Saturday, May 14, 2016

பூனையின் கின்னஸ் ரெக்கார்டு


பூனையின் கின்னஸ் ரெக்கார்டு

பூனையின் வயது 30ஐ தாண்டி விட்டது ஒரு கின்னஸ் சாதனையாம்! இன்று உலகில் மிக மூத்த பூனை இதுதானாம்! இது பிறந்த தேதி மார்ச் 26, 1986. பிறந்ததிலிருந்தே அதன் பாதுகாவலரான Gail Floyd அவர்களிடம் வசித்து வருகிறதாம். இந்த பூனையை பூனை என்று சொல்லக்கூடாது என அதற்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார். அந்த பூனையின் பெயர் ஸ்கூட்டர் Scooter. இந்த ஸ்கூட்டர் (பூனை) இதுவரை அமெரிக்காவின் மொத்த மாநிலங்களான 50 மாநிலங்களையுமே தன் ஓனருடன் பயணம் செய்து பார்த்து விட்டதாம். இன்னும் வேறு நாடுகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதாம்.
அதே நேரத்தில், ..... உலகில் மூத்த பெண்மணியான 116 வயது பெண்மணியான அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த சூசன்னா ஜோன்ஸ் இப்போதுதான் இறந்திருக்கிறார். இவருக்கு முன்னர், ஏப்ரல் 2015ல் ஜப்பானில் வாழ்ந்த 117 வயது பெண்மணியான மிசாவோ ஒக்காவா என்பவர் டோக்கியோவில் வாழ்ந்தவர் கின்னஸ் ரெக்கார்டு செய்தவர்.
பெண்கள்தான் அதிக வயதுவரை உயிருடன் இருந்திருக்கிறார்கள்.

**

மேக்ரோ மாலிகூள் (எல்லா நோய்க்கும் ஒரே மருந்து)


மேக்ரோ மாலிகூள் Macromolecule
எல்லா நோய்க்கும் ஒரே மருந்து இருக்கிறதா என்று ஒரு ஆசை இருக்கும்! இப்போது IBM Research என்ற நிறுவனம் அதை கண்டுபிடித்திருக்கிறது.
அதன் பெயர் தான் மேக்ரோ-மாலிகூள்! எபோலா, ஜிக்கா, டெங்கோ, ஹெர்பஸ் போன்ற எல்லா வகையான நோய்களுக்கும் ஒரே மருந்துதான் அந்த மேக்ரோ-மாலிகூள்! இதன் குணமே, நல்ல ஆரோக்கியமான செல்களை உருவாக்குவது, வைரஸ் பெருகுவதை அழிப்பது, மற்றும் நமது உடம்பின் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது.
எல்லா நோய்க்கும் ஒரே மருந்து என்பதால், இதைச் செல்லமாக “மேஜிக் புல்லட்” ‘Magic bullet’ என்று பெயர் வைத்திருக்கின்றனராம்.

