Friday, January 17, 2020

1944-ல் இந்து விதவைகளின் சொத்துரிமை பற்றி


Chettiar’s Property case in 1944
இந்து விதவைகளின் சொத்துரிமை பற்றி:
RM.AR.AR.RM.அருணாசலம் செட்டியார் என்பவர் தேவகோட்டையில் உள்ள நாட்டுக் கோட்டை செட்டியார்களில் மிகப் பெரிய பணக்காரர். இவர் ஒரு உயில் எழுதி வைத்துவிட்டு, 1938-ல் இறந்து விடுகிறார். இந்த உயிலை சப்கோர்ட்டில் புரேபேட் ஆர்டர் பெறுகிறார்கள்.
புரபேட் (Probate) என்பது, உயில் எழுதியது உண்மைதான் என்று அதில் உள்ள சாட்சிகளைக் கொண்டு நிரூபித்து பெறப்படும் நிரூபணச் சான்றிதழ்.
அந்த காலத்தில், 1938-ல் இறந்த அருணாசலம் செட்டியாரின் சொத்துக்களின் மதிப்பு ரூ.40 லட்சத்தை தாண்டும். இந்தியாவில் இல்லாமல், பர்மா (அப்போது பிரிட்டீஸ் நிர்வாகத்தில் உள்ளது), மலாய், சிலோன், கொச்சின் (அப்போது பிரன்ஸ் நாட்டின் நிர்வாகத்தில் உள்ளது) மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் அவருக்கு சொத்துக்கள் உண்டு. இது இல்லாமல், ஏகப்பட்ட சாரிட்டிகள், என்டோவ்மெண்டுகள் உண்டு. இவைகளின் மதிப்பே ஒரு 24 லட்சத்தைத் தாண்டும்.
அருணாசலம் செட்டியாருக்கு மூத்த மனைவி மூலம் ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மனைவி இல்லாமல் மேலும் இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி இவருக்கு முன்பே இறந்து விட்டார். மூத்த மனைவி மூலம் பிறந்த மகனும் இவருக்கு முன்பே இறந்து விட்டார். மூத்த மனைவியின் மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். இரண்டாம் மனைவியும் மூன்றாம் மனைவியும் இருக்கிறார்கள். இரண்டாம் மனைவிக்கு குழந்தை ஏதும் இல்லை. மூன்றாம் மனைவிக்கு ஒரு மகள் மட்டுமே.  மூத்த மனைவியின் மகன், உமையாள் ஆச்சி என்பவரைத் திருமணம் செய்திருந்தார். (பின்னர் மகன் இறந்து விட்டார்). அவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை.
அருணாசலம் செட்டியார் இறந்த பின்னர், அவரின் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்காக, அவரின் மருமகளான உமையாள் ஆச்சி Administration Suit என்ற வழக்குப் போடுகிறார்.
அருணாசலம் செட்டியார் எழுதி வைத்த உயிலை நிறைவேற்றுபவராக (Executor) தனது மைத்துனர் சுந்தரேசன் செட்டியாரையும் தனது மருமகன் அருணாசலம் செட்டியாரையும் நியமித்திருந்தார்.
அந்த உயிலில், தனது இரண்டு மனைவிகளுக்கும் ஆண் குழந்தை இல்லாததால், அவரவர் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள உரிமை வழங்கி இருந்தார். அதேபோல், தன் மருமகளும் (இறந்த மகனின் மனைவி) ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் வழங்கி இருந்தார்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
பழைய இந்து சாஸ்திரப்படி, ஒரு இந்து ஆணுக்கு, தன் இறப்புக்குப் பின்னர், தனக்கு செய்யவேண்டிய கர்ம காரியங்களைச் செய்தவதற்காக ஒரு மகன் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்போதுதான், அந்த இறந்த இந்து ஆண் சொர்க்கத்துக்கு போக முடியும் அல்லது ஆன்மா இறைவனடி சேரும் என்பது ஒரு சம்பிரதாயம். அப்படி ஒரு மகன் இல்லாதபோது, அல்லது பிறக்காதபோது, தன் பங்காளிகளின் மக்களின் ஒரு மகனை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஒருவேளை, அப்படி தத்து எடுப்பதற்கு முன்னரே அவர் இறந்து விட்டால், தன் மனைவிக்கு அந்த உரிமையை வழங்கலாம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
இந்தப் பின்னனியில்தான், அருணாசலம் செட்டியாரும் அவரின் உயிலில் அப்படி எழுதி இருக்கிறார். அப்படி தத்து எடுக்கும் போது, உயிலில் நியமிக்கப்பட்டுள்ள நிறைவேற்றாளர்களான மைத்துனன் சுந்தரேசன் செட்டியாரையும், மருமகன் அருணாசலம் செட்டியாரையும் கலந்து ஒப்புதல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அந்த உயிலில் எழுதி இருக்கிறார்.
அதன்படி, மூவரும் (இரண்டு மனைவிகளும், ஒரு மருமகளும்) ஆளுக்கு ஒரு மகனாக தத்து எடுத்துக் கொள்கிறார்கள். தத்து மகன்கள் மேஜர் வயதை அடைகிறார்கள். அவர்கள் மூவரும், உயிலில் நியமிக்கப்பட்ட நிறைவேற்றாளர்களுடன் சேர்ந்து சொத்துக்களையும், டிரஸ்டுகளையும் நிர்வகித்து வருகிறார்கள்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
பொதுவாக, தத்து எடுப்பது என்பது இந்து சாஸ்திர சட்டத்தி்ல் மட்டுமே உள்ளது. கிறிஸ்தவர், முஸ்லீம் ஆகியோர் தத்து எடுக்க முடியாது. அவர்களின் மதநூல்களான பைபிள், குரான் இவைகளில் அவ்வாறு சொல்லப்படவில்லை. ஏனென்றால், அங்கு மறுபிறப்பு, கர்மா, ஆன்மா போன்ற தத்துவங்களுக்கு இடமில்லை. எனவே இந்து சாஸ்திரத்தின்படி, இறந்தவரின் ஆன்மா முக்தி அடைய வேண்டுமானால், அவரின் மகன் இந்தப் பூவுலகில், தன் மூதாதையருக்கு (ஏழு தலைமுறை மூதாதையருக்கு) பிண்டம் கொடுத்து கர்மம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. மகன் இல்லாதவர் தத்து எடுத்து அந்த சாஸ்திரத்தை செய்ய வேண்டும். தத்து எடுக்காமல் காலம் சென்றவரின் விதவை-மனைவி  தன் கணவனுக்காக அவ்வாறு தத்து எடுக்கலாம். அல்லது அந்த இந்து ஆணே  உயிருடன் இருக்கும்போதே ஒரு உயில் மூலம் அந்த அதிகாரத்தை தன் மனைவிக்கு அளிக்கலாம் என்பது பழைய இந்து சாஸ்திர சட்டம்.  ஆண் குழந்தையை மட்டுமே  அவ்வாறு தத்து எடுக்க முடியும். ஒரு பெண் குழந்தையை அவ்வாறு தத்து எடுக்க முடியாது. மேலும், அந்த ஆண் குழந்தையும் 14 வயதுக்குள் இருக்க வேண்டும். தத்த ஹோமம் என்னும் நிகழ்ச்சியை நடத்தி, உறவினர்கள் முன்னிலையில் அக்னி சாட்சியாக, அந்த குழந்தையின் இயற்கை பெற்றோர்கள் (Biological parents), வளர்ப்பு பெற்றோர்களிடம் (Adoptive parents) இந்தக் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அந்த தத்து (Adoption) சாஸ்திரப்படி செல்லுபடியாகும்.
பழைய இந்து சாஸ்திர சட்டம்:
இந்த சாஸ்திர தத்து விதிகளுக்கு மாறாக தத்து எடுத்திருந்தால் அந்த தத்து செல்லாது. அப்படி எடுக்கப்பட்ட மகன், அந்த சொத்தில் எந்த உரிமையும் கோர முடியாது. ஆனாலும், ஒரு சில சமுதாயங்களில் (ஜாதிகளில்) இந்த சாஸ்திர விதிகளுக்கு மாறாக, காலம் காலமாக தொடர்ந்து வேறு ஏதாவது ஒரு “வழக்கம்” & “பழக்கம்” (Custom & Usage) தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்தால், அதில் இந்த சாஸ்திர சட்டம் மூக்கை நுழைக்காது. இந்த தேவகோட்டைப் பகுதியில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டிகளிடம் (இவர்களை நாட்டார் என்றும் சொல்வர்) ஒரு வகைப் பழக்க-வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதன்படி, இவர்கள், தனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்றால், தன் தாயாதிகளின் மகனை தத்து எடுத்துக் கொள்வார்கள். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி அந்த மகனுக்கு 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த தத்து மகனுக்குத் திருமணம் கூட ஆகி இருக்கலாம். அப்படி ஒரு பழக்க-வழக்கம் கடைப்பிடித்து வருகிறார்கள். எனவே இது இந்து சாஸ்திர விதிகளின்  விதிவிலக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அருணாசலம் அவர்களின் உயிலில் டிரஸ்டுகளை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர, அவரின் சொத்துக்களை யார் யார் அடைய வேண்டும் தனித்துச்சொல்லவில்லை. ஏனென்றால்,, அப்போது அவருக்கு மகன்கள் யாரும் இல்லை. மனைவிகளுக்கும் மருமகளுக்கும் தத்து மகன்களை எடுத்துக் கொள்ளும் உரிமை மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது.
எனவே, அவரின் மருமகள் (இறந்த மகனின் மனைவி) இந்த சிவில் வழக்கைப் போடுகிறார். எதிர் பார்ட்டிகளாக, இரண்டு மாமியார்களையும், இரண்டு உயில் நிறைவேற்றாளர்களையும் சேர்த்திருக்கிறார்.
இந்த வழக்கில், மாமனார் எழுதி வைத்த உயிலே சட்டப்படி செல்லாது என்று சொல்கிறார். இந்த உயிலை அவர் எழுதும்போது, அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பது அவர் கூற்று. (Not in a sound state of mind). அந்த உயிலை எழுதி, அவர் கையெழுத்தை போட வைத்தது, அவரின் உறவினர்களான, அவரின் மைத்துனரும், மருமகனுமான இந்த உயிலில் நிறைவேற்றாளர்களாக இருப்பவர்களே என்கிறார்.
