Sunday, December 18, 2016

இதோபதேசம்—4


இதோபதேசம்—4
Airbnb (Airbed and breakfast) என்று ஒரு கம்பெனி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ளது; இது சுற்றுலா பயணிகளுக்கு லாட்ஜ் ரூம்களுக்குப் பதிலாக, வீட்டையை வாடகைக்கு எடுத்துக் கொடுக்கும்; சீனர்கள் ஜெர்மன் நாட்டுக்கு சுற்றுலா போகிறார்கள்; அங்கு இப்படிப்பட்ட வீடு வாடகைத் திட்டம் பிரபல்யம்! ஆனால், இப்போது, அந்த ஜெர்மன் அரசாங்கம், இந்தர்பிஎன்பிநிறுவனத்தின் செயல்பாட்டை தடை செய்துள்ளது; மேலும், வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் அதிக வரிக் கட்டவேண்டும் என்றும் சொல்லி உள்ளதாம்; உள்ளூர்காரர்களுக்கு வாடகைக்கு வீடே கிடைக்க-வில்லையாம்! ஒரு தம்பதி, அவர்கள் இருந்த இரண்டு ரூம்கள் கொண்ட வீட்டை இந்த கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, ஒரு சிறு ரூமில் வசிக்கிறார்களாம்! அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு, அவர்கள் வாழாமல், வாடகைப் பணத்தை வைத்து பிழைத்து வருகிறார்கள்! இப்படியே போனால், வெளிநாட்டுக்காரன்தான் அந்த நாட்டில் குடியிருப்பான் என்று ஜெர்மன் அரசு நினைக்கிறதாம்!
இந்த வியாபாத்தில்ஏர்பிஎன்பிநிறுவனம் கொடிகட்டிப் பறக்கிறதாம்!
**



No comments:

Post a Comment