**

வெள்ளைக் கப்பல்


வெள்ளைக் கப்பல்
1120-ம் வருடம். கிட்டத்தட்ட 890 வருடங்களுக்கு முன்னர் நடந்த வெள்ளைக் கப்பல் விபத்து. இங்கிலீஷ் கால்வாயில் நடந்தது. மன்னரின் ஒரே மகனும், அரச வாரிசுமான இளவரசர் இந்த விபத்தில் இருந்து விடுகிறார். அப்போது ஹென்றி-1 மன்னர் ஆட்சி செய்கிறார். வில்லியம் என்னும் தன் ஒரே மகனே வாரிசாக அரசனாக வருவார் என்று பலத்த நம்பிக்கையுடன் இருக்கிறார். வில்லியம் சிறுவனாக, 17 வயதாக இருக்கும்போதே, தன் தந்தைக்கு துணையாக பிரான்ஸ் மன்னருடன் போரிட்டவர். அந்த போரில், பிரான்ஸ் மன்னர் லூயிஸ்-4 தோற்று விட்டார்.
வெற்றிக் களிப்புடன் இங்கிலாந்துக்கு கப்பலில் திரும்பி வருகிறார். அந்தக் கப்பலுக்கு பெயரே “வெள்ளைக் கப்பல்” The White Ship. ஆனால் விதி வேறு விதமாக இருக்கிறது. ஹென்றி மன்னர் அந்தக் கப்பலில் வருவதாக ஏற்பாடு. ஆனால், அவரோ, இதில் தன் மகன் வில்லியம் பயணம் செய்யட்டும் என்று கூறி, அவரின் பிரயாணத்தை மாற்றிக் கொள்கிறார். இளவரசர் வில்லியம்முடன் சுமார் 300 பேர் பிரயாணம் செய்கிறார்கள். அதில், 140 போர் வீரர்களும், 18 அரச குடும்ப பெண்களும் அடங்குவர். அதில், இளவரசரின் பாதி-சகோதரர் ரிச்சர்டு, பாதி-சகோதரி மடில்டா (பாதி என்பது, தன் தகப்பனாரின் மற்றொரு மனைவியின் மகன்) மற்ற குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர். போரில் வெற்றி பெற்று வருவதால், பீப்பாய் பீப்பாயாக ஒயின் மது கொண்டு வருகின்றனர். ஒரே கொண்டாட்டம். மது போதை அதிகமாகி விட்டது. ஒருவரை ஒருவர் கத்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். உச்சக் கட்டத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். மதகுருமார்களும் வருகிறார்கள். அவர்களை வெளியேறும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். ஒரு சிலருக்கு பேதி ஆகி படுக்கையில் இருக்கிறார்கள். அவர்களையும் வெளியேறும்படி அடாவடி செய்கிறார்கள்.
கப்பல் புறப்படுவதற்கு முன்னரே இத்தனை களேபரம். கப்பல் புறப்பட்டு கடலுக்குள் செல்கிறது. போதையில் இருந்த வீரர்கள், இளவரசர் இருக்கும் இடத்தைவிட்டு தூரத்தில் போதையில் மிதக்கிறார்கள். மற்ற கப்பல்கள், இளவரசர் பயணம் செய்யும் கப்பலுக்கு முன்னே செல்கிறது. இளவரசருக்கோ ஒரே குறுகுறுப்பு. நான் மட்டும் முன்னதாக இங்கிலாந்துக்கு போய் விடவேண்டும் என நினக்கிறார். இவரின் கப்பல் கேப்டனிடன், “கப்பலை வேகமாக விடு; நாம் எல்லாக் கப்பல்களையும் முந்தி சென்றுவிட வேண்டும்” என்று கட்டளை இடுகிறார். இளவரசர் கப்பல் மிதக்காமல் பறக்கிறது. கப்பலை ஓட்டுபவரும் போதையில் மிதக்கிறார், பறக்கிறார். வெள்ளைக் கப்பலும் போதையில் மிதந்து பறக்கிறது. நடுவில் பாறைகள் இருக்கும் என்பதால், பார்த்துத்தான் கப்பலை ஓட்ட வேண்டும்.
போதை, பாறையை மறைத்ததால், கப்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இளவரசரின் பாதி-சகோதரி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் யாரும் கேட்பதாக இல்லை. கப்பலை திருப்பி விடச் சொல்கிறார் இளவரசர். அந்தோ! விதி விளையாடி விட்டது! ஒன்றும் செய்ய முடியவில்லை. கப்பல் பாறையில் மோதிக் கவிழ்ந்தது. எல்லோரும் கடலுக்குள் மூழ்கி விட்டார்கள். ஒரே ஒருவரை மட்டும், இந்த தகவலைச் சொல்தற்காக, கடவுள் உயிருடன் விட்டுவிட்டார். அவர், ஒரு சமையல்காரர். இறந்தவர்களின் உடல்கள் கரை ஒதுங்க, ஒருமாதம் ஆகிவிட்டது.
மன்னர் ஹென்றிக்கு இந்த தகவல் தெரியவருகிறது. இந்த சேதியைக் கேட்டு கலங்கி விட்டார் மன்னர். அன்றுமுதல், அவரின் வாழ்நாள் வரை, அவரின் முகம் சிரிப்பை மறந்தது. ஒரே மகன், தனக்குப் பின், அரச வாரிசு என்று கருதிய மகன், கடலில் பிணமாகக் கிடக்கிறான்.
ஆண் வாரிசு போய் விட்டது. ஹென்றி மன்னருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உயிருடன் இருக்கிறார். அவர் வேறு கப்பலில் வந்தவர். மகள் பெயர் மடில்டா Matilda. நாட்டின் முக்கிய பிரமுகர்களின் சம்மதத்தைப் பெற்று, வழக்கத்துக்கு மாறாக, தன் மகளை அரச பதவிக்கு வாரிசாக நியமிக்கிறார். ஹென்றி மன்னர் இறப்புக்குப் பின், தன் மகள் மடில்டா, இங்கிலாந்து நாட்டின் ராணியாக வரவேண்டும் என்று சட்டம் ஏற்படுத்தி வைக்கிறார். ஒரு பெண்ணை, இங்கிலாந்தின் ராணியாக ஏற்க, நாட்டில் பலத்த எதிர்ப்பும் இருக்கிறது. ஹென்றி மன்னர் இறக்கிறார். இந்த சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தி, இறந்த ஹென்றி மன்னரின் சகோதரனின் மகன் ஸ்டீபன் புளாஸ் அரச பதவிக்கு வந்து விடுகிறார். இதிலிருந்து நாட்டில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு விட்டது.
இங்கிலாந்தில் ஆண் வாரிசுகள் வரக்கூடாது என்று ஏதாவது கடவுளின் கட்டளை (விதி) இருக்குமோ?

