Sunday, December 18, 2016

இதோபதேசம்—6

இதோபதேசம்—6
2007 முதல் 2013 வரை      ஆஸ்திரேலியாவின் லேபர் பார்ட்டி கட்சி ஆட்சியில் இருந்தது; 2013லிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி இருக்கிறது; இதில் மால்கம் டன்புல் (Malcolm Turnbull) பிரதமராக உள்ளார்;
அகதிகளுக்கு ஆதரவு கொடுப்பதில் ஆஸ்திரேலியாவும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது; இப்போது அதன் சட்ட திட்டங்களை மாற்றிக் கொள்ள நினைக்கிறது; 2013க்குப் பிறகு கடல் வழியில் படகு வழியாக ஆஸ்திரேலிய மண்ணில் வந்து சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் (asylum to refugees) கொடுக்க முடியாது என்று சட்டம் வருகிறதாம்! “Australia plans to ratchet up its tough policy against refugees by banning any asylum seeker who attempts to reach its shores by boat from ever visiting the country.”
இன்று ஆஸ்திரேலிய பிரதமர்; அந்த மால்கம் டன்புல், தான் சிறுவயதில் கஷ்டப்பட்டு வளர்ந்த கதையை சோகத்துடன் விவரிக்கிறார்; “நான் ஆரம்ப பள்ளியில் படிக்கும்போதே, என் தாய் என்னையும் என் தந்தையையும் விட்டு விலகிப் போய் விட்டார்; என் அப்பா ஒரு ஹோட்டல் புரோக்கர்: எங்களுக்கு குடியிருக்க வீடு எதுவும் இல்லை; ஒரு சிறு அறை கொண்ட ப்ளாட்டை வாடகைக்கு எடுத்தார்; அதில் உட்கார சேர் கூட போட முடியவில்லை; நான் படுக்கும் விரிப்புத்தான் எனக்கு சேர், சோபாசெட், டேபிள் எல்லாம்; இதைப் பார்க்கும்போது என் தந்தை வருத்தப்படுவார்; இவ்வளவு ஏழ்மை நிலையில் வாழ்ந்த போதிலும், என் தாய் எங்களை விட்டுப் பிரிந்து போன போதிலும், என் தந்தை, என் தாயைப் பற்றி தவறாக எதுவுமே சொல்ல மாட்டார்;  என் தந்தை ஒரு விமான விபத்தில் அவரின் 56 வயதில் காலமாகி விட்டார்; என் தாய் 1991ல் இறந்தார்; இதற்குப் பின்னர் எனக்குத் தெரிந்தது, ‘அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் லெட்டர் எழுதிக் கொள்ளும் பழக்கம் அவர்களுக்குள் இருந்திருக்கிறது’; அந்த லெட்டர்களில் எல்லாம், ‘நீ செய்ததுதான் தவறு, நான் சரியாகத்தான் நடந்து கொண்டேன்என்றும், ‘ஏன் நீங்கள் அதைச் செய்தீர்கள்என்றும் ஒருவருக்கொருவர் குறை கண்டே எழுதி இருக்கிறார்கள்; “The Letters, they were filled with sadness and reproach and you know, ‘How could you do this?’ and “Why did you do that?’ and the back and forth.”
இப்படியெல்லாம் மனைவியை குறைசொல்லி கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் என் தந்தை, என்னுடன் இருக்கும்போது, என் அருகில் உட்கார்ந்து, “Your mother is the greatest woman in the world and she loves you more than anything.” என்று எனக்குச் சமாதானம் சொல்வார்; “What a man. What a great man.” தன் தந்தையை நினைத்து புளகாங்கிதம் அடைகிறார் இன்று;
அதிபர் தேர்தலுக்கு முன்னர் இவர் இவ்வாறு பேசியதை 5 லட்சத்துக்கும் அதிகமானோர்  facebookல் பார்த்துள்ளனர்;  அதில் ஒரு கிழவி, தன்னை அவரின் பாட்டியாக நினைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, “உன் அப்பனுக்கு நான் ஓட்டுப் போடமாட்டேன்என்று சொல்லி உள்ளது வியப்பளிக்கிறது;
ஆஸ்திரேலியாவில் இந்த 2016ல் ஜூலை 2ல் தேர்தல் நடந்தது; அதில் ஏற்கனவே பிரதமராக இருந்த மால்கம் டன்புல் அவர்களே மீண்டும் பிரதமர் ஆனார்; 150 எம்பிக்கள் கொண்ட மக்கள் சபைக்கு இவரின் கட்சி ஆட்சியை பிடித்தது; இவரின் கட்சியில் 76 எம்பி-க்கள் ஜெயித்தனர்;
டன்புல் மறுபடியும் பிரதமர் ஆனார்; ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெராவில் உள்ள அரசாங்க மாளிகையில் பதவிப் பிரமணம்; இதை அந்த நாட்டின் கவர்னர் ஜெனரல் பீட்டர் காஸ்க்ரோ நடத்தி வைக்கிறார்: இந்த கவர்னர் ஜெனரல் இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்தின் பிரதிநிதியாக இருந்து நடத்துகிறார்;


No comments:

Post a Comment