இதோபதேசம்—9
பெல்வா லாக்உட்
Belva Lockwood
இவரைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே
இதை எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது; இவர் 1830ல் பிறந்த பெண்மணி; அமெரிக்க சுப்ரீம்
கோர்ட் வரலாற்றிலேயே முதன் முதலாக அங்கு வக்கீல் ஆன பெண்மணி; மிகுந்த போராட்டத்துக்குப்
பின்னரே அது சாத்தியம் ஆகி உள்ளது;
திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தவுடன் கணவர் இறந்து விட்டார்;
அப்போது இவருக்கு வயது 22; பள்ளிக்கூட டீச்சர்
ஆகிறார்; காலேஜ் படிக்கிறார்; பின்னர் சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க மனு போடுகிறார்;
ஆனால் இவரின் மனு நிராகரிக்கப்படுகிறது; காரணம் என்னவென்றால், “நீங்கள் ஒரு பெண்: இங்கு
ஆண்கள் மட்டுமே படிக்கிறார்கள்; உங்களை அனுமதித்தால், இங்குள்ள ஆண்களின் மனது படிப்பில்
கவனம் செல்லாது; எனவே அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கடிதம் வருகிறது; ஆனால் சளைக்காமல்
பல்கலைக்கழக துணை வேந்தருக்கு விடாமல் கடிதம் எழுதுகிறார்; வேறு வழியின்றி இவரை சட்டம்
படிக்க அனுமதிக்கின்றனர்;
ஒருவழியாக சட்டம் படித்து, பெண்வக்கீல் ஆகி, முதன் முதலில்
9 நீதிபதிகள் கொண்ட அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய முதல் பெண்மணி இவரே தான்!
பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காதுதான்; நாம் தான் அதை எடுத்துக்
கொள்ள வேண்டும்; சரிநிகர் சமானமும் கிடைக்காதுதான்; நாம் தான் அதை அதிகாரத்துடன் நிலைநிறுத்த
வேண்டும்” என்கிறார்;
“WE shall never have equal rights until we take them,
nor equal respect until we command it.”
**
No comments:
Post a Comment