**

மோர்கனாட்டிக் திருமணங்கள்

மோர்கனாட்டிக் திருமணங்கள் 
Morganatic marriages

இதை “இடதுகை கல்யாணம்” ‘Left-handed marriage’ என்று பரவலாகச் சொல்லிக் கொள்கிறார்கள். மணமகன், மணப்பெண்ணை, அவனின் இடது கையால், அவளின் வலது கையைப் பிடித்துக் கொண்டு திருமணம் செய்வது.
உயர்பிரிவைச் சேர்ந்தவன், குலத்தில் குறைந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைத்தான் இந்த பெயர்களில் சொல்லிக் கொள்கிறார்கள்.
இது இப்போது வந்த பிரச்சனை இல்லையாம். காலம்காலமாக இதை கடைப்பிடித்து வந்திருக்கிறார்களாம். அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆண், அதே பாரம்பரியத்தில் பிறந்த ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டுமாம். அப்போதுதான், அந்த பெண்ணுக்கு அவள் கணவனின் அரச பதவி, அரச போகம், அரச உரிமை, அரச சொத்துக்கள் கிடைக்குமாம். இல்லையென்றால், ஒரு “வைப்பாட்டி” நிலைதான்! அவளுக்கு பிறக்கும் குழந்தைகள் அரச பதவிக்கு வர முடியாதாம்.
ஒரு மன்னர், அதே பாரம்பரியத்தில் உள்ள ஒரு அரச குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால், அவள் “ராணி” என்ற அந்தஸ்த்தைப் பெறுவாள். ஆனால், மன்னர், ஒரு குறைந்த பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தன் மனைவியாக தேர்ந்தெடுத்தால், அவளுக்கு “ராணி” என்ற அந்தஸ்து கிடைக்காது. அவளுக்கு பிறக்கும் பிள்ளைகளும், அரச பதவி எதற்கும் வர முடியாது. இளவரசர் பட்டமும் கிடைக்காது.
அவ்வாறு திருமணம் செய்த அந்த பெண்ணுக்கு, எந்த அந்தஸ்தும் இல்லை என்பதால், மணமகனாகப் பார்த்து ஒரு சொத்தை, பணத்தை, பொருளை கொடுப்பார். அதைக் கொண்டு அந்தப் பெண்ணும் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளலாம். அதை அவன், அந்த திருமணம் நடந்த முடிந்த மறுநாள் காலையில் கொடுப்பானாம்! எனவே அதற்கு “காலை பரிசு” ‘Morning Gift’  என்று சொல்வார்களாம். அந்த லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்த வார்த்தைதான் மோர்கனாடிக் திருமணம் என்று பெயர் வந்ததாம்.
ஜெர்மன் நாட்டில் முதன்முதலில் இந்த பழக்கம் இருந்திருக்கிறது. அது பின்னர் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்தியாவின் “வைப்பாட்டி” முறையும் இப்படித்தான் வந்திருக்குமோ?
செங்கிஸ்கான் மன்னர், தன்னுடைய தலைமை மனைவியான ராணி தவிர, இவ்வாறு பல மோர்கனாட்டிக் திருமணங்களை செய்திருக்கிறாராம்.
ஆண்கள் மட்டுமல்ல, ராயல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளும் இந்த மோர்கனாடிக் திருமணங்களைச் செய்திருக்கிறார்கள். அரச குடும்ப பெண்கள், சாதாரண ஆண்களைத் திருமணம் செய்திருக்கின்றனர். ஒன்றாம் நெப்போலியனின் மனைவி ராஜகுடும்பத்தைச் சேர்ந்த மேரி லூயிஸ். ஒன்றாம் நெப்போலியன் இறந்தவுடன், இந்த ராணி, தன்னிடம் வேலை செய்து வந்த ஒரு சாதாரண நபரை, இந்த மோர்கனாட்டிக் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக வரலாறு சொல்கிறது.
பிரான்ஸின் 2-ம் ஹென்றி மன்னருக்கு ஏற்கனவே காத்தரின் என்ற ஒரு மனைவி ராணி பதவியில் இருக்கும்போதே, டையானா என்ற 35 வயது விதவையுடன் கள்ள உறவு ஏற்பட்டு, அவளை தன் ராணி போலவே நடத்தி வந்தார் என்றும் வரலாறு சொல்கிறது.
ஜெர்மனியில், ஒரே குலத்தில் பிறந்த ஆண்-பெண்களுக்குள்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடுமையாக இருந்தது. இடதுகை திருமணங்கள் சட்டபூர்வமாக அங்கீகாரம் பெறவில்லை. இப்படி பல நாடுகளிலும் வேறு வேறு முறைகளில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில், பழைய திருவாங்கூர் மாநிலத்தில், “மருமக்கள்-தாயம்” என்ற முறை இருந்து வந்திருக்கிறது. அங்குள்ள ராஜ பரம்பரைப் பெண்கள், நாயர் வகுப்பைச் சேர்ந்த ஆண்களைத்தான் திருமணம் செய்வார்கள். இங்கு பெண்கள்தான் குடும்பத்தின் தலைவி. அவரைச் சுற்றித் தான் அந்த குடும்பம் இயங்கும். அவர்களை தரவார்டு என்பர்.
தற்போதுள்ள ஜாதிகளுக்குள்ளேயே நடத்தும் திருமணங்களும், ஜாதிகளைத் தாண்டி நடக்கும் திருமணங்களும் இதன் அடிப்படையில்தானோ!

**

Wednesday, May 4, 2016

ஒருபால் திருமணம்

ஒருபால் திருமணம்

ஒருபால் திருமணங்கள் இப்போது அதிகமாகி விட்டன. ஆணும் ஆணும் திருமணம் செய்து வாழ்வது; பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்வது. இது முகம் சுளிக்க வைத்தாலும், உலகில் பல நாடுகள் இதை ஏற்றுக் கொண்டு விட்டன.

இறைவன், இந்தப் பூவுலகில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இன்பம் துய்த்து வாழவே, ஆணாகவும் பெண்ணாகவும் இரு பாலாக படைத்திருக்கிறான் என்று இதுவரை இருந்து வந்த உலகியல் உண்மையே பொய்யாகிப் போனது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை விசாரிக்கும் போது, ஒருபால் உறவுகள் தவறில்லை என்றும், ஒரே பாலைச் சேர்ந்த, அதாவது ஆணும் ஆணும் உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பது விஞ்ஞானபூர்வ “உடலின் செல்” மாற்றமே தவிர, இதில் முகம் சுளிக்க ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டது. ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்ப மாட்டார், ஆனால் மற்றொரு ஆணையே விரும்புவார். இது அவரிடம் ஏற்பட்ட மரபணு மாற்றத்தின் நிகழ்வு. இப்போது இப்படிப்பட்ட மாறுதல்கள் உலகில் அதிகமாக ஏற்பட்டு வருவது, ஆச்சரியமாகவும், மூக்கில் விரலை வைக்கும்படியும் செய்து விட்டது. வேறு வழியில்லாமல் பல நாடுகள் இத்தகைய உறவுகளை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டது.

இதுவரை உலகில் உள்ள 12 நாடுகள் இத்தகைய ஒருபால் உறவுகளை சட்டமாக்கி விட்டது. அதில், கனடா, தென்அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் முக்கியமானவை. இப்போது பிரான்ஸ் நாடும் இத்தகைய உறவை சட்டபூர்வமாக்கி விட்டது.

