Monday, August 4, 2014

வக்கீலின் நன்னடத்தை

1928ல் "வக்கீல் பீஸ்" விவகாரமாக நடந்த வழக்கு:

தனது குடிகார மருமகனிடம்  வக்கீல் அநியாயமாக அதிக பீஸ் வாங்கிவிட்டதாக, மாமனார் அந்த வக்கீல்மீது புகார் சொல்கிறார். அதை சென்னை மாகாண ஐகோர்ட் விசாரித்து, வக்கீல் செய்தது தவறு என்கிறது. அந்த வக்கீல்பிரைவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்கிறார். அந்த வழக்கு பிரைவி கவுன்சிலில் அலசப்படுகிறது.

"Charges of professional misconduct must be clearly proved and should not be inferred from mere ground for suspicion, however reasonable, or what may be mere error of judgment or indiscretion."

"The suit was founded on an agreement by Mr. Madhava to pay the fees in question, as confirmed by his signature of the account in the Vakil's diary."

Madras HC found that:
Waller J. found this charge proved on the ground that the appellant-vakil "tricked a weak and drunken young fool into signing an acknowledgement for a large sum of money and then sued for unconscionable fees that he had done nothing or little to earn."

ஒரு சின்ன வழக்குக்கு ரூ.4,775/- வக்கீல் பீஸ் என்றும், அதை அந்த குடிகாரப் பார்ட்டி ஒப்புக் கொண்டு கையெழுத்தை வக்கீலின் டைரியில் போட்டுள்ளார் என்றும் கூறி, அந்த வக்கீல், அந்த பார்ட்டிமீதே ஒரு வழக்குப் போட்டு அந்த  பணத்துக்கு ஒரு கோர்ட் டிகிரியும் வாங்கி வைத்துள்ளார். இது வக்கீல் தொழில் நன்னடத்தைக்கு புறம்பானது என்று குற்றச்சாட்டு.

Privy Council held that --
"ஒரு சின்ன வழக்குக்கு இவ்வளவு பெரிய பீஸ் அதிகம்தான். என்றாலும் ஏமாற்றும் எண்ணத்துடன் வக்கீல் செயல்பட்டார் என்பதை நிரூபிக்கவில்லை என பிரைவி கவுன்சிலானது, வக்கீலுக்கு சாதகமாக தீர்ப்புக் கூறியது.
"The size of the fees in relation to the work done or the work undertaken may be open to criticism, but it cannot, in their Lordships' opinion, amount of itself to gross professional misconduct, and this appears to consist with the views of the learned Judges in the Court below, who found the gravamen in the fraudulent conduct, which they held to have been established."

இந்த வழக்கு 1929ல் ஐகோர்ட்டில் நடந்து, பின்னர் லண்டன் பிரைவி கவுன்சில் கோர்ட்டில் 1930ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
(Madras 1930 UKPC 16 dated 10 February 1930)

.

No comments:

Post a Comment