மேலும், மருமகளின் வாதம் என்னவென்றால்: மாமனாரின் உயிலில் அவரின் சொத்துக்கள் யார் யாருக்கு போகவேண்டும் என்று எழுதப் படாத நிலையில், அந்த சொத்துக்களைப் பொறுத்து, அவர் உயில் எழுதாமல் இறந்து விட்டதாகவே கருத வேண்டும் என்பதே. (Testator died intestate in respect of the bulk of the estate).
மேலும், மருகளுக்குக் கொடுத்த சீதனமும், அவளின் மாமியாரின் சீதனமும், ஏற்கனவே மாமனார் டெப்பாசிட்டுகளாக வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவைகளும் தனக்கே வர வேண்டும் என்றும் கேட்கிறார்.
மேலும் மருமகள் சொல்கிறார்: மாமனார் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர், தன்னை அழைத்து, “ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொள்” என்று சொன்னதாகச் சொல்கிறார். அப்படி இருக்கும்போது, உயிலில், Executors சம்மதத்தின் பேரிலேயே தத்து எடுக்க வேண்டும் என்று எப்படி எழுதி இருப்பார். அப்படியே எழுதி இருந்தாலும் அது ஒரு உத்தரவு ஆகாது. அது ஒரு  யோசனையே என்கிறார்.
இப்படியான சூழ்நிலையில், தன் சுய அறிவுடன் எழுதப்படாத அந்த உயில் செல்லாமல் போனால், மூத்த விதவை மனைவியே (மகன் இல்லாதபோது), 1937-ம் வருடத்திய இந்து பெண்கள் சொத்துரிமை சட்டப்படி, இறந்த கணவரின் முழு சொத்துக்கும் உரிமையாளராகி நிர்வகித்து வர வேண்டும் என்பது மூத்த மனைவியின் வாதம்.
ஆனால் உயில் நிறைவேற்றாளர்கள் பதில் என்னவென்றால்: இந்த உயில் அவரின் சுய சிந்தனையுடனேயே எழுதி அவர் கையெழுத்துப் போட்டுள்ளார் என்றும், எனவே அவர்கள் அந்த உயில்படி சொத்துக்களை நிர்வாகம் செய்ய அதிகாரம் உள்ளவர்கள் என்றும், அதன் வரும்படியை மட்டும் வளர்ப்பு மகன்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உயிலில் கண்டுள்ளது என்றும், சொல்கிறார்கள்.
இதில், உயில் எழுதிய அருணாசலம் செட்டியாரின் மூன்றாவது மகளை (மூத்த மனைவி மூலம் பிறந்தவள்) உயில் நிறைவேற்றாளராக உள்ள தன் மருமகனுக்குத் தான் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
சப்கோர்ட் தீர்ப்பு: இந்த உயில் கட்டாயத்தின் பேரில் ஏற்பட்ட்டது இல்லை என்றும், எனவே புரபேட் உத்தரவு வழங்கி தீர்ப்புக் கொடுத்து விட்டது.
ஆனாலும், அருணாசலத்தின் மற்ற சொத்துக்களைப் பொறுத்து அவர் உயிலில் குறிப்பிட்டுச் சொல்லாததால், அவைகளைப் பொறுத்து உயில் எழுதிவைக்காமல் இறந்ததாகக் கருதி. அவைகளுக்கு நிர்வாக உரிமையை மருமகளுக்கு உத்தரவிடுகிறது கோர்ட்.
ஆனால், மற்ற சொத்துக்களைப் பொறுத்து உயில் இல்லாமல் இருப்பதால், அவரின் இரண்டாவது மனைவி (இப்போது உயிருடன் இருக்கும் தலைமை மனைவி Senior widow) க்கு 1937 பெண்கள் சொத்துரிமை சட்டப்படி உரிமை உண்டு என்று கீழ்கோர்ட் தீர்ப்புச் சொல்கிறது.
இந்த உத்திரவை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு வழக்கு வருகிறது.
1937 பெண்கள் சொத்துரிமை சட்டம்:
 1937-க்கு முன்னர் பெண்களுக்கு இந்து கூட்டுரிமை சொத்தில் பங்கு கிடையாது. (பெண்கள், தனியாக சீதனச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது புதிய சொத்துக்களை வாங்கிக் கொள்ளலாம்). இந்து கூட்டுரிமை சொத்து என்றால், ஒரு இந்து ஆண் ஒரு சொத்தை வைத்திருந்தால் (வாங்கி இருந்தாலும், பூர்வீகமாக கிடைத்து இருந்தாலும்), அதில் அவருக்கும், அவரின் மகனுக்கும், அவரின் பேரனுக்கும், அவரின் கொள்ளுப் பேரனுக்கும் “அவர்களின் பிறப்பால்” பங்குரிமை பெறுவர். இதுவே இந்து கூட்டுரிமை சொத்து எனப்படுவது. இதை கோபார்சனரி சொத்து (Coparcenary property) என்பர். இப்போது இதை மூதாதையர் சொத்து (Ancestral Property) என்றும், பூர்வீகச் சொத்து என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். பெண்களுக்கு (அந்த குடும்பத்தில் உள்ள மனைவிகளுக்கும், மருமகள்களுக்கும் அந்த சொத்தில் பங்கு கேட்கும் உரிமை கிடையாது; ஆனால் அவர்களின் வாழ்நாள்வரை அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்து காப்பாற்ற வேண்டிய அந்த கோபார்சனர்கள் என்னும் ஆண்களின் கடமை. மகள்களைப் பற்றி இங்கு சொல்ல வேண்டுமானால், அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வரை அந்த ஆண்களின் கடமை. அதற்குப் பின்னர் அவள் வேறு வீட்டு மருமகள். இந்த வீட்டுக்குச் சம்மந்தமில்லாதவள்).
இப்படி இருந்த வந்த பெண்களின் நிலையை சற்று உயர்த்த நினைத்த பிரிட்டீஸ் அரசு  (ஏனென்றால், அந்தக் காலக்கட்டத்தில்தான், இங்கிலாந்தில் பெண்களுக்கு சொத்துரிமை வந்து விட்டது), 1937-ல் இந்து பெண்கள் சொத்துரிமை சட்டம் கொண்டு வருகிறது.
குறிப்பு: இந்து பெண்களுக்குத்தான் இந்த நிலை. கிறிஸ்தவப் பெண்களுக்கு கணவர் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு என்று ஏற்கனவே 1925-ல் சட்டம் வந்து விட்டது. முஸ்லீம் பெண்களுக்கு தந்தை, தாய் சொத்தில் மகனுக்கு முழுப் பங்கு என்றும் மகளுக்கு பாதி பங்கு என்றும், கணவர் சொத்தில் குழந்தைகள் இருந்தால் எட்டில் ஒரு பங்கு என்றும், குழந்தைகள் இல்லை என்றால் நான்கில் ஒரு பங்கு என்றும் ஷரியத் சட்டம் ஏற்கனவே இருந்து வருகிறது. எனவே இந்து பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு இல்லை. எனவே ஒரு இந்து பெண், அவள் கணவன் உயிருடன் இருக்கும்வரை அவன் தயவில் வாழ்கிறாள். கணவன் இறந்தபின், கணவனின் தாயாதிகள் தயவில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். எனவே கணவன் இறந்தபின்னர், அவருக்குச் சேர வேண்டிய பங்கு முழுவதும் அவளின் பங்காக அனுபவிக்கலாம். ஆனால் முழுமையாக அனுபவிக்க முடியாது. வாழ்நாள் சுதந்திரம் மட்டுமே உண்டு. கிரயம் செய்ய முடியாது. எனவே இது அவளின் ஜீவனாம்ச உரிமை மட்டுமே. இதுதான் 1937-ல் பெண்களுக்குக் கொடுத்த சொத்துரிமை. பின்னர் 1956-ல் வந்த இந்து வாரிசுரிமை சட்டத்தில் விதவை மனைவிக்கு அவளின் கணவனுக்குக் கிடைக்கும் “கூட்டுக் குடும்பச் சொத்தில்” கிடைக்கும் பங்கில் மற்ற வாரிசுகளுடன் ஒரு பங்கு மட்டும் கிடைக்கும்படி மாற்றினார்கள். (கணவரின் “தனிச் சொத்தில்” மனைவிக்கு மற்ற வாரிசுகளுடன் சேர்த்து ஒரு பங்கு கிடைக்கும் என்பது வேறொரு தனிச் சட்டம்).
இங்கு அருணாசலம் செட்டியாரின் வழக்கில் தீர்ப்பு:
இந்து பெண்கள் சொத்துரிமை சட்டம் 1937 பிரிட்டீஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. அது மொத்த பிரிட்டீஸ் இந்திய நிலப்பகுதிக்கும் செல்லும். இந்தச் சட்டத்தை, பிரிட்டீஸ் பலுசிஸ்தான், சோன்தல் பர்கானாஸ் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியது. ஆனால் பர்மாவுக்கு விரிவு படுத்தவில்லை. ஏனென்றால், இந்த சட்டத்தில் கவர்னர்-ஜெனரல் கையெழுத்து இட்ட தேதி 14 ஏப்ரல் 1937. ஆனால் பிரிட்டீஸ் இந்திய நிலப்பரப்பில் இருந்து 1 ஏப்ரல் 1937லிலேயே அது பிரிக்கப்பட்டு விட்டது. 1940-ல் இந்தச் சட்டத்துக்கு ஒரு திருத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதும் அது பர்மா பகுதியை பிரிட்டீஸ் இந்தியப் பகுதி என்று சொல்லவில்லை.
எனவே இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மட்டும் இந்த கோர்ட் அதிகார எல்லைகுக்கு உட்பட்டது. இதில் விவசாய நிலத்துக்கு இந்த 1937 சட்டம் பொருந்தாது.
எனவே, அருணாசலம் என்ற தகப்பனும், அவரின் இறந்த மகனும் கோபார்சனர்கள். எனவே இருவருக்கும் பாதி பாதி பங்கு உள்ளது. அந்த இறந்த மகனுக்கு கிடைத்த பாதி சொத்து அவனின் மனைவியான விதவைக்கு (இங்கு வழக்குப் போட்டவள்) கிடைக்கும். இது 1937 பெண்கள் சொத்துரிமை சட்டத்தின்படி கிடைப்பதால், விவசாய நிலத்தில் அவள் பங்கு பெற முடியாது. மற்ற சொத்துக்களில் பங்கு பெறலாம். பர்மாவில் உள்ள சொத்தில் 1937 சட்டப்படி அவளுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், 1937 பெண்கள் சொத்துரிமை சட்டம் பிரட்டீஸ் இந்திய எல்லைக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு மட்டுமே செல்லும். அப்போது, பர்மா பிரிட்டீஸ் இந்தியப் பகுதியாக இல்லை. வேறு நாட்டில் உள்ள சொத்துகளில் அந்த நாட்டு சட்டப்படியே கிடைக்கும்.
அருணாசலம் செட்டியாரின் கூட்டுரிமைபங்கு அவரின் விதவைகளுக்குப் போய் சேரும். டிரஸ்ட் சொத்துக்களில் கடைசி டிரஸ்டி அவரே ஆவார். அடுத்த டிரஸ்டிகள் இல்லாத நிலையில், (இங்கிலாந்து சட்டப்படியே இந்தியாவிலும் இருப்பதால்), அவரின் வாரிசுகளே அடைந்து கொள்ளலாம்.
**


