) அவனின் பெரும்பான்மை இனத்துக்கான அங்கீகாரமே வழங்க வேண்டும்' என்பது. 
இந்த வழக்கில், இன அலைகழிப்பு இருந்ததாக அவரின் வக்கீல் வாதாடவில்லை. மாறாக, அவருக்கு  வேறு ஒரு தனி கோச் கொடுத்திருக்க வேண்டும் என்கிறார். இது, ரயில்வே கம்பெனிக்கு வசதியாகப் போய்விட்டது. இவர்களைப் போன்றவர்களுக்கு அவர்களின் தலையின் முடியின் நிறத்தை வைத்து தனிக் கோச் ஒதுக்க ஒப்புக் கொண்டது.
அடுத்த வாதமாக - 14-வது திருத்த சட்டம்:
இதன்படி லூசியானா மாநிலம், இப்படி தனித்தனி கோச்சில் உட்கார வேண்டும் என இனப் பிரிவு சட்டம் கொண்டுவந்தது சரியா என்ற வாதம். மாநில அரசு ஒரு முக்கியமான வாதத்தை வைக்கிறது. "கடந்தகால பழக்க வழக்கங்களை எளிதில் மாற்றிவிட முடியாது என்றும் பொதுவாழ்வில் அமைதி நிலவ இப்படியான ஒரு ஏற்பாடு தேவைதான் என்றும் அரசு கருதுவதாக சொல்கிறது.
"In determining the question of reasonableness, it is at liberty to act with reference to the established usages, customs, and traditions of the people, and with a view to the promotion of their comfort and the preservation of the public peace and good order."
கவனிக்க வேண்டிய இன்னொரு வித்தியாசமான வாதத்தை வைக்கிறது. 'ஒருவேளை, கலர் இன மக்கள் (கறுப்பர்) அதிகமாக இருந்து, அவர்கள் ஒரு சட்டத்தை கொண்டுவந்து, அவர்களுக்கு என்று தனி கோச் ஏற்படுத்திக் கொண்டால், அப்போது, வெள்ளையர், 'கலர் இன மக்கள், தங்களை (வெள்ளையர்கள்) தாழ்மை படுத்தி விட்டதாகத்தானே நினைப்பர்'.
(அதாவது எப்போதுமே அதிக எண்ணிக்கையில் உள்ள இனம் அல்லது ஆளுமையில் உள்ள இனம், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டால், அதற்கு எதிரான இனம் தாழ்ந்து விட்டதாகவே உணரும்.)
மேலும்,
"Legislation is powerless to eradicate racial instincts or to abolish distinctions based upon physical differences, and the attempt to do so can only result in accentuating the difficulties of the present situation. If the civil and political rights of both races be equal, one cannot be inferior to the other civilly or politically."
 இப்படியாக லூசியான மாநில அரசு சொன்ன வாதமே, லூசியானா மாநில சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது, அது சொன்னது சரியே என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின்  மெஜாரிட்டி நீதிபதிகளின் முடிவானது.
* ** *

இனி வரும் 'மனுவின்' பிரபஞ்சத்திலாவது இப்படியான குழப்பங்கள் இல்லாதிருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.
.

No comments:

Post a Comment