இதோபதேசம்—5
அமெரிக்காவின்
இன்றைய மக்கள்தொகை 324 மில்லியன்; அதாவது 324,884,929; நம்மூர் கணக்குப்படி 32 கோடி; (இந்தியாவின் மக்கள் தொகையோ 125 கோடி!); அமெரிக்காவில் ஓட்டு உரிமை உள்ளவர்களின் எண்ணிக்கை 2012
கணக்குப்படி மொத்தம் 230 மில்லியன் (கிட்டத்தட்ட 23 கோடி);
அமெரிக்காவில்
சுமார் 55% முதல் 60% வரை ஓட்டுபோடப் போவார்களாம்! (நம்மூர் மாதிரிதான்!!); ஆனால் பிரான்ஸ் நாட்டில் 80% வாக்காளர்கள் ஓட்டுப் போட போவார்களாம்! ஆஸ்திரேலியாவில் கட்டாய ஒட்டு சட்டம் உள்ளது; கண்டிப்பாக போய் ஓட்டு போட்டுவிட வேண்டுமாம்; இல்லையென்றால் 20 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதமாம்! எனவே அங்கு 91% ஓட்டுப்பதிவு நடந்து விடுமாம்!
அமெரிக்காவில், ஒரு 29 வயதுப் பெண்
சொல்கிறார்: “அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அசிங்கமாக குற்றம் சுமத்திக் கொள்கின்றனர்; இப்படி இருக்கும்போது, நான் ஏன் நவ-8ல் ஓட்டு
போட வேண்டும்? அன்று ஓட்டுப் போட போக மாட்டேன்” என்கிறார்; இப்படி பல பேர் இருக்கிறார்கள்;
ஓட்டுப்போடுவது
கடமையில்லை, அது ஒரு உரிமை என்கிறார் ஒருவர்; “Voting isn’t necessarily a duty: I
think it’s a right. But I think if you take up that right, it’s your duty to
understand who you’re voting for and why. And, if you choose not to vote, I
think it’s your duty to explain why you haven’t.” அவர் சொல்கிறது நல்லாத்தானே இருக்கு!!
Can’t vote//Won’t vote:
சிலரால், தன் ஓட்டுரிமையை பதிவு செய்து கொள்ள முடியவில்லை; அதனால் அவர்கள் ஓட்டு போட முடியவில்லை, can’t vote; வேறு சிலர், அப்படி ஓட்டு உரிமை இருந்தும், வேலையை விட்டுவிட்டுப் போய் ஓட்டுப் போட விரும்பவில்லை, won’t vote; இப்படி இரண்டு வகை நபர்களாலும் ஓட்டு போடும் மக்கள் குறைகிறார்கள்;
அமெரிக்காவில்
தீவுகளில் வசிப்பவர்களில் 4 மில்லியன் மக்களுக்கு ஓட்டுரிமை இல்லை; அவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை பார்க்கலாம், வரி கட்டலாம், ஜூரியாக இருக்கலாம், மிலிட்டரியிலும் வேலை செய்யலாம்; ஆனால் ஓட்டுரிமை இல்லை! (அந்த அமெரிக்க தீவுகள்: Puetro Rico, Guam, Northern Mariana
Islands, the US Virgin Islands and American Samoa):
கடுமையான
சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை; பெலோனி சட்டம்; இதன்படி சுமார் 6 மில்லியன் பேர் ஓட்டுரிமையை இழந்திருக்கிறார்கள்; இதில் அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள் ஆப்ரிக்கன்-அமெரிக்கர்கள்!
அமெரிக்காவில்
ஓட்டர் ஐடி இருந்தால்தான் ஓட்டுப் போட முடியும்; இளைஞர்கள் அந்த ஐடி கார்டு வாங்குவதில் சோம்பேறித்தனம் கொண்டு அதை வாங்காமல், அதனால் ஓட்டுப் போட முடியாமல் இருக்கின்றனர்;
பொதுவாக, அமெரிக்க மக்களில், ஏழைகள், மைனாரிட்டிகள், இவர்கள் எல்லோரும் கழுதைச் சின்னம் கொண்ட டெமாக்ரெடிக் கட்சிக்கே ஓட்டுப் போடுவார்களாம் (அதாவது ஓபாமா கட்சி);
இதை எழுதியது தேர்தலுக்கு முன்னால்; ஆனால் இப்போது ரிபப்ளிகன்
கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றுள்ளார்;
**
No comments:
Post a Comment