சிற்பக்கலை வேலைவாய்ப்பு பற்றிய வழக்கு


சிற்பக்கலை  வேலைவாய்ப்பு பற்றிய வழக்கு
இந்தியாவில் உள்ள கோயில்களின் கட்டிடக்கலையை பராமரிக்கவும், சிற்பங்களை உருவாக்கவும், சீரமைக்கவும், தேவை ஏற்பட்டு, 1957-ல் மாமல்லபுரத்தில் ஒரு கல்லூரி ஆரம்பிக்கபட்டது. The Tamil Nadu Institute of Architecture and Sculpture, Mamallapuram. இங்கு கோயில் பராமரிப்பு, சிற்ப வேலைப்பாடு முதலிய பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. மொத்தம் 58 துறைகளில் பட்டம் வழங்கப்படுகிறது. இது சென்னை பல்கலைகழத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. Bachelor of Fine Arts Degree என்பது 1981 முதல் தொடங்கபட்டுள்ளது. இது நான்கு வருட படிப்பாகும். பின்னர் 8 வருடப் படிப்பாக ஆக்கப்பட்டது. இதற்கு தகுதி எட்டாவது தேர்வு அல்லது தோல்வி இருந்தால் போதும் என்று இருந்தது. பின்னர் 1981-ல் இதை Bachelor of Fine Arts in Traditional Architecture and Traditional Sculputure என்று மாற்றி, அதற்குத் தகுதியாக +2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கொண்டு வந்து, நான்கு வருடப் படிப்பாக ஆக்கப்பட்டது. இந்தியாவிலேயே இங்குதான் இப்படிப்பட்ட கல்லூரி உள்ளது. 40 மாணவர்கள் வருடாவருடம் வெளிவருகிறார்கள். இது ஆரம்பிக்கப்பட்ட 1957-லிலிருந்து இதுவரை சுமார் 1800 மாணவர்கள் வெளிவந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு ஸ்தபதிகள் தேவைப்பட்டாலும், HR&CE துறை மூலம் இவர்களைத் தேர்வு செய்வதில்லை. மாறாக வெளி ஆட்களிடம் ஒப்பந்தம் மூலமே தேவைப்படும் வேலைகளைச் செய்து கொள்கிறார்கள். ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஸ்தபதிகளை அரசாங்கம் நியமனம் செய்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 38,615 இந்து கோயில்கள், ஜெயின் கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் அரசின் HR & CE துறையின் கீழ்தான் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.  இங்குள்ள பல கோயில்கள் 100 வருடங்களுக்கும் மேலானவை. சில கோயில்கள் 1000 வருடங்களுக்கும் மேலானவை.
எனவே இந்த கோயில்களுக்கு அந்த பட்டப்படிப்பு படித்த ஸ்தபதிகளை நியமித்தால் என்ன என்று ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுப் போட்டார்.  தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோயில்களும் Joint Commissioner and Deputy Commissioner of the HR&CE துறையின் நிர்வாகத்தில் உள்ளது. இங்கு இருக்கும் Engineers கோயில் கட்டிடத் துறை வல்லுநர்கள் அல்ல. அவர்களுடன் ஸ்தபதிகளையும் நியமிக்கலாமே என்று கேட்கிறார். அவர்களுக்கு கோயில் கட்டிட நுணுக்கம், சிலை வடிவமைப்பு நுணுக்கம் தெரியும் என்கிறார்.
ஆனால் அரசு தரப்பில், ஸ்தபதிகளை ஒப்பந்தம் மூலமே நியமித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறது. அரசு, கல்லூரிகளை உருவாக்கலாம், ஆனால் அவர்களுக்கு வேலைகளையும் உருவாக்க முடியாது என்கிறது.
தமிழ்நாட்டில் 50,000 கோயில்களுக்கு மேல் உள்ளன. அதில் சுமார் 38,000 கோயில்களுக்கு மேல் அரசின் நிர்வாகத்தில் உள்ளது. அதில் சில கோயில்கள் சுமார் 2,000 வருடங்களைத் தாண்டியும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கோயில்களில் கர்ப்பகிரகத்தில் உள்ள விக்கிரகங்கள் மட்டுமே சிலைகள் என்று கருத முடியாது. கடவுள் சிலைகளும் இருக்கின்றன. (The temples not only consist of deities in the form of idols, but also sculptures in the form of idols with marvelous architecture).
தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களை Archaeological temples ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 & Act 1991 இவைகளின் நோக்கமே, “பழமையான இந்து கோயில்களை புரணமைப்பு செய்வதற்காக... என்ற நோக்கில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
இடையில் கோயில் கமிட்டிகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் அது நீக்கப்பட்டு இப்போது Commissioner, Joint Commr., Dy Commr., Asst. Commr. என்ற வரிசையில் நிர்வாகம் நடக்கிறது.
இந்த வழக்கில், ஸ்தபதிகளையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகச் சட்டத்தை கொண்டுவரும்படி அரசுக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
**