இந்த பிரான்சில் புது சட்டப்படி, “யார்” வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆண் பெண் என்ற வேறுபாடு தேவையில்லை என்று அந்த திருமணச் சட்டம் சலுகை அளிக்கிறது. The new law allows marriage for all, regardless of sexual orientation. இதனால் என்ன நன்மை? அவர்கள் சேர்ந்து வாழலாம். ஒருவர் இறந்து விட்டால்,  அவர் வேலை செய்த நிறுவனத்தில் கொடுக்கும் தொகைகளை “துணைவர்” பெற்றுக் கொள்ளலாம். திருமணம் செய்து கொண்டால்தான், இந்த தொகையைப் பெற உரிமை கிடைக்கும் என்பதால் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது இல்லாமல், வேறு ஒருவரின் குழந்தையை “தத்து-Adoption” எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன்னர், திருமணம் செய்து கொள்ளாதவர்கள், Adoption என்னும் குழந்தை-தத்து எடுக்க முடியாது. இப்போது ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டதால், இது சாத்தியம் ஆகிறதாம்.

உலகம் எங்கு செல்கிறது என்றுதான் தெரியவில்லை. ஒரே பாலைச் சேர்ந்தவர்களுக்குள் வைத்துக்கொள்ளும் உறவுகள் குரோமசோம் மாறுதலால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானம் சொன்னால், அந்த குரோமசோம்களை மாற்றி, எதிர் எதிர் பாலைச் சேர்ந்தவர்களை ஈர்க்கச் செய்ய வழி வகை செய்ய வேண்டும்.

சட்டம் என்ன சொன்னாலும், சமுதாயம் இதை ஏற்பது கடினம்தான். கடவுளின், பிறப்பின் ரகசியத்தையே இது மாற்றிவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. ஒருவேளை கடவுளும் இத்தகைய சமுதாய குழப்பத்தை விரும்புகிறாரா என்றும் தெரியவில்லை! எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.

**

மதம் மாறலாம், ஜாதி மாறமுடியாது.

மதம் மாறலாம், ஜாதி மாறமுடியாது.

மனிதனுக்கு மதம் அவசியமா இல்லையா என்பது பெரிய விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மதங்களை உருவாக்கியதே, மனிதனை நெறிப்படுத்தத்தான்! ஆனால், இப்போதெல்லாம் மனிதன், மதத்தால் மதம் பிடித்து அலைகிறான்!

மதம் மாறுவது என்பது தனி மனிதனின் விருப்பமே! அது, அவனின், கடவுள் நம்பிக்கையின்பால் பட்டது. ஒரு காலத்தில் ஒரு கடவுள் பிடிக்கும், எனவே அந்த மதத்தில் இருப்பான். மற்றொரு காலத்தில் அந்த கடவுள் பிடிக்காது, அல்லது வேறு ஒரு கடவுள் பிடிக்கும். எனவே வேறு மதத்துக்கு மாறிவிடுவான். கட்சிதாவல் மாதிரிதான் இதுவும்.

மதம் மாறுவது தனிமனிதனின் சுதந்திரம். ஆனால், மதம் மாறினால், அவன் ஏற்கனவே இருந்து வந்த ஜாதி மாறாது என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

பஞ்சாப்பில் ஒரு தனித்தொகுதி. அதில் ஷெட்யூல் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டுமே போட்டியிட முடியும். ஏற்கனவே ஷெட்யூல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர், முஸ்லீம் மதத்துக்கு மாறி விட்டார். பின்னர் அந்த தொகுதியில் எம்எல்ஏ வுக்கு போட்டியிட்டு வென்றார். ஆனால், அவர் மதம் மாறி விட்டதால், அவர் ஷெட்யூல் வகுப்பை சேர்ந்தவர் என்று கருத முடியாது என அவர் மீது தேர்தல் வழக்கு போடுகின்றனர். பஞ்சாப் & ஹரியான ஐகோர்ட் அவரின் தேர்தல் செல்லாது என்கிறது. இவர் மதம் மாறிவிட்டதால், ஜாதியையும் இழந்து விடுவார் என்பது ஐகோர்ட் கருத்து.

ஆனால், அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அதில் சுப்ரீம் கோர்ட், அவரின் அப்பீலை அனுமதித்து, “மதம் மாறினாலும், அவரின் ஜாதி மாறாமலேயே இருக்கும்” என்ற தீர்ப்பை வழக்கியது.

It is settled in law that a person can change his religion and faith but not the caste, to which he belongs, as caste has linkage to birth.

**

சண்முக கவசம்

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”
அண்டமாய் அவனி யாகி அறியொணாப்
பொருள தாகிப் தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற
என்னருள் ஈசனான திண்திறல் சரவணத்தான்
தினமுமென் சிரசைக் காக்க!

ஆதியாங் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தானிரு நுதலைக் காக்க
சோதியாத் தணிகை ஈசன்
துரிசிலா விழியைக் காக்க
நாதனாங் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க
இருசெவி களையுஞ் செவ்வேள்
இயல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பல்
முழுதுநற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னை
சிவசுப்ர மணியன் காக்க

....

