Sunday, August 3, 2014

கோயம்புதூர் வழக்கு 1922ல்

கோயம்புதூர் வழக்கு: (Privy Council in 1922)

முகமது உசேன் ராவுத்தர். இவர் லெப்பை, சன்னி பிரிவைச் சேர்ந்தவர். அவர் 1904ல் இறந்து விட்டார். அவரின் சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் வழக்கு. அவருக்கு ஒரு மனைவியும், 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகள் பொன்னுத்தாயி, மற்ற மகள் சுலைகாபீ.

இதில் மகள் பொன்னுத்தாயி 1905ல் இறந்துவிட்டார். அவருக்கு கணவரும், ஒரு மகளும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இந்த சொத்தில் பங்கு கேட்டு வழக்கு போட்டார்கள்.
அவரின் மகள்கள் இருவருமே அப்பா சொத்தில் பங்கு கேட்கிறார்கள். ஆனால் மகன்களோ, பெண்களுக்கு (மகள்களுக்கு) அப்பா சொத்தில் பங்கு இல்லை என்று வாதாடுகிறார்கள். ஏனென்றால், 'இங்கு கோயம்புதூரில் வெகுகாலமாகவே முஸ்லீம் சொத்தில் மகள்களுக்குப் பங்குரிமை கொடுப்பதில்லை. இது வெகுகாலமாக பழக்க-வழக்கத்தில் உள்ளது (Immemorial custom and ancient usage) என்றும், இந்தப் பகுதியில் பெரும்பாலும் 'இந்து' சட்டப்படியே நாங்கள் சொத்துக்களை பிரித்துக் கொள்கிறோம் என்றும் வாதிட்டனர். (அப்போதைய இந்து சட்டப்படி, பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதில்லை).

முகமதியர் சொத்தை பிரித்துக் கொள்வதில் முகமதியர் சட்டம் செல்லுமா? அல்லது உள்ளூர் வழக்கம் செல்லுமா? என்பதே சட்டக் கேள்வி.
கோயம்புத்தூர் சப்-கோர்ட், தனது தீர்ப்பில், 'முகமதிய சட்டமே செல்லும் என்றும், பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு' என்று தீர்ப்புக் கூறியது.

மகன்கள், சென்னை மாகாண  ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்தார்கள். ஐகோர்ட் அப்பீலில், தலைமை நீதிபதி, தனது தீர்ப்பில், 'லெப்பை சமுதாயத்தில், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பது வழக்கம் இல்லை என்றும், இவர்கள் ஆதியில் இந்துவாக இருந்து முகமதியராக மாறியவர்கள் என்றும், இவர்களின் குடும்ப சொத்து வழக்கம் பொதுவாக இந்து குடும்பச் சொத்து வழக்கத்தை ஒட்டியே இருக்கும் என்றும்' தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் Mr. Justice Srinivasa Ayyangar ன் தீர்ப்பு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
"Fanindra Deb Raikat vs. Rajeswar Das, L.R. 12 I.A. at page 81, as a guide to the standard of proof required, he regarded it as probable that "many of the Lubbais being recent converts from Hinduism retained the mode of devolution of property according to Hindu usages even after their conversion."

ஆனால், மிகப் பிரபலமான ஆப்ரகாம் வழக்கில் குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்ரகாம் வழக்கு என்னவென்றால்;
"No doubt in Abraham vs. Abraham, 9 M.I.A. 195, it is said that a convert upon his conversion may renounce the old law by which he was bound as he has renounced his old religion, or if he thinks fit he may abide by the old law notwithstanding he has renounced his old religion. It is not, however, suggested in the present case that the Lubbais as a community have thought fit to abide by the entirely of their old law; the utmost that is said is that they, or some of them in a particular locality, have followed the Hindu Law, not in all respects, but in relation to property succession and partition. In their essential characteristics, custom and an election to abide by the law of the old status differ fundamentally as sources of law, still, making every assumption in its favour, in the circumstances of this case and on the record as it stands there is no mode of proving this alleged election except by way of inference from acting and conduct that would establish a custom, so that along whatever line this case may be approached the custom must be established and the burden of proof of this case is on the defendants."

வேறு ஒரு சட்டம் மூலமும் இதை அலசினார்கள். மதராஸ் சிவில் கோர்ட் சட்டம் 1873ன்படி சொத்து வாரிசுரிமை, திருமணம், மதப் பழக்கவழக்கம், வழிபாடு இவைகளில் முகமதியர் அவர்களின் முகமதிய சட்டத்தை பின்பற்றலாம் அல்லது நீண்ட கால பழக்க வழக்கத்தை பின்பற்றலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

பழக்க வழக்கம் என்பது தொடர்ச்சியாக ஒரு சமுதாயம் பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் லெப்பை சமுதாயத்தில், கோயம்புதூர் பகுதியில் இதற்கு முன் நடந்த பல வழக்குகளில் பெண்களுக்கும் பங்கு கொடுத்திருக்கிறார்கள். எனவே பங்கு இல்லை என்ற வழக்கம் தொடர்ச்சியாக இருக்கவில்லை. எனவே மகளுக்கு பங்கு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

முடிவாக, மதராஸ் ஐகோர்ட் சொன்ன தீர்ப்பை தள்ளுபடி செய்து, கோயம்புதூர் கீழ்கோர்ட் சொன்ன தீர்பே சரி என்று உறுதி செய்தும், மகளுக்கு பங்கு உண்டு என்றும் தீர்ப்பை Privy Council வழங்கியது.
(Privy Council Appeal No.14 of 1918, Mahomed Ibrahim Rowther vs. Shaikh Ibrahim Rowthar and others, in Madras 1922 UKPC 2 dated 17 January 1922).

.

No comments:

Post a Comment