Protracted Litigation வழக்கை இழுத்தடிக்கும் மனுக்கள்


 Protracted Litigation
வழக்குப் போடுபவர், தனது சட்ட உரிமையை நிலைநாட்டவே கோர்ட்டை நாடுகிறார். அப்படி வழக்குப் போட்டுவிட்டு, வேறு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டு இருக்க கூடாது. வழக்கு நடத்த தயாராக இருக்க வேண்டும். வழக்கை வேண்டுமென்றே நடத்தால் விட்டுவிடுவது, பின்னர் ஒரு மனுவைப் போட்டு மறுவிசாரனைக்கு கேட்பது, அந்த மனுவையும் காலதாமதமாகப் போடுவது, அந்த கால தாமதத்தை மன்னிக்கச் சொல்லி மனுப்போடுவது, அதற்கும் ஏதாவது பொய்யான காரணங்களைக் கூறுவது, இவை எல்லாமே வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமே.
உண்மையிலேயே சில நியாயமான காரணங்களால், வழக்கு நடத்த முடியாமல் விட்டிருப்பார். அப்போது அவ்வாறான மனுவை போட்டு, மறுவிசாரனை கேட்கலாம். ஆனால் அதற்கு நம்பத்தகுந்த காரணமும், ஏற்றுக் கொள்ளகூடிய காரணமும் வேண்டும்.
The litigants cannot be abused for the purpose of prolongation and protection. Litigants are approaching the Court for establishing their legal rights. While doing so, they are expected to be vigilant and proper in disposal of the cases. The Court cannot encourage prolongation of litigation at the instance of the parties.
பொதுவாக, மனுக்களை கால தாமதமாகப் போட்டால், அதற்கு தகந்த, நம்பும்படியான, நியாயமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணத்தைச் சொல்ல வேண்டும். கால தாமதத்தை மன்னிப்பது என்பது விசாரனை கோட்டின் தனிப்பட்ட விருப்ப முடிவாகும். அந்த “விருப்ப முடிவில்” அப்பீல் கோர்ட் ஏதும் தலையிட முடியாது.  ஆனால் வேறு சட்ட சிக்கல் இருந்தால் மட்டுமே அப்பீல் கோர்ட் தலையிட முடியும். மற்றும் அந்த விருப்ப முடிவை விசாரனை கோர்ட் தன்னிச்சையாக காரண காரியங்களை கவனிக்காமல் எடுத்திருந்தால் அப்படிப்பட்ட முடிவில் அப்பீல் கோர்ட் தலையிடலாம்.
காலதாமதத்தை மன்னிக்கும் போது, கீழ்கோர்ட் கொஞ்சம் சலுகையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு, வழக்குக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படாமல், வழக்கின் பார்ட்டிகளுக்கு கஷ்டம் கொடுப்பதாக இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதற்காக பொய்யான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட் Rukmini v. Rajendran (2003) 1 LW 585 என்ற வழக்கில் தீர்ப்பாகச் சொல்லியுள்ளது.
வேறு ஒரு வழக்கான பாங்க் வழக்கில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வழக்கில் (1990-1 LLN 457) Justice M.Srinivasan அவர்களின் தீர்ப்பில், “கால தாமதத்தை மன்னிப்பதால், எதிர் பார்ட்டிக்கு ஒரு நஷ்ட ஒன்றும் இல்லை என்று பொதுவாகச் சொல்லி விட முடியாது. காலம் கடந்து தாக்கல் செய்யும் மனுவை, எதிர்பார்ட்டி புதிதாக சந்திக்கும்போது, மிகுந்த சிரமத்துக்கும் ஆளாவார்” என்று கூறப்படுள்ளது.
“If a litigant chooses to approach the Court long agter the time prescribed under the relevant provisions of the law, he cannot say that ‘no prejudice would be caused to the other side’ by the delay being condoned. The other side would have in all probability destroyed the records thinking that the records would not be relevant as there was no further proceedings in the matter. Hence, to view a matter of condonation of delay the respondent in that application will be fallacious.”
கால தாமதத்தை மன்னிப்பதற்காக Limitation Act Sec.5 இருக்கிறது. அதில், Sufficient cause சரியான காரணம் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பல வழக்கின் தீர்ப்புகளில் “காலதாம மன்னிப்பு மனுக்களை கொஞ்சம் விசாலமான மனதுடன் அணுக வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஏனென்றால், அந்த மனு தள்ளுபடியானால், அவரின் “வழக்குப்போடும் உரிமையே” போய்விடும் என்பதால். எனவே கோர்ட்டுகள் கொஞ்சம் காலத்துக்கு ஏற்ற சூழலையும் கவனிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.The Court is to adopt a pragmatic approach to condone the delay when there is no negligence, inaction, or want of bona fide on the part of the applicant. உண்மையில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யவில்லை என்றால், அவரிடம் கொஞ்சம் விசாலமான மனதுடன் அணுகலாம்.
**