Tuesday, May 3, 2016

தற்கொலை ஷாம்பு

தற்கொலை ஷாம்பு
உங்கள் தலை முடி தற்கொலை செய்து கொள்கிறதா? அதைக் காப்பாற்ற எங்களிடம் உள்ள ஷாம்புவை பயன்படுத்துங்கள் என்று விளம்பரம் செய்து, ஒரு பிரிட்டீஷ் கம்பெனி ஷாம்பு விற்பனை செய்து வந்தது. அந்த ஷாம்புக்கு Peachy head  அழகுத் தலை என்று பெயரும் வைத்திருக்கிறது.
ஆனால், சோசியல் மீடியாவில் இதைக் கிண்டல் செய்து வியாபாரத்தை சிதற அடித்து விட்டார்கள். இது Peachy head இல்லை, Beachy Head என்று சொல்லி விட்டார்கள். Beachy Head என்பது அங்குள்ள தற்கொலை செய்யும் ஒரு மலைப் பகுதியாம்.
இப்படி கிண்டல் செய்தவுடன், எல்லோரும் அந்த ஷாம்புவை வாங்குவதை நிறுத்திக் கொண்டு வருகிறார்களாம்!
ஒருவர் சொல்கிறார், “என் அழகான தலைமுடி, இந்த ஷாம்புவை உபயோகிக்க ஆரம்பித்த பின்னர், என் தலை முடிகள் ஒவ்வொன்றாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது” என்று ஜோக் அடித்திருக்கிறார்.
வியாபாரம் செய்வதே கஷ்டம்! இதில் வில்லங்கம் கொண்ட மக்களிடம் மாட்டிக் கொண்டால், அந்த வியாபாரப் பொருளை ஒரே நாளில் கொடோனுக்கே திருப்பிக் கொண்டுவந்து விடுவார்கள்!!

**

கல்வி என்பது வியாபாரம் அல்ல

“கல்வி என்பது வியாபாரம் அல்ல” --- இந்திய சுப்ரீம் கோர்ட் சாட்டையால் அடித்துள்ளது.
மத்திய அரசு நீட் NEET என்னும் நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவு இடுகிறது. மாநில அரசுகள் தாங்களே மாநில அளவில் நுழைவு தேர்வு CET நடத்திக் கொள்வோம் என்கிறது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதத்து உள்ளாகிறது.
இந்திய அரசியல் சாசனம் ஆர்ட்டிகிள் 254 என்ன சொல்கிறது?
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும், அவரவர் சட்டம் இயற்றும் அதிகாரங்களை பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று இந்த ஆர்ட்டிகிள் 254 சொல்கிறது.
254(1) மத்திய அரசு சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட விஷயங்களில், மாநில அரசும் சட்டம் இயற்றி, அதனால் குழப்பம் ஏற்பட்டு இருந்தால், மத்திய அரசின் சட்டமே செல்லும். மாநில அரசின் சட்டம் செல்லாது.
254(2) சில சட்டங்களை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்தே சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று சில வகை உள்ளது. அதன்படி மத்திய அரசும், மாநில அரசும் ஒரே விஷயத்தைப் பற்றி இருவேறு சட்டங்கள் இயற்றி இருந்தால், மாநில அரசு இயற்றிய சட்டமானது, மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு முரணாக இல்லாதவரை அது செல்லும்.
2013ல் சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பை கொடுத்தது. அது மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு. அதன்படி, மைனாரிட்டி கல்வி நிறுவனங்கள் தங்களின் கொள்கையை தாங்களே வகுத்துக் கொள்ளலாம். அதில் அரசு தலையிட முடியாது என்று தீர்ப்பு. அதன்படி NEET சட்டத்துக்குப் புறம்பானது.
ஆனால், இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு.
Justices Anil R Dave, AK Sikri, RK Agarwal, Adarsh K Goel and R Banumathi.
அதன்படி, NEET  தேர்வு மருத்துக் கல்லூரி அட்மிஷனுக்கு எழுதுவது கட்டாயம் என்றும் அந்த முறை செல்லுபடியாகும் என்று தீர்ப்பு. CET மாநிலங்கள் பொதுவாக அட்மிஷன் தேர்வை வைத்துக் கொள்ளலாம் என்று கூறி உள்ளது.
ஆர்ட்டிகிள் 254ன்படி உயர்நிலைக் கல்வி (Higher Education) மத்திய அரசின் பொறுப்பில் உள்ளது. எனவே உயர் கல்வி விஷயங்களில் மத்திய அரசின் சட்டமே செல்லும் என்றும் மாநில அரசு சட்டம் செல்லாது என்றும், எனவே மருத்துவ கல்வி விஷயத்தில் மத்திய அரசின் NEET Notification மட்டுமே செல்லும் என்று சொல்லி உள்ளது.
எது எப்படி இருந்தாலும், கல்வியை காசாக்காதீர்கள். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கல்வியில்தான் உள்ளது!!!

The Supreme Court Bench said, "Education is treated as a noble 'occupation' on 'no profit, no loss' basis. Thus, those who establish and are managing the educational institutions are not expected to indulge in profiteering or commercialise this noble activity.
The State can lay down regulatory measures for private  aided or unaided, minority or non-minority institutions."

NEET = The National Eligibility cum Entrance Test.
CET = The Common Admission Test. or Common Entrance Test.

**

பவுடர் பஞ்சாயத்து

ஜான்சன் & ஜான்சன் கம்பெனி பவுடர் வியாபாரம் செய்கிறது. இது, பவுடர் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களை போதுமான அளவு தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்யவில்லையாம்.

அந்த பவுடரை வாங்கி உபயோகப்படுத்திய ஒரு பெண்மணிக்கு கர்ப்ப பை கேன்சர் வந்துவிட்டதாம். எனவே கோர்ட்டில் வழக்கு போட்டார். அந்த பவுடர் கம்பெனி, அந்த பெண்மணிக்கு $55 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறி உள்ளது.

