Monday, December 26, 2016

அலெப்போ (Aleppo)

அலெப்போ (Aleppo); சிரியாவில் உள்ள ஒரு பெரு நகரம்; இதை கால்பே என்று முன்னர் அழைத்து வந்தனராம்; கலெப் என்றால் இரும்பு, காப்பர் என்று பொருளாம்; ஆனால் இப்போதைய அலெப்போ என்றால் வெள்ளை (White) என்று பொருளாம்; இங்குள்ள மண்ணே வெள்ளையாக இருக்குமாம்! மார்பில் என்னும் வெள்ளைச் சலவைக்கல் இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்! ஈராக்கின் வடபகுதியும், துருக்கியின் தென்கிழக்குப் பகுதியும், சிரியாவின் வடகிழக்குப் பகுதியும் சேர்ந்த நிலப்பரப்பே தற்போதைய சிரியா நாடு;

இந்த சிரியாவில் 2011ல் இருந்து உள்நாட்டுப் போர் தொடங்கி நடந்து வருகிறது; ஆளும் அரசுக்கு எதிராக ஒரு கூட்டம் உள்நாட்டுக் கலவரத்தை நடத்துகிறது; இந்த சிரியா நாட்டின் பிரசிடென்டாக “பசர் அல் ஆசாத்” இருக்கிறார்; 2011ல் இவரை ஆதரித்து மக்கள் கூட்டம் ஒரு பிரமாண்ட பேரணியை நடத்துகிறது; அவருக்கு ஆதரவு கொடுக்கிறது: அடுத்த வருடமான 2012ல் ஒரு கலவரக்கூட்டம் எதிராக உருவாகிறது; அரசுக்கு எதிராக போராடுகிறது; குண்டுகள் வெடிக்கச் செய்கின்றன; அதில் ஏராளமானவர்கள் இறக்கிறார்கள்; அரசும் எவ்வளவோ தடுப்பு முயற்சிகள் எடுத்தாலும், நேருக்கு நேர் சண்டைகளும் தொடர்கின்றன; ஏராளமானவர்கள் இறக்கின்றனர்; அரசுக்கு எதிரான கோஷ்டியில் இஸ்லாமியர் அதிகமாக உள்ளனர்; அவர்கள் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த கட்டாயப் படுத்துகின்றனர்; 2016ல் மக்கள் கூட்டம் மருத்துவனைகளில் நிறைகிறது; அதில் ரஷ்யாவின் போர்விமானம் குண்டு மழை பொழிந்ததாகவும் குற்றம் சொல்லப்படுகிறது;

சிரியா அரசு, தன் அரசு படைகளைக் கொண்டு, இப்போது அலெப்போவை கைப்பற்றி உள்ளதாம்; இங்கு கிறிஸ்தவர்கள் மைனாரிட்டியாக வசித்து வருகிறார்கள்; கடந்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்களாம்!

மெடிடரேனியன் கடல்; இதை மத்திய தரைக்கடல் என்பர்; புமியின் தரை மத்தியில் இருப்பதால் இந்தப் பெயரோ? உலகத்தில் நடந்த மிகப் பெரிய உலக நிகழ்வுகள் எல்லாம் இந்த மத்திய தரைக்கடலை ஒட்டிய கரைகளில் உள்ள நாடுகளில்தான் நடந்துள்ளது; இந்தக் கடலை ஒட்டிய நாடுகள், இஸ்ரேல், சிரியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், மொராக்கோ, துனிசியா, லிபியா போன்ற நாடுகள் இந்த கடலின் கரைகளிலேயே உள்ளன;

சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சனை மோசமானதே! அங்குள்ள மக்களில் பாதிப்பேர் வாழ முடியாமல் தவிக்கின்றனர்; சிரியா நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பலர் துருக்கி நாட்டுக்குப் போய் விட்டனர்;

சிரியாவின் பிரசிடென்டான ஆசாத் சன்னி வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்; இவர், அமெரிக்கா, ஈராக்கை கைப்பற்றியதை கண்டித்தார்; கத்தாருக்கும் துருக்கிக்கும் இடையே போடும் பைப்-லைன் பதிப்பையும் கண்டித்தார்; எனவே அமெரிக்காவுக்கு எதிரானவர் ஆனார்; ஆசாத்தை எதிர்க்கும் சிரியா உள்நாட்டு கும்பல், ஷியா வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்கள்; எனவே அவர்கள் அமெரிக்காவை ஆதரித்தனர்;

சிரியாவின் பிரசிடென்ட் ஆசாத்துக்கு ஆதரவாக பல கூட்டம், எதிராக பல கூட்டம்; இந்த இரண்டு கூட்டத்துக்கும் இடையில் சண்டை; இதில் உலக நாடுகள் ஆதரவு, எதிர்ப்பு எனப் பல பல நிகழ்வுகள்; எல்லாக் கூட்டங்களுமே போர் குற்றங்கள் புரிந்திருக்கின்றன என்று ஐ.நா. சபை கூறுகிறது;

எது எப்படியோ, சிரியா மக்களின் வாழ்க்கை பாழாகியதுதான் மிச்சம்;
நாகரிக நூற்றாண்டில், காட்டுமிரண்டித்தனம்; மக்கள் வாழ்வை பலிகடா ஆக்கிவிட்டிருக்கிறது; நாம் எந்த மதத்தை, கொள்கையை, நம்பிக்கையை வைத்திருந்தால் என்ன, வாழும் முறை தெரியவில்லையே?

மனிதனாக வாழ எவன் நமக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்; எவனுமே நம் எண்ணத்தை பிரதிபலிக்க மாட்டான்; நம் வாழ்க்கையை, நாம்தான் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருக்க வேண்டும்; அதை எவனுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது;

இந்த மனித இனம், ஆரம்பத்தில் இருந்தே மன்னரிடம் அடிமை வாழ்வுதான் வாழ்ந்திருக்கிறது; ஜனநாயகம் என்பது புதுமுறையான அடிமைத்தனம் என்றும் ஒரு பொருள் உண்டு; விரும்பாத வாழ்க்கையை விரும்பி ஏற்க வேண்டும் என்பது இறைவனின் நியதிபோலும்!
படைத்தவனே, இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!

**

No comments:

Post a Comment