Thursday, October 3, 2019

வைப்பாட்டி மகனுக்கு சொத்துரிமை



வீரப்பா  கவுண்டனும், சுந்தர கவுண்டனும் சகோதர்கள். இந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். வீரப்ப கவுண்டன் 1866-ல் இறக்கிறார். அவருக்கு அம்மாச்சி என்று ஒரு வைப்பாட்டி உண்டு. அவளுக்கு மருதமுத்தா, பெரியண்ணன் என்று இரண்டு மகன்கள் வீரப்ப கவுண்டர் மூலம் பிறந்தவர்கள். வீரப்ப கவுண்டன் தம்பியான சுந்தர கவுண்டன் 1867-ல் இறக்கிறார். சுந்தர கவுண்டனுக்கு வீரம்மாள், மீனாட்சி என இரண்டு மனைவிகள்.
சுந்தர கவுண்டன் இறந்தபின்னர், அவரின் இரு மனைவிகளும், அவரின் சொத்துக்கள் சிலவற்றை அடமானம் வைத்து விடுகிறார்கள். ஆனால் வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டி மகன்களான மருதமுத்தா, பெரியண்ணன் இருவரும், இது பொதுக் குடும்பச் சொத்து என்றும், அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றும் வாதம் செய்கிறார்கள்.
இந்தச் சொத்துக்கள் சுந்தர கவுண்டனின் சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவர் இறப்புக்குப் பின்னர் அவரின் இரண்டு மனைவிகளுக்கும் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும் என்பதே அப்போதைய இந்து சாஸ்திரச் சட்டம்.
The only question, therefore, which it is and what interest, Virappa’s illegitimate sons have in the property in suit. வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டி மகனுக்கு இந்தச் சொத்தில் பங்கு உள்ளதா அல்லது இல்லையா என்பதே வழக்கின் கேள்வி.
இந்து மித்தாச்சரா சட்டப்படி, வைப்பாட்டி மகனுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் பங்கு உண்டு. இந்த வழக்கில் வீரப்ப கவுண்டன், கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். இந்த ஜாதியில், வைப்பாட்டி மகனுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் பங்கு உண்டு என்பதே மித்தாச்சரா சட்டம் சொல்கிறது.
மித்தாக்சரா அத்தியாயம் 1, பிரிவு 12-ல் சமஸ்கிருத வார்த்தைகளில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது. “தாசி & தாசி புத்திரன்” என்ற இரு வார்த்தைகளில் சொல்லபட்டுள்ளது. இதையே சரஸ்வதி விலாசா என்ற இந்து சட்டத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில், பெண் அடிமைகள், பெண் அடிமைகளின் மகன்கள், இவர்களைப் பற்றி மித்தாச்சரா சட்டம் சொல்கிறது. வங்காளப் பகுதியில் நடைமுறையில் இருக்கும் இந்து தயாபாக சட்டத்திலும், “திருமணம் ஆகாத சூத்திரப் பெண்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்து மித்தாக்சரா சட்டப்படி “வைப்பாட்டி” என்பவள் “தாசியா” என்ற கேள்வி எழுகிறது.
இந்து தயாபாக சட்டம் நடைமுறையில் உள்ள வங்காளப் பகுதியில், ஒரு வழக்கான கல்கத்தா ஐகோர்ட் வழக்கில் (Narain Dhara v. Rakhal Gain, ILR Cal. 1) தாசி என்பது அடிமை பெண் என்றும், தொடர்ந்து ஒருவனிடம் வைப்பாட்டியாக இருப்பவள் இல்லை என்றும் சொல்லி உள்ளது.
சமஸ்கிருத வார்த்தையில் வைப்பாட்டி என்பவளை “அவருதா” Avaraudda என்றே குறிப்பிடுகிறது. தாசி என்பவள், ஒரு பெண், அடிமையாக இருப்பவள் என்று சொல்கிறது. இப்படிப்பட்ட பெண் அடிமைகளை சட்டம் 5/1843 சட்டத்தின்படி பழைய இந்து சாஸ்திரச் சட்டத்திலிருந்து நீக்கி விட்டது.
அடிமைப் பெண் அல்லது தாசி என்ற வார்த்தைகளை இந்து நாரதா சாஸ்திரத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்? நாரதா குறிப்பிடுவது என்னவென்றால்:  ஆண், பெண், அடிமைகளை 15 வகையாகச் சொல்கிறார்கள்.
1)      கிரகதாசன் (அதாவது தாசி பெற்ற பிள்ளை),
2)      பணத்துக்குப் பெற்றவன்
3)      தானத்துக்கு கொடுத்தவன்.
4)      தாசன் வழிமுறையில் வந்தவன்.
5)      பஞ்ச காலத்தில் உணவு கொடுத்து அவனைப் பாதுகாத்ததால் பின்னர் தாசன் ஆனவன்.
6)      அடமானமாகப் பெற்றதால், தாசன் ஆனவன்.
7)      கடன் கொடுக்க முடியாமல் போனதால், தாசன் ஆனவன்.
8)      போரில் அடிமைப் படுத்தப்பட்டவன்.
9)      போட்டியில் வெல்லப்பட்டு அடிமைப்படுத்தப் பட்டவன்.
10)   தானே வலிய வந்து தாசன் ஆனவன்.
11)   முற்றும் துறந்து தாசன் ஆனவன்.
12)   ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாசனாக இருக்கு ஒப்புக் கொண்டவன்.
13)   பக்தியினால், தாசன் ஆனவன்.
14)   தன் மனைவிக்காக, மற்றொருவருக்கு தாசன் ஆனவன்.
15)   தானே தன்னை விற்றுக் கொண்டு தாசன் ஆனவன்.
இந்து மித்தாக்சரா சாஸ்திர சட்டமும் இந்த 15 வகையான அடிமைகளை ஒப்புக்கொள்கிறது. தத்த மீமாம்சா சாஸ்திரம் பிரிவு 4, 16-ல் இவ்வாறு சொல்லப்படுகிறது. “ஒரு பெண்ணை, அவளுக்கான விலையைக் கொடுத்து வாங்கி விட்டால், அவளுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்து வந்தால்,  அவளை அடிமை என்று சொல்லலாம். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை தாசி புத்திரன் என்றும் சொல்லலாம்.”
மேலும், ஒருனை அல்லது ஒருத்தியை, தலையை மொட்டை அடித்து ஏற்றுக் கொண்டால், அவன் அல்லது அவள் அடிமை என்று தத்த மீமாம்ச சாஸ்திரம் பிரிவு 4, 40-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்ஜாதிப் பிரிவினரைப் பற்றிச் சொல்லும்போது பிகஸ்பதி பண்டிதர் குறிப்பிடுவது என்னவெ்ன்றால், திருமணம் ஆகாத சூத்திரப் பெண்ணுக்கு, ஒரு ஆண் மூலம் மகன் பிறந்தால், அந்த ஆணுக்கு வேறு வாரிசுகள் இல்லையென்றால், அவனின் சொத்துக்களை அந்த மகன் அடையலாம் என்று சொல்லியுள்ளது. மற்றொரு சாஸ்திர பண்டிதரான கௌதம பண்டிதரும் இதையே சொல்லி உள்ளார்.
காட்டாயனா பண்டிதரின் கூற்றுப்படி – “ஒரு அடிமைப் பெண்ணுடன் அவளின் எஜமான் உடலுறவு வைத்துக் கொண்டால், அதன் மூலம் அவளுக்குப் பிறக்கும் மகன், அந்த எஜமானின் சட்டபூர்வ மகன்கள். வளர்ப்பு மகன்கள் இவர்களுடன் சொத்துக்கு போட்டியிட முடியாது. ஆனால், ஒரு பெண்ணைத் தனித்து பல வருடங்களாக வைப்பாட்டியைப் போல வைத்துக் கொண்டிருந்து,  அவள் மூலம் மகன் பிறந்தால், அவன் தந்தையின் சொத்தில் பங்கு பெறலாம் என்று சொல்கிறது.
ஆக, அடிமையாக இருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொண்டு பிள்ளை பிறந்தால், அவனுக்கு தகப்பன் சொத்தில் பங்கு இல்லை. ஆனால், தனியே ஒருத்தியுடன், இவன் மட்டுமே உடலுறவு கொண்டு, அவள் மூலம் பெற்ற மகன் (அதாவது வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு அதன் மூலம் பெற்ற மகன்), தந்தையின் சொத்தில் பங்கு பெறுவான்.
மேலும், இந்து மித்தாச்சரா சாஸ்திர சட்டத்தில் சுலோகம் 288-ல் விவாகர காண்டத்தில், “அவருதா” & “பஞ்சியா” (Avarudda & Bunjya) என்று இருபிரிவு தாசிகளைப் பற்றிச் சொல்கிறது.
மேலும், ஸ்மிருதி சந்திரிகா சாஸ்திரத்தின் பண்டிதர், “இந்த கலியுகத்தில், எந்தத் திருமணம் செல்லாது என்று சொல்லும்போது, திருமணம் ஆகாத ஒரு சூத்திரப் பெண், ஒரு மேல்ஜாதி ஆணுடன் உடலுறவு கொண்டு, அதில் பெற்ற மகனுக்கு, தந்தையின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை என்று சொல்கிறது. மேல் ஜாதி என்பது இங்கு, பிராமணர், சத்திரியர், வைசியர், என்ற மூன்று பிரிவைச் சொல்வதாக மனு சாஸ்திரம் சொல்கிறது.
இது இவ்வாறு இருக்க –
இங்கு, தாசி என்பது அடிமை என்பது விளங்குகிறது. ஆனால் தொடர்ந்து தனியே ஒருவனுக்கு வைப்பாட்டியாக இருப்பவளைத் தாசி என்று சொல்லலாமா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. Whether there is reason to hold upon the texts that an unmarried Sudra woman kept as a continuous concubine came within its scope of Dasi?
ஒருத்தியை அடிமையாக வைத்திருந்தால், அவளுக்குப் பிறக்கும் குழந்தை, தந்தையின் சொத்தில் பங்கு பெற முடியாது. ஆனால் ஒருத்தியை தொடர்ந்து தன் மனைவி போலவே நடத்தி வந்து, திருமணம் மட்டும் செய்து கொள்ளாமல், அவள் மூலம் குழந்தை பெற்றிருந்தால், அந்த குழந்தை, தன் தந்தையின் சொத்தில் பங்கு பெறலாம்.
இந்து மித்தாச்சரா சட்டம் என்ன தெளிவுபடுத்திகிறது என்றால், வைப்பாட்டியின் மகன், பூர்வீகச் சொத்தில், மற்ற சட்டபூர்வ மகன்களுடன் சரிசமமாகப் போட்டி போட்டு பங்கு பெற முடியாது. தந்தையின் பாகத்தில் மட்டுமே அவன் வைப்பாட்டி மகன் என்ற முறையில் (அதாவது அவரின் மகளின் மகன் பங்கு பெறுவதைப் போல) பங்கு பெற முடியும், அதுவும் அவன் சூத்திரப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்தவனாக இருக்க வேண்டும்.
இந்து கோபார்சனரி கூட்டுச் சொத்து என்பது சபிண்டா உறவுகளுக்கு மட்டுமே, அதுவும், சட்டபூர்வ திருமணம் மூலம் பிறந்த மகன்களில் மட்டுமே.
இந்த வழக்கில் உள்ள சொத்து வீரப்ப கவுண்டன் தம்பி சுந்தர கவுண்டன் சொத்து என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது, வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டியின் இரண்டு பிள்ளைகளும், சித்தப்பன் சொத்தில் பங்கு பெற இந்து கோபார்சனரி உரிமை உண்டா என்பதும் கேள்வியாகிறது.
தத்த சந்திரிகா சாஸ்திரம் பிரிவு 5, 22-ல் பழைய இந்து சாஸ்திரப்படி, மகன்கள் எத்தனை வகை என்று சொல்கிறது. அதாவது, சொத்து உரிமை பெறும் மகன்களின் வகைகள் சொல்லப் பட்டுள்ளது. அதில் சட்டபூர்வமற்ற மகன் ஒரு வகை. அவன் நேரடி வாரிசாக முடியாது என்றும், மகளின் மகனுடன் சேர்ந்தும் பங்கு பெறும் தகுதியும் இல்லை என்றும் சொல்கிறது. ஏனென்றால், சட்டபூர்வமற்ற மகன் என்பவன் சட்டபூர் திருமணத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து பங்கு பெற தகுதி உடையவன் அல்லன்.
எனவே வைப்பாட்டி மகன், அவனின் தந்தை சொத்தில் பங்கு பெறலாம். ஆனால், அவன் சித்தப்பா சொத்தில் பங்கு பெற உரிமை கிடையாது, ஏனென்றால், அவன் கோபார்சனர் இல்லை. சட்டபூர்வ திருமணத்தில் பிறந்தவர்களே கோபார்சர்கள் ஆவர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, வைப்பாட்டி மகன்களுக்கு சித்தப்பன் சொத்தில் பங்கு இல்லை என்று சொல்லி விட்டது.
இந்த வழக்கு Krishnaayyan and others v. Muttusami, (1883) ILR 7 Mad 407 என்ற வழக்காகும். இதன் தீர்ப்பு Justice C.A.Turner Kt. & M.Muthusamy Ayyar ஆகிய ஐகோர்ட் நீதிபதிகள் 26 ஏப்ரல் 1883-ல் வழங்கி உள்ளனர்.
**

