Sunday, December 18, 2016

இதோபதேசம்--3

இதோபதேசம்--3
உலகிலேயே, முதன்முதலில் கனடா நாட்டின் க்யூபெக் மாநிலத்தில்தான் 1977ல் ஒரேபால் இன உறவுகள் தவறு இல்லை எனவும், அதனால் அவர்களை வேறுபடுத்திப் பார்க்க கூடாது எனவும் அறிவித்தது; ஏன் இதைச் சொல்லவேண்டும் என்றால், பிரிட்டீஸ் ஆண்ட காலனி நாடுகள் எல்லாம் இதை தவறு என்றே இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன; குறிப்பாக, இந்தியாவில் உள்ள இந்தியன் பீனல் கோடு (The Indian Penal Code 1860) சட்டம் 1860-ல் பிரிட்டீஸ் அரசால் கொண்டு வரப்பட்டது; இன்னும் அதே சட்டம்தான் அமலில் இருந்து வருகிறது; அதில், 16-வது அத்தியாயத்தில், செக்ஷன்: 377 இதைப் பற்றி பேசுகிறது; இதை இயற்கைக்கு மாறான உறவுகள் என்று சொல்கிறது;
இந்த செக்ஷன் 377  தவறில்லை என்றும், ஒரே பால் இனத்தைச் சேர்ந்தவர்கள் விருப்பப்பட்டு, மறைவிடத்தில் அவர்களுக்குள் உறவு வைத்துக் கொண்டால், அது இந்த ஐபிசி சட்டப்பிரிவு 377-ன்படி தவறில்லை என்று இந்தியாவின் டெல்லி ஐகோர்ட் 2009ல் ஒரு தீர்ப்பை வழங்கியது; நாடே, ஆதரவும் எதிர்ப்புமாக கிளம்பியது; வழக்கு இந்திய சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனது; 2013 டிசம்பர் 11-ல் அதில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது, “பிரிவு 377-ன் படி ஒரேபால் உறவுகள் தவறுதான் என்றும், டெல்லி ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பை மாற்றியது” ; ஆனாலும், இந்தப் பிரிவை, ஒருபால் உறவுக்காரர்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள இந்திய பார்லிமெண்டுக்குத்தான் அதிகாரம் உண்டு என்று அந்த தீர்ப்பில் சொல்லி விட்டது; ஆனாலும், விடுவதாக இல்லை; அந்த தீர்ப்பை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்ய க்யூரேடிவ் பெட்டிஷன்கள் பல போடப்பட்டன; அது 2016 பிப்ரவரி 2-ல் விசாரனைக்கு வந்தது; அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டி வழக்கை தள்ளி வைத்து உள்ளது;
அமெரிக்காவில்: கேவின் கிரிம் வழக்கு (Gavin Grimm); இது வேடிக்கையாகத் தெரிந்தாலும், மனித இனத்தின் கலாச்சார மாற்றத்தை கவலையுடனும் சோகத்துடனும் வெளிப்படுத்துகிறது; அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள்; அதில் டிரான்ஸ்ஜென்டர் மாணவர்களும் உள்ளனர்; டிரான்ஸ்ஜென்டர் பாலினத்தில் இரண்டு வகைகள் உண்டு; ஆணாகப் பிறந்து பின் பெண்ணாக மாறியவர்கள்; பெண்ணாகப் பிறந்து பின்னர் ஆணாக மாறியவர்கள்; பொதுவாக முதல்வகைதான் அதிகமாக இருக்கும்; அந்த பள்ளிக்கூடத்தில் பாத்ரூம் இருக்கிறது; அங்கு அதை ரெஸ்ட்ரூம் என்பர்; அதில் ஆண்களுக்கு தனி பாத்ரூம், பெண்களுக்கு தனி பாத்ரூம்; ஆனால், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவரையும், அதேபோல பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவரையும் (இந்த டிரான்ஸ்ஜென்டர் வகையினரை) எந்த பாத்ரூமுக்கு அனுப்புவது என்று குழப்பம்; அவர்களின் பிறப்புச் சான்றிதழ் ஆண் என்றே இருக்கும்; பள்ளிக்கூடத்திலும் அவர்கள் ஆண் என்றே குறிப்பிடப் படுகின்றனர்; ஆனால், உண்மையில் அவர்கள் பெண்ணாக மாறிய டிரான்ஸ்ஜென்டர் பிரிவினர்; ஆனால் பள்ளி நிர்வாகம், இவர்களை ஆண்கள் பாத்ரூமுக்கே அனுப்புகிறது; இவர்களோ பெண் மனநிலையில் இருப்பவர்கள்; ஆண்களின் பாத்ரூம் என்பது இவர்களுக்கு எதிர்பாலினரின் பாத்ரூம் ஆகும்; இது இவர்களுக்கு பிடிக்கவில்லை; (வெட்கமாக இருக்கும் அல்லது பாலின ஆசையைத் தூண்டும்);