இந்த கம்பெனி மேலும் 1200 வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறதாம். அதில் இந்த தீர்ப்பு அந்த கம்பெனிக்கு பெருத்த அடியாம்! இந்த தீர்ப்பை எதிர்த்து பவுடர் கம்பெனி அப்பீல் செய்யப் போகிறதாம். எங்க பவுடர் நல்ல பவுடர்தான்! சுகாதாரமானது! 30 வருட பாரம்பரியமிக்கது என்று பவுடர் கம்பெனி சொல்கிறது. ஆனால் அந்த பெண்மணி, அந்த பவுடரை தன் அந்தரங்க பாகங்களில் பூசிக் கொண்டதால்தான் கர்ப்ப பை கேன்சர் வந்தது என்று அவர் வக்கீல் மூலம் வாதம் செய்திருக்கிறார். 

**

வாட்ஸ் அப்

உலகமே வாட்ஸ்அப்-புக்குள் மூழ்கி உள்ளது.
எதற்கெடுத்தாலும் வாட்ஸ் அப் தான்.

பிரேசில் நாட்டு நீதிபதி, சமீபத்திய ஒரு தீர்ப்பில், அந்த நாட்டில் உள்ள எல்லா மொபைல் சர்வீஸ் கம்பெனிகளும், “வாட்ஸ் அப்” வசதியை ஒரு 72 மணி நேரத்துக்கு நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார். ஏன் என்று காரணம் சொல்லவில்லையாம்.

ஏற்கனவே இதே போல, பிரேசில் நாட்டு நீதிபதி, இப்படியான ஒரு உத்தரவை டிச.15, 2105ல் பிறப்பித்தார். ஆனால், பேஸ்புக் கம்பெனி (வாட்ஸ் அப் நடத்தும் கம்பெனி) அந்த நீதிபதியின் உத்தரவை மதிக்கவில்லையாம். உடனே அந்த பேஸ்புக் அதிகாரியை சிறையில் தள்ளியது. ஆனால் மேல் கோர்ட் தலையிட்டு அந்த தண்டனையை நிறுத்தி வைத்தது.

ஏதோ முக்கியமான வழக்கு ஒன்று நடந்துகொண்டிருக்கும்போல! அதைப் பற்றி யாரும் ஏதும் வாட்ஸ் அப்-பில் விமர்சனம் செய்யக் கூடாது என்ற காரணமாக இருக்கலாம்! உண்மையான காரணம் தெரியவில்லை!
ஆமாம்! "வாட்ஸ் அப்" இப்போது நெருப்பு மாதிரிதான் இருக்கிறது. ஒரு விஷயம் வெளிவந்த அடுத்து நிமிடத்தில் உலகத்தையே பார்த்துவிட வைக்கிறது இந்த வாட்ஸ் அப்.

**

எத்திஹாட் ப்ளைட்

 வளைகுடா நாட்டின் “எத்திஹாட்” ஏர்லைன்ஸ் புதிய விமானப் பயணத்தை துவக்கி உள்ளது; இதில் மும்பாய்-நியூயார்க் செல்ல ரூ.25.22 லட்சம் ரூபாயாம். அதுவும் ஒருமுறை போவதற்குறிய டிக்கெட் கட்டணமாம். மறுபடி திரும்பிவர, மறுபடியும் ரூ.25 லட்சத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
மாட்டுவண்டி பிரயாண காலத்திலிருந்து, மாறி வந்துவிட்டோம். ஆனால் இவ்வளவு தூரம் மாறி வந்திருக்கிறோம் என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த விமானத்தில் மூன்று ரூம்கள் கொண்ட சூட் உள்ளதாம். தனி எடுபிடி வேலையாள். தனி ஷெப். உண்மையிலேயே வீட்டில் இருப்பது போன்றே இருக்குமாம். (நாம் என்ன, பறந்து கொண்டேவா இருக்கப் போகிறோம்? கீழே இறங்கித் தரையில் நடந்துதானே ஆகவேண்டும்?) இதுக்கு எதுக்கு இவ்வளவு செலவு? இந்த ப்ளைட்டுக்கு பெயர் என்னவாம்? “எத்திஹாட் ஏர்பஸ்-ஏ-380”.
மும்பாய்க்கும் நியூயார்க்கும் இடையே சுமார் 7,800 கி.மீ. தூரம்தான். சாதாரண ப்ளைட்டுகளில் ரூ.50,000 டிக்கெட் பணம். தொடர் 15 மணி நேரப் பயணம்.
உலகம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது!

**

Monday, May 2, 2016

குழந்தையின்மை

குழந்தையின்மை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கும் வாழ்க்கையே! மானிடப் பிறப்பு எடுப்பதே, தன் வாரிசுகளை உருவாக்கி விட்டுச் செல்வதே என்றும், மனிதச் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க வாரிசுகள் தேவை என மனிதன்  நினைக்கிறான்.
மனுஸ்மிருதியிலும், ஒருவன் தன் வாரிசை உருவாக்கிவிட்டால்தான், அவன் இறந்த பிறகு மோட்சம் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இறந்தவன் மோட்சம் செல்வதற்கு, அவன் வாரிசு பிண்டம் அளிக்க வேண்டும் என்றும் ஒரு கோட்பாடு காலம் காலமாகி இங்கு நிலவி வருகிறது>
குழந்தை இல்லாதவர் நிலையோ, வாழ்வு முழுமையடையாமல் போய்விடுமோ என்று நினைக்க வைக்கிறது. மருத்துவ முன்னேறங்கள் வந்திருந்தாலும், அது ஓரளவே குழந்தை பிறப்பை அதிகப்படுத்துகிறது. மருத்துவ சிகிச்சையை மீறியும் குழந்தையின்மை இருப்பதும் ஆச்சரியமில்லைதான்.
ஆனால், அதற்கு ஆணின் விந்து தேவையில்லையாம்! மனிதனின் தோலில் இருந்து எடுக்கும் செல் மூலம் கருவை உருவாக்க முடியும் என்ற ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளனவாம்!
உலகிலுள்ள 15% மக்கள் குழந்தை இல்லாமல் இருக்கின்றனராம்! இனி அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி இந்தச் சாதனையை எலிகளைக் கொண்டு செய்த சோதனையில் வெற்றி கண்டுள்ளார். இவரை ஊக்குவித்தது, ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற இரு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான, வளர்ந்த செல்களை மறுபடியும் கருச் செல்களாக மாற்ற முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். (இந்த இரண்டு விஞ்ஞானிகள்  - பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கார்டன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யாமனகா). 
**