TRANSGENDER WOMAN LOST HER JOB


TRANSGENDER WOMAN LOST HER JOB
இன்றிலிருந்து சுமார் 58 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவன் பெயர் ஸ்டீபன்சன்ஸ். அவனுக்கு ஐந்து வயது ஆகும்போது, அவன் உடலில் ஏதோ மாற்றம் தெரிவதை உணர்கிறான். அவன் பெண்ணின் இயல்பை அடைகிறான். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆண் உடையில் ஆணாகவே வாழ்கிறான். படிக்கிறான். வயது வந்தவுடன் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு அரசாங்க வேலையும் கிடைக்கிறது. இடுகாட்டின் நிர்வாக அதிகாரி வேலையைப் பார்க்கிறான்.
வாழ்க்கை இப்படியே ஒடுகிறது. ஆனால் அவனின் பெண்மைத் தன்மை தலைதூக்கி நிற்கிறது. வேலையில் ஆண் உடையில் வேலை பார்ப்பான். வீட்டுக்கு வந்ததும் பெண் உடைக்கு மாறிக் கொள்வான். கடைகளுக்குச் செல்லும் போதும் பெண் உடைதான். அதுவே அவனுக்கு மனதுக்குப் பிடித்து விட்டது.
ஆக அவன் வாழ்வில் இரண்டு வேடங்களில் வலம் வரவேண்டிய கட்டாயமாகிறது. வெளி உலகத்துக்கு ஆணாகவும், அவன் உள் உலக வீட்டில் பெண்ணாகவும் வாழ்கிறான். இது அவனுக்கு மனச் சோர்வைக் கொடுக்கிறது. ஒருநாள், முழுவதும் மனம் உடைந்த நிலையில் தற்கொலைக்கும் முயன்று, துப்பாக்கியை தன் நெஞ்சில் வைக்கிறான். ஆனாலும், அவன் அவன் என்ற அவளை விரும்புவதால், தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவில்லை.
2013-ல் அவன் மனம் ஒரு தெளிவு பெறுகிறது. ஏன், நான் இதை வெளி உலகுக்கும் தெரிவிக்கக் கூடாது என்று நினைக்கிறான். நண்பர்களை கலந்து ஆலோசிக்கிறான். சரி என்ற முடிவுக்கு வருகிறான். தன் மேலதிகாரிக்கு கடிதம் எழுதுகிறான். நான் ஒரு ட்ரான்ஸ்ஜென்டர் Transgender என்று. ஆணாக இருந்தாலும் நான் ஒரு பெண் தன்மை கொண்டவன். எனவே நான் என்னைப் பெண்ணாகவே கருதுகிறேன். எனவே இனி நான் அலுவலகம் வரும்போது, பெண் உடையில் வரவே விரும்புகிறேன். எனக்கு பெண் அலுவலகச் சீருடை வழங்க வேண்டும் என்று கேட்கிறான்.
மேலதிகாரி, இதற்குப் பதிலாக, “இது சாத்தியப்படாது. எனவே நீங்கள் வேலையை விட்டு நின்று விடுங்கள். மூன்று மாதச் சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று பதில். அவன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், மேலதிகாரி, அவனை வேலையை விட்டுத் தூக்கி விடுகிறார்.
அவனும் விடுவதாக இல்லை. மாவட்ட கோர்ட்டில் வழக்குப் போடுகிறான். அரசாங்க வேலையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதே அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம். அப்படி இருக்கும்போது, என்னை ஆண்-பெண் வித்தியாசம் பார்த்து வேலையில் இருந்து நீக்கியது செல்லாது என்று வழக்குப் போடுகிறான். ஆனால் மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக இல்லை. “ஆண்-பெண் வித்தியாசம் பார்க்கக் கூடாதுதான். ஆனால் அது பிறப்பால் ஆண்-பெண் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். டிரான்ஸ்ஜென்டர் என்னும் ஆண், பெண்ணாக மாறியவருக்கு பொருந்தாது” என்று தீர்ப்புச் சொல்லிவிட்டது.
இந்த மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து 2018-ல் பெடரல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். பெடரல் கோர்ட், இவரின் அப்பீல் வழக்கை ஏற்றுக் கொள்கிறது. “அமெரிக்க அரசியலைப்புச் சட்டத்தின் படி, ஆண்-பெண் வித்தியாசம் என்பதை உத்தியோகத்தில் பார்க்க முடியாது” என்று தீர்ப்பு வழங்கி விட்டது.
ஆனாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேலதிகாரி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்திருக்கிறார். அந்த அப்பீல் வழக்கு இன்னும் சில வாரங்களில் விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கிறார்.
அமெரிக்க அரசின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்றால், பிறப்பால் ஆண்-பெண் என்ற வித்தியாசத்தை வேலையில் பார்க்கக் கூடாது. ஆனால், டிரான்ஸ்ஜென்டர் என்னும் ஆண்-பெண்ணாக மாறுவதை இதில் சேர்க்க முடியாது என்று கூறுகிறது.
Federal law barring discrimination on the basis of sex only applies to biological sex, not sexual identity or orientation.
ஆனால், இந்த ஸ்டீபன்ஸ் நிலைப்பாடு என்னவென்றால், உலகின் எல்லா மனித இனமும் ஒரே உரிமையைப் பெற வேண்டும் என்பதே. அமெரிக்க சுதந்திரம் அடைந்தபோது, அதன் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ எல்லாவித பாதுகாப்பையும் வழங்கும் என்றே கூறியுள்ளது என்று சொல்கிறார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள், டிரான்ஸ்ஜென்டர் வீரர்களை அமெரிக்க படைகளுக்கு சேர்த்துக் கொண்டது.
இப்போது வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் ஒன்பது நீதிபதிகள் இருப்பர். அதில் தற்போது ஐந்து நீதிபதிகள் பழைமைவாதம் கொண்டவர்கள் என்று கருதுகிறார்கள். எனவே தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
“நான் நானாக இருப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல்” என்று புலம்புகிறார்.
**

