கந்தரலங்காரம்-18
வையின் கதிர்வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்று
நொய்யில் பிளவேனும் பகிர்மின்கள் நுட்கட்கு இங்ஙன்
வெய்யிலுக்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல்போல்
கையில் பொருள் உதவாது காணும் கடைவழிக்கே!
(வையின்= கூர்மை) கூர்மையினை உடைய கதிர்களை வீசும்
வேலாயுதத்தை உடைய கடவுளை வாழ்த்தி, வறியவர்களுக்கு ஒரு நொய் அளவு அரிசியில் பாதி
அளவாவது பகிர்ந்து கொடுங்கள்! உங்களுக்கு இந்த உலகத்திலே, வெயிலுக்கு ஒதுங்கக்கூட
பயன்படாத வீணாண நிழல் போல, கையில் உள்ள செல்வத்தை நீங்கள் வைத்திருந்தால், அது
உங்களின் கடைசி வழியான மரணத்தில் பயன்படாது போகும் என்பதை அறியவும்)
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-18)
**
No comments:
Post a Comment