Sunday, May 1, 2016

யோகாப்பியாசம்

யோகாப்பியாசம் செய்யும் போது, மனம் ஒரு நிலையில் நில்லாது பலவிடத்தும் தத்தும்! அதனால் சுவாசத்தை ஒழுங்கு படுத்தல் கஷ்டம்!

சூரிய உதயத்துக்கு ஐந்து நாழிகைக்கு முன்னும், சூரிய அஸ்தமனத்துக்கு ஐந்து நாழிகைக்குப் பின்னும், ஒவ்வொரு நாழிகை அப்பியாசம் செய்ய வேண்டும்!

இந்த நேரங்களில்தான் பூமியில் உள்ள சகல சராசங்களும் ஒடுங்கும்!  நிர்ச்சத்தமான நேரம்!  அந்நேரத்தில் இயல்பிலேயே மனமும் ஒடுங்கும்! மனம் ஒடுங்கும் காலமே யோகப்பியாசத்துக்கு உகந்தது!

சூடாவது குளிராவது அணுகாத, மனிதர்கள், மிருகங்கள் சந்தடி இல்லாத ஓர் இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்; அந்த இடத்தில் தர்ப்பைப் புல்லை போடவேண்டும். (முன் காலங்களில் மான்தோல், புலித்தோல் போட்டுக் கொண்டனர்); மின்னலில் உள்ள மின்சாரத்தை நம் உடம்பு கவர்ந்து பூமிக்கு விடுவது இயல்பு; அவ்வாறு மின்சாரம் நம் உடம்பில் ஓடாமல் தடுப்பதற்கு இந்த ஆசனங்கள் (தர்ப்பை, புலித்தோல், மான்தோல்) இன்றியமையாதன; நம் உடல், மின்சாரத்தை மேலிருந்து கீழே போகவிடும்போது, அது கீழிலிருந்து மேலே இழுக்கப்படும் சுவாசத்தோடு முனைந்து எதிரான சக்திகள், ஒன்றையொன்று தாக்கும்; அப்போது அப்பியாசத்துக்கு பங்கம் வரும்!

பதுமாசனம்:
பதுமாசத்தில் இரண்டு வகை உண்டு;
இரண்டு கால்களையும் மடக்கி ஒரு குதிக்காலால் அபானத்தை (மலவாயிலை) அடைத்து, மற்ற குதிக்காலால் சலவாயிலை அடைத்து, பாதங்களின் முன்பக்கத்தை தொடைக்கும், காலுக்கும் இடையில் சொருகி, முதுகெலும்பு வளையாது நிமிர்ந்திருக்க வேண்டும்;

தேகத்தில் பத்து வாயுக்கள் இருக்கின்றன; ஒரே வாயுவாய் இருந்தாலும், அது தொழில் செய்யும் இடங்களை வைத்து பத்து பெயர் பெறுகின்றன; இந்த பத்து வாயுக்களும் சுவாசத்தோடு சம்மந்தப்பட்டவை; இரண்டு அபானத்திலும் (மலத்துவாரம்) குறியிலும் நின்று தொழில் செய்வன; அவைகள் சுவாத்தில் மொத்துண்டு வெளியேற எத்தனிக்கும்; இதில் வாயு வெளியேறினால், சுவாசத்தை கட்டுப் படுத்த முடியாது; எனவே அவைகள் இரண்டையும் குதிக்கால்களால் தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்;

முதுகெலும்பு நேராய் இருந்தால்தான், மூலாதாரத்திலிருந்து செல்லும் வாயுவும் நீரும் விரைவாய் ஓடும்; வளைவாய் இருந்தால் ஓட்டம் தடைபடும்;

பின்னர் சுவாசத்தப் பழக்க வேண்டும்; இடகலையால் விட்டு பிங்கலையால் இழுக்கவும், பிங்கலையால் விட்டு இடகலையால் இழுக்கவும் பழக்க வேண்டும்; மறுபடியும் இடகலையால் விட்டு இடகலையால் இழுக்கவும், பிங்கலையால் விட்டு, பிங்கலையால் இழுக்கவும் பழக்க வேண்டும்;

வாயைத் திறக்காமல், நாக்கை உபயோகித்து உள்ளிருந்து வரும் சுவாசம் ஹம் என்ற ஓசையுடன் வெளியே போக வேண்டும்; வெளியிலிருந்து உள்ளே செல்லும் காற்று "ஸா" என்னும் ஓசையுடன் போகவேண்டும்;

அப்பியாசத்தின் ஆரம்பத்தில், இரண்டு கண்களையும் மூக்கு நுனியைப் பார்க்கும்படி பார்வையை உள்ளே செலுத்தி பார்க்க வேண்டும்; முடிவில், முழுப்பார்வையையும் லலாடஸ்தானத்தை பார்க்க வேண்டும் (லலாட ஸ்தானம் = நாசி முடிவில் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடம்);

