Sunday, December 18, 2016

இதோபதேசம்—7

இதோபதேசம்—7
Miami – மியாமி ஒரு கடற்கரை நகரம்; இது ஒரு ஹாலிடே ரிசார்ட்; அமெரிக்காவின் தென்-கிழக்குப் பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தில் இது உள்ளது;
Jennifer Lynn Lopez: ஜெனிபர்; இந்தப் பெண்மணிக்கு இப்போது 47 வயதாகிறது; இவர் ஒரு பிரபலமான அமெரிக்கன் பாடகி, டான்ஸர், நடிகை, பேஷன் டிசைனி, கதையாசிரியை, படத் தயாரிப்பாளனி என பல சிறப்பு பெற்றவர்;
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கிளாரி கிளின்டன், இந்த பாடகியுடன் மேடை ஏறி ஒரு நிகழ்ச்சி நடத்தி உள்ளார்; இது மியாமியில் நடந்துள்ளது; வெளியில் கொட்டும் மழையில் இந்த நிகழ்ச்சி ஆம்பி-தியேட்டரில் நடந்துள்ளது; இந்தப் பிரபல பாடகி, தன் பிரபல பாடல்களான “Let’s Get Loud” and “On the Floor” என்ற பாடலைப்பாடி ரசிகர்களை கிறங்க அடித்துள்ளார்;
நிகழ்ச்சியின் கடைசி பாடலில் மேடை ஏறிய கிளாரி கிளின்டன் ஒரு கையில் பீர் கோப்பையுடன் அந்த பாடகியை அணைத்து தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்: இந்த பாடல் நிகழ்ச்சி கிளாரி தேர்தல் ஆதரவாக செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும்!
கிளாரி கிளின்டனின் -மெயில் சர்ச்சை இன்னும் தீர்ந்த பாடில்லை;
**
Robert Muller ராபர்ட் முல்லர்: இவர் இதற்கு முன்னர் அமெரிக்க எப்பிஐ (FBI) டைரக்டராக இருந்தவர்; இவர் அந்தப் பதவியில் அதிக காலம் இருந்தவர் என்ற பெருமையும் பெற்றவர்; 2001 முதல் 2013 வரை; ஜனாதிபதி புஷ் காலத்தில் நியமிக்கப் பட்டவர்; ஒபாமா காலத்திலும் தொடர்ந்தார்; 2013க்கு பின்னர் இவரை அடுத்து புதிய டைரக்டர் வந்துவிட்டார்; ராபர்ட் முல்லர் ரிட்டையர் ஆகி விட்டார்;
இந்த ராபர்ட் முல்லர் ஒரு வழக்கறிஞர்; 7-ம் தேதி பிறந்தவர்; 7ல் பிறந்தவர்கள் எல்லோருமே பிரபல்யமான வழக்கறிஞர்களாக இருந்திருக்கிறார்கள்! இவர் வெர்ஜீனியா லா ஸ்கூலில் ஜூரிஸ் டாக்டர் சட்டப்படிப்பை 1973ல் படித்தவர்;
Juris Doctor ஜூரிஸ் டாக்டர் என்பது சட்டப்படிப்பு; இந்தியாவில் பி.எல். முடித்து எம்.எல். படிப்பு படிப்பது போலடாக்டர் ஆப் லா அல்லது J.D. என்று பெயர்: Doctor என்ற லத்தீன் வார்த்தைக்கு டாக்டர் என்றே பொருள் கொள்ளக் கூடாது; டீச்சர் என்றதான் பொருள்; Juris Doctor =Teacher of Legal knowledge என்றுதான் பொருள்;
முல்லர், படிப்பு முடிந்தவுடன் அட்டார்னி ஆபீஸில் 12 வருடங்கள் வக்கீலாக இருந்திருக்கிறார்; பின்னர் கலிபோர்னியா மாநிலத்தின் அட்டார்னியாகவும் இருந்திருக்கிறார்; 2001ல் எப்.பி.. டைரக்டராக நியமிக்கப் படுகிறார்; இவருடன் மேலும் இரண்டு பேர்கள் அந்தப் பதவிக்கு போட்டி இடுகிறார்கள்; செனட்டர்கள் 98-0 என்ற ஓட்டில் வெற்றி பெறுகிறார்; இவர் எப்.பி.. டைரக்டராக  செப் 4, 2001ல் பதவி ஏற்கிறார்; ஆனால் செப் 11 நிகழ்வு அமெரிக்காவை உலுக்கியது;
2011ல் ஒபாமா அதிபராக வருகிறார்; மேலும் இரண்டு வருடங்களை முல்லரே தொடரும்படி கேட்டுக் கொள்கிறார்; அதனால் 2013 செப் வரை பதவியில் இருந்தவர்; அதிக காலம் அந்த பதவியை வகித்தவரும் இவரே!
**
முல்லருக்கு அடுத்து அமெரிக்க எப்.பி.. டைரக்டர் பதவிக்கு வந்தவர் ஜேம்ஸ் காமே James Camey: 1960ல் பிறந்தவர்; கொலம்பியா லா ஸ்கூலில் படித்தவர்; இவரின் தகப்பனார் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை பார்த்தார்; ஐரிஸ் வம்சா வழியைச் சேர்ந்தவர்; 1982தான் பட்டப் படிப்பை முடித்தார்; பின்னர் சிகாகோ லா ஸ்கூலில் ஜே.டி சட்டப் படிப்பை முடித்தார்; அதிபர் ஒபாமா காலத்தில் 2013ல் இவர் எப்.பி.. டைரக்டராக நியமிக்கப் படுகிறார்; இன்றுவரை அதில் தொடர்கிறார்;
இவர்தான், கிளாரி கிளின்டன் ஈமெயில் விவகாரத்தில், இப்போது புதிய பிரச்சனையை கிளப்பி விடுகிறார்; தேர்தல் நேரத்தில் இப்படி வெளிப்படையாக பேசக்கூடாது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்;
**



No comments:

Post a Comment