இந்த வழக்கில் உள்ள மாணவன் கேவின் கிரிம் (Gavin Grimm); இவன் பிறப்பில் பெண்ணாகப் பிறந்து பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, பெண்தன்மை குறைந்து, ஆண்தன்மை அதிகமாகி, அதனால் ஆண் ஆனவன்; இவன் ஆண்கள் பாத்ரூம்க்கு செல்லவே விரும்புகிறான்; அப்படியே செய்கிறான்; இதை அங்குள்ள மற்ற ஆண்களின் பெற்றோர்கள் ஆட்சேபிக்கிறார்கள்; எனவே நிர்வாகம் அவனை ஆயாக்கள் உபயோகிக்கும் தனி பாத்ரூம்க்கு அனுப்புகிறார்கள் (வெகுதொலைவில் உள்ளது); இவ்வாறு செய்வது இவனைத் தனிமைப் படுத்தி பார்ப்பதுபோல இருக்கிறது;
எனவே அந்த பள்ளியில் படிக்கும் இந்த டிரான்ஸ்ஜென்டர் மாணவன், இந்த பள்ளிக்கூட நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு போனான்; ஜூனியல் ஸ்கூல் படிக்கும்வரை சிறுவர்கள் பொது பாத்ரூமைத் தான் உபயோகிப்பர்; சீனியர் ஸ்கூல் சேரும்போது, தனி பாத்ரூம் போவார்கள்; இதை எதிர்த்து கேவின் கிரிம் வெர்ஜீனியா மாவட்ட கோர்ட்டில் வழக்குப் போடுகிறான்; அதை மாவட்ட கோர்ட் தள்ளுபடி செய்கிறது; எனவே அவன் 4-வது சர்க்யூட் அப்பீல் கோர்ட்டில் அப்பீல் செய்கிறான்; அந்த 4-வது சர்க்யூட் கோர்ட், இவனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகிறது; இவன் இப்போது எப்படி மாறி இருக்கிறானோ அந்த பாலின பாத்ரூம் தான் போக அனுமதிக்க வேண்டும் என்று அப்பீல் கோர்ட் தீர்ப்பு; 4-வது சர்க்யூட் கோர்ட் என்பது வெர்ஜீனியா, கரோலினா, மேரிலாண்ட் என மொத்தம் 5 மாநிலங்களுக்கு உள்ள அப்பீல் சர்க்யூட் கோர்ட்; எனவே இந்த தீர்ப்பு அந்த 5 மாநிலங்களையும் கட்டுப்படுத்தும்;
எனவே இப்போது, மாநில அரசு, அதற்கு மேல் அப்பீல் வழக்கை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் போட்டுள்ளது; இது மொத்தம் 8 நீதிபதிகள் அடங்கிய அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முன்னர் விசாரனைக்கு வருகிறது; (அமெரிக்காவில் மொத்தம் 9 நீதிபதிகள் உண்டு; ஆனால் ஒருவர் இறந்து விட்டதால், இப்போது 8 நீதிபதிகளே உள்ளனர்);
பொதுவாக ஒற்றைப் படை எண்ணில் தான் நீதிபதிகள் பெஞ்ச் அமர்வு இருக்கும்; அப்போதுதான் மெஜாரிட்டி தீர்ப்பு கிடைக்கும்; இப்போது 4-க்கு 4 (4-4) என்று எண்ணிக்கையில் தீர்ப்பு வந்தால், அதற்கு மேல் எந்த அப்பீலுக்கும், அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமர்வுக்கு அதை அனுப்ப வழியில்லை; எனவே அமெரிக்க சட்டதிட்டப்படி, கீழ்கோர்ட்டான, சர்க்யூட் கோர்ட் தீர்ப்பையே சரி என்று எடுத்துக் கொள்ளலாமாம்! (அங்குள்ள சட்டம் அப்படி!);
வேறு ஒரு மாணவன் தன் மனக்குமுறலைச் சொல்கிறான், “நானும் டிரான்ஸ்ஜென்டர்தான்! ஆணாகப் பிறந்து பெண் மனநிலையில் வாழ்பவன்; நான் பள்ளிக்கூடத்தின் ஆண்கள் பாத்ரூமை உபயோகிக்க பையன்கள் மறுக்கிறார்கள்; பெண்கள் பாத்ரூம் போக, நிர்வாகம் விட மறுக்கிறது; ஆனால், தனிபாத்ரூம் உள்ளது; அது டிரான்ஸ்ஜென்டர் என்று தனியாக உள்ளது; இல்லையென்றால், நான் ஒரு டிரான்ஸ்ஜென்டர் என்பதற்கு அடையாளமாக ஒரு ஐடி கார்டு தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமாம் அல்லது கையில் ஒரு கலர் ரிப்பன் கட்டிக் கொள்ள வேண்டுமாம்! இப்படியெல்லாம் என்னை ஏன் விலக்கிப் பார்க்கிறீர்கள்; நான் பெண் மனநிலையில் இருப்பதால், என்னை பெண்கள் பாத்ரூமை உபயோக்கிக்க அனுமதிக்க வேண்டும்; கல்வி நிறுவன சட்டத்தின்படி, மாணவர்களை வேறு காரணங்களுக்காக வேறு படுத்திப் பார்க்க கூடாது என்ற சட்டமே உள்ளதே! அதை மதித்து நடங்கள்என்று குமுறுகிறான் அந்தச் சிறுவன்;
அமெரிக்க சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!



No comments:

Post a Comment