Friday, September 6, 2019

சந்திராயன்-2


Chandrayaan 2
சந்திராயன்-2-ன் சிறப்பு
நிலவில் வாழ முடியுமா என்பதே கேள்வி. ஆம் முடியும் என்று முயற்சித்துள்ளனர். முதன்முதலில் நிலவில் இறங்கியது “சர்வேயர் 7”. இது அமெரிக்காவின் நாசாவின் தயாரிப்பு. இது 1968 ஜனவரி 10-ம் தேதி இறங்கியது.
பொதுவாக எல்லா விண்கலங்களுமே நிலவின் மத்தியப் பகுதியிலேயே இறங்கி உள்ளது. ஏனென்றால் அதுவே பாதுகாப்பானது என்பதால். நிலவின் வட கோள் அல்லது தென்கோள் எனச் சொல்லப்படும் பகுதியில் விண்கலங்களை இதுவரை இறக்கிப் பார்க்கவில்லை. இந்தப் பகுதி மிகவும் குளிர் நிறைந்த பகுதி என்பதால. இங்கு சுமார் மைனஸ் 230 டிகிரி செல்சியஸ்க்கும் கீழே குளிர் இருக்குமாம். இங்கு ஒரு பொருளைப் போட்டால், போட்ட வினாடியே விரைத்துவிடும். சூரியனின் வெப்பமோ வெளிச்சமோ இங்கு பார்க்கவே முடியாதாம். மேலும் பெரிய பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியாம். எனவே இங்கு விண்கலங்களை இறக்குவது என்பது சிம்ம சொப்பனம். அதற்குறிய சூரிய வெளிச்சம் கிடைக்காமல் மின்கலங்கள் வேலை செய்யாது. தொலைத் தொடர்பும் துண்டிக்கபடும் அபாயமும் உள்ளது.
ஆனாலும் துணிந்து இந்தியாவின் சந்திராயன் நிலவின் தென்பகுதியில் இறங்கி உள்ளது. நிலவின் மத்தியில் இருக்கும் நடுக்கோட்டிலிருந்து தெற்கே 70 டிகிரி தள்ளி இறங்கி உள்ளது. இதுவரை எந்த நாடும் இவ்வளவு தென்பகுதியில் இறக்கிதில்லையாம். இதுவே ஒரு ஆச்சரியமான வெற்றி தானாம்.
இதுவரை மொத்தம் 28 முறை விண்கலங்கள் நிலவில் இறங்கி உள்ளன. 29-வது விண்கலமாக இந்தியாவின் சந்திராயன்-2 என்ற விண்கலம் நிலவில் இறங்கி இருப்பது, அதுவும் தென்கோடியில் குளிர் நிறைந்த, வெளிச்சமே இல்லாத பகுதியில் இறங்கி இருப்பது அல்லது இறக்கி இருப்பது ஒரு சவாலான செயல்தானாம்.
சைனா நாடு சேன்ஸ்-4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவின் மத்தியக் கோட்டிலிருந்து தெற்கே 45 டிகிரியில் இறக்கியது. ஆனால் இந்தியாவின் சந்திராயன்-2 தெற்கே 70 டிகிரியில் இறங்கி சாதனை படைத்துள்ளதாம்.
இங்கிருந்து அதாவது பூமியில் இருந்து சுமார் 100,000 (நூறாயிரம்) மைல்கள் தொலைவில் நிலவு உள்ளது. செவ்வாய் கிரகமோ, இங்கிருந்து 100 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது. புளுட்டோ கிரகமோ ஒரு பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது.
அமெரிக்காவின் நாசா மையம், 1997-ல் பாத்பைன்டர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்து அது, இரட்டை விண்கலங்களையும் பின்னர் 2004-ல் அனுப்பியது. ஸ்பிரிட், ஆப்பர்சுனிட்டி. அதைத் தொடர்ந்து 2007-ல் போனிக்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதைத் தொடர்ந்து 2012-ல் க்யூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது.
இந்த விண்கலங்கள், நம்மூர் விமானத்தை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாம். அவை மீண்டும் திரும்பி பூமிக்கு வரும்போது, வந்த அதே வேகத்தில், தன்னை நிறுத்திக் கொண்டு, ஆடாமல் அசையாமல் பூமியில் பூப்போல இறங்க வேண்டுமாம். இவை அனைத்தும் மனிதனின் துணை இல்லாமல் கம்யூட்டர் உத்தரவுக்கு கீழ்படிந்து இயங்க வேண்டுமாம். கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற விளையாட்டுத்தான் இது.
இவ்வளவும் ஏதற்காக என்ற கேள்வி எழத்தான் செய்யும். மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள நினைக்கிறான். இருக்கும் இடத்திலேயே, யார் வம்பு தும்புக்கும் போகாமல் வாழ்ந்தும் விடலாம். வாழ்க்கையையே ஒரு போராட்டமாக வாழவும் செய்யலாம். நிலவில் குடித்தனம் போகப் போகிறானாம் மனிதன். தேவையே கண்டுபிடிப்புகளுக்கு தந்தை.
நிலவில் வாழ்வதற்கு நீர் வேண்டும். நிலவில் நீர் இருக்கிறதா இல்லையா, கிடைக்குமா, கிடைக்காதா? இந்த கேள்விக்குப் பதில் தெரிய வேண்டும். நீர் இருந்தால், ஆக்‌சிஜனை உருவாக்கிவிடலாம். உயிர் காத்தும் நீரும் இருந்தால் போதுமே! மனிதன் வாழ்ந்து விடலாமே.
இறைவன் பூமியில் மனிதனைப் பிறக்க வைக்கிறான். அவனோ, மற்றொரு கிரகத்தில் வாழ நினைக்கிறான்.
நிலவுக்குச் செல்லும் விண்கலத்தைக் கண்டுபிடித்தான். இது மூன்று நாட்களில் நிலவை அடையும். மூன்றுநாள் பயணம்தான். ஆனால் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் சுற்றி சுற்றிச் செல்ல வேண்டுமாம். நிலவின் தூரத்தை விட 1000 மடங்கு தூரம் உடையது. செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல சுமார் ஒரு ஆண்டு தேவைப்படுமாம்.
எனவே நிலவில் வாழும் ஆசை அவனை விடவில்லை. சோதனையில் வெற்றியும் பெற்று விட்டான். இனி நிலவிலும் மனிதன் வாழ்வான்.
**

Monday, August 19, 2019

வேதத்தின் சுருக்கம்


வேதத்தின் சுருக்கம்:



மாதவன் பேர் சொன்னாலே அது வேதத்தின் சுருக்கம்தான் என்கிறார் பூதத்தாழ்வார்; ஒத்து என்றால் வேதம் என்று பொருள்.



“ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்

எத்தும் திறம் அறிமின் ஏழைகாள், ஒத்து அதனை

எல்லீரேல் நன்று, அதை மாட்டீரேல் மாதவன் பேர்

சொல்லுவதே ஒத்தின் சுருக்கு.”



(வேதத்தின் அர்த்தமும் முடிவும் இவ்வளவுதான். அது உத்தமமான திருமாலின் பெயரை ஏற்றமாகச் சொல்கிறது. ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. மாதவன் பேர் சொன்னால் போதும், அதுதான் வேதத்தின் சுருக்கம்.)

**

ஒருவனையே நோக்கும் உணர்வு


ஒருவனையே நோக்கும் உணர்வு

பொய்கையாழ்வாரின் பாடல்



“பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ

உயரும் கதிரவனே நோக்கும், உயிரும்

தருமனையே நோக்கும், ஒண் தாமரையாள் கேள்வன்

ஒருவனையே நோக்கும் உணர்வு.”



நதியும் கடலையே நோக்கும்.

தாமரைப்பூவும் சூரியனையே நோக்கும்.

உயிரும் எமனை நோக்கியே செல்லும்.

உணர்வு மட்டும் தாமரையில் விற்றிருப்பவளின் கணவனான நாராயணன் ஒருவனையே சென்றடையும்.

சிவனும் விஷ்ணுவும் ஒன்றே!


சிவனும் விஷ்ணுவும் ஒன்றே!



பொய்கையாழ்வார், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்று ஒரு பாடல் பாடியுள்ளார்.


“அரன் நாரணன் நாமம், ஆன்விடை புள் ஊர்தி,

உரைநூல் மறை, உறையும் கோயில் வரை நீர்,

கருமம் அழிப்பு அளிப்பு, கையது வேல் நேமி,

உருவம் எரி கார், மேனி ஒன்று.”



பெயர் – பரமசிவன், நாராயணன்.

வாகனம் – எருது, கருடன்.

பெருமை சொல்லும் நூல்கள் – ஆகமம், வேதம்.

இருக்கும் இடம் – கையாலயமலை, பாற்கடல்.

தொழில் – அழித்தல், காத்தல்.

ஆயுதம் – வேல், சக்கரம்.

உருவம் – நெருப்பின் சிவப்பு, மேகத்தின் கருப்பு.

உடல் – ஒன்றே!