இயல்பிலேயே சுவாசமானது, மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு மேலே ஒடி, நாசி வழியாய் வெளியே போகின்றது; வெளியே இருந்து உள்ளுக்கு செல்லும் காற்றும் மூலாதாரத்துக்குப் போய் மீளுகின்றது; யோகிகள் படிப்படியாக காற்றை மூலாதாராத்துக்கு போகவிடாது தடுத்து, அதற்கு மேலே உள்ள ஆதாரத்தில் நிறுத்தி, அதை மறுபடி அதிலிருந்து மீளச் செய்கிறது; இவ்வாறு நாசிக்கு மேலே போய் அவ்விடத்தில் தங்கிவிட்டால், வெளியிலிருந்உத காற்று உள்ளே வருவதுமில்லை, உள்ளுக்குப் போவதுமில்லை; சுவாசமே இருக்காது; அதே நிலையில் அநேக நாட்கள், வருடங்கள் கழியும்; இப்படி இருப்பவர்களுக்கு உலகில் நடக்கும் சம்பவங்கள் ஒன்றும் புலப்பட மாட்டா;

**

கணபதி தோத்திரம்

கணபதி தோத்திரம்:

"சகல சிருட்டிகளுக்கும் மூலாதாரமாய் உள்ளவரே! அண்ட பிண்ட சகல சராசரங்களையும் உம்மிடத்தில் அடக்கி இருக்கின்றீர் என்பதற்கு அடையாளமாக பேழை வயிற்றைக் கொண்டிருக்கும் பெருமானே! உலகத்தில் உள்ள சகல விக்கினங்களையும் தீர்க்கும் விக்கினேஸ்வரரே! ஓங்கார சொரூபி! அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் அண்ட பிண்டங்களில் ஓங்கார ஓசையானது ஓயாது ஒலிக்கின்றதே, அதைக் கேட்டு, அதனால் உம்மைத் தியானிக்க, உலகமாயை எங்களை விடாது உலைக்கின்றதே! இதை அகற்றி, எங்களை நல்வழிப்படுத்தல் மூலகாரணமாகிய உமது கடமை அன்றோ! முத்தியையும் சித்தியையும் அளிக்கும் முழுமுதற் கடவுளே! நாம் போகும் இடங்களில் எங்களோடு நின்று சகல விக்கினங்களினின்றும் எங்களை இரட்சித்துக் காப்பாற்றும்!"
**

மூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்!

மூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்!

"பேசா எழுத்துடன் பேசும் எழுத்துறின் ஆசான பரநந்தி ஆம்". (ஔவை).

பேசாத எழுத்து அறிவு;
பேசும் எழுத்து சிவம்;
இவை இரண்டும் சேர்ந்தால் குருவும், கடஷனாமாகும்;

பேசாத எழுத்து "ம்" இதை வாய்திறந்து உச்சரிப்பதில்லை;

பேசும் எழுத்து "ஓ" இதை வாய் திறந்துதான் சொல்ல முடியும்.

ஓம் என அமைந்தால் ஆசானாகிய பரநந்தி எனப்படும் மூலப்பரம்பொருள் ஆகும்;

அதாவது, ஓம் என்னும் மூலமந்திரமாகிய பிரணவத்தை முறைப்படி ஓதினால் (உச்சரித்தால்) அவ்வாறு உச்சரிப்பவரின் மனம் ஒடுங்கும்;

மனம் ஒடுங்கப் புலன் ஒடுங்கும்;
புலன் ஒடுங்கச் செயல் ஒடுங்கும்;
செயல் ஒடுங்கவே, இடைகலை, பிங்கலை, இடைநாடியாகிய சுழுமுனை ஆகிய மூன்றும் ஒன்றாகி நாடி சுத்தி ஏற்படும்.

இதைத்தான் "மூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்" என்று யோகர்சுவாமி பாடினார்;

நாடி சுத்தி ஏற்பட்டால், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியானது, ஆதாரங்களை நோக்கிப் பாயும்; பாய்ந்து, பிரமாந்திரத்திற்கு மேலே பன்னிரண்டு விரற்கடை தூரத்தில் விளங்கும் துவாத சாந்தப் பெருவெளியாகிய தில்லை வெளியிலே நடமிடும் பரம்பொருளாகிய பரநந்தியைக் கூடி, ஆன்மா அத்துவிதமாகிப் பரநந்தி ஆகும்.

நன்றி: செல்லத்தம்பி சீறீக்கந்தராசா அவர்களின் "அவ்வையார் காட்டிய வழி" நூலிலிருந்து.


**

What is "Religion"?

What is "Religion"?
Any impartial mind making a comparative study of the principal religion of the world in a sincere manner is sure to come to the conclusion that the ultimate source of religion is God, and that the newer religions can be traced to older ones and the older ones to still older ones and so on.
The Vedas are the fountain heads from which the stream of religious thought has flowed through the channels of Zoroastrianism, Judaism, Buddhism, Christianity and Islam. None can deny the fact that the moral precepts and teachings of Buddhism have much in common with those of Christianity. The Essence cult of Buddhism prevailed in Palestine when Jesus Christ was born. In the same way, you can find parallels in Judaism and Zoroastrianism, which were based on Hinduism. Islam is indebted to both Judaism and Christianity. There is no discredit or disrespect to any religion by accepting this historical fact.
On the contrary, it reveals the golden chord of unity running through all. All relative knowledge must naturally end in the realization of that Unity, and to realise that unity must be the aim of all true religion. There are signs all over the world that humanity is anxiously looking forward to a Universal religion, which embraces all the special religions of the world - a unique system of religion as well as a system of philosophy that is of universal character.
The following all inclusive words of the Blessed Lord Krishna in Bhagawad Gita were not uttered in vain:
"Whosoever comes to me through whatsoever path, I reach him; all men are struggling in the paths which ultimately lead to ME, the Eternal Truth."
(Courtesy: Excerpts from Mr. Ramachandra's "Hinduism in a Nutshell")

**