**


Sunday, May 26, 2019

தத்துக் குழந்தை

Adoption by Christian

குழந்தை இல்லாத ஒரு கிறிஸ்தவ தம்பதி, ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழந்தை, ஒரு மைனர் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாம். யாரோ ஒருவன் அந்த மைனர் பெண்ணைக் கற்பழித்து அதனால் அவளுக்கு குழந்தை உண்டானதாம். எனவே இந்த கிறிஸ்தவ தம்பதி, அவளுடன் பேசி, அவளின் குழந்தையை அது பிறந்தவுடனேயே தத்து எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், ஜர்கண்ட் மாநில போலீஸார், குழந்தை கடத்தல்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். ராண்சியில் உள்ள ஒரு மிஷனரி இப்படி குழந்தைகளை விற்றுக் கொண்டிருப்பதாக குற்றச் சாட்டு உள்ளதாம். எனவே போலீஸ் விசாரனையில், இந்த கிறிஸ்தவ தம்பதிகளின் தத்து குழந்தையையும் விசாரனைக்கு உட்படுத்துகின்றனர். ஆனால் இந்த கிறிஸ்தவ தம்பதி, தாங்கள் நேரடியாகவே, அந்த மைனர் பெண்ணிடம் கேட்டு வாங்கி வளர்க்கும் குழந்தை என்றும், விலைக்கு வாங்கவில்லை என்றும், அந்த குழந்தைக்கு Baptism என்னும் ஞானஸ்தானமும் செய்து விட்டோம் என்றும் போலீஸில் கூறுகின்றனர்.

குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்றால், Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 (called as JJ Act) என்ற சட்டப்படிதான் ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியும் என்றும், இப்படி தானாகவே பெற்றவர்களிடமிருந்து ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியாது என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.  

இந்துக்களில் இப்படி  ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால், Hindu Adoption and Maintenance Act, 1956 சட்டத்தின்படி, அந்த குழந்தையைப் பெற்றவர்களிடமே நேரடியாக, தத்து எடுக்கும் பெற்றோர் பெற்று வளர்த்துக் கொள்ளலாம் என்று உள்ளது. அப்படி இந்துக்கள் மட்டும் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும் போது, இந்த JJ Act சட்டத்தின் படி நடந்து கொள்ளத் தேவையில்லை என்றும் அந்த ஜேஜே சட்டத்தில் சொல்லப் பட்டுள்ளது.

எனவே, இந்த கிறிஸ்தவ தம்பதிகள், தங்களுக்கும், இந்துக்களைப் போல அந்த உரிமை வேண்டும் என்றும், நாங்கள் எடுத்து வளர்க்கும் இந்த குழந்தை எங்களின் தத்துக் குழந்தைதான் என்று சட்டபூர்வ அங்கீகாரம் வேண்டும் என்றும், மதங்களை வைத்து இப்படி பிரித்துப் பார்க்க கூடாது என்றும், அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல் என்றும் கூறி, ஜர்கண்ட் மாநில ஐகோர்ட்டில் வழக்குப் போடுகிறார்கள்.

மேலும், அந்த ஜே ஜே சட்டப்படி, இது ஒன்றும் அனாதை குழந்தை இல்லை என்றும், எனவே அந்தச் சட்டம் இதற்கு செல்லாது என்றும் வாதம் செய்தனர். எனவே எங்களின் தத்துக் குழந்தையை Child Welfare Committee எடுத்துக் கொண்டு போன செயல் சட்டபூர்மானது அல்ல என்றும் வாதம் செய்கிறார்கள்.

பொதுவாக, ஒரு குழந்தையை யார் பராமரிக்க வேண்டும் என்ற பிரச்சனை வரும்போது, அந்த குழந்தையின் நன்மையை கருதியே கோர்ட் முடிவு எடுக்க வேண்டும் என்றும் இதுவரை உள்ள கோர்ட்டு தீர்ப்புகளும், சட்டங்களும் சொல்லி வருகின்றன. இந்த வழக்கில், அந்தக் குழந்தையானது வளர்ப்புப் பெற்றோரிடம் மிகுந்த பாதுகாப்பிலேயே இருந்து வருகிறது. இதை எடுத்துக் கொண்டு போய் வேறு ஒரு சூழலில் வளர விடுவது என்பது அந்தக் குழந்தையின் நலனுக்கு உகந்தது இல்லை. மேலும் ஜே ஜே சட்டம் பிரிவு 3-ல் குழந்தைகளின் பாதுகாப்பும் அரவணைப்பும் என்ற சட்டப் பிரிவுக்கு எதிரானதாகவே உள்ளது.

மேலும், குழந்தைகளை தத்து எடுப்பதற்கே என்றே ஒரு வரைமுறை சட்டமும் உள்ளது. அதன்படி அந்த குழந்தையை தத்து எடுப்பதாக மாவட்ட கோர்ட்டில் மனுச் செய்து, பெற வேண்டும். அதற்கு அவர்கள், இது போன்ற ஏஜெண்சி நிறுவனத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். சீனியாரிட்டி முறையில் குழந்தையை தத்து எடுக்கலாம். இந்த முறைப்படி, நாம் விரும்பும் குழந்தையை தத்து எடுக்க முடியாமல் போய்விடும். இந்த சட்டம் பிரிவு 38-ன்படி, அப்படி ஒரு குழந்தையை தத்து கொடுக்கும் நிலையில் உள்ளதாக அந்த ஏஜெண்சி பதிவு செய்து அறிவிக்கும். அதன்பின், அதை வளர்க்க நினைக்கும் வளர்ப்பு பெற்றோர், அந்த ஏஜெண்சியை அணுக வேண்டும். அதுவும் சீனியாரிட்டி முறைப்படியே வரும். அவர்கள் தகுதி உடைய பெற்றோர்கள் தானா என்று பலநாள் விசாரனைக்குப் பின்னரே அதை தத்து எடுக்க கோர்ட்டுக்கு மனு போட முடியும்.

எனவே இந்த வழக்கில் இப்போதைக்கு அந்த குழந்தையை அவர்கள் பொறுப்பில் வைத்து வளர்த்து வரலாம் என்றும், பின்னர் முறைப்படி தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இடைக்காலத் தீர்ப்பு கூறியுள்ளது.

**

Thursday, January 10, 2019

Operation Success, but patient dead.


Operation Success, but patient is dead.

“ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது, ஆனால் நோயாளி இறந்து விட்டார்.” இதை ஒரு பழமொழியாகவே இப்போது சொல்கிறார்கள். பலன் கிடைக்காத வேலையை இப்படி குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பழமொழி எப்படி உலக மக்களிடையே பிரபலமானது என்பதும் ஒரு சுவாரசியமே!

1829-ம் வருடம் ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் ஒரு மாநிலமான ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஒரு மாலை நேரப் பத்திரிக்கையில் “ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது” என்று ஒரு செய்தி வருகிறது. Dr. Liston என்பவர் ஒரு நோயாளிக்கு இடுப்பு தொடை இணைப்பு எலும்பு கழற்று விட்டது என்று ஆப்பரேஷன் செய்கிறார்.  ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. செய்தித்தாளில் அதை “ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது” என்று போடுகிறார்கள். ஆனால் அந்த நோயாளிக்கு வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு அன்றே இறந்து விடுகிறார்.

இந்த விபரம் வெளியில் தெரிந்தவுடன், எல்லோரும் கேலியாக “ஆப்பரேஷன் சக்சஸ், பேஷண்ட் டைட்டு” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அன்று முதல் இது உலக வழக்கமாகியும் விட்டதாம்.

**


Sunday, December 23, 2018

ஒரே நேரத்தில் இரண்டு ஈபி



ஒரே நேரத்தில் இரண்டு ஈபி மனுக்கள் போட முடியுமா?
Sait Chunilal Moolchand என்பவருக்கு வியாபாரக் கணக்கு வழக்குகளில் வர வேண்டிய பாக்கி உள்ளதாக, Bethia Venkanna and Chundrapu Lovaraju என்ற இரண்டு பிரதிவாதிகள் மீது ஓஎஸ் வழக்கை 1934-ல் காகிநாடா சப் கோர்ட்டில் போட்டு டிகிரி வாங்கி விட்டார். மொத்த டிகிரி ரூ.19,000/-க்கு. அதில் முதல் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா Madras Act IV of 1938 (Madras Agriculturists Relief Act 1938) ன் படி வட்டிப் பணத்தை தள்ளுபடி பெற்று விட்டார். எனவே 1-வது பிரதிவாதி மீது ரூ.15,000/-க்கு (வட்டி இல்லாமல்) மட்டுமே டிகிரி ஆனது. 2-ம் பிரதிவாதி மீது ரூ.19,000/-க்கு (மொத்த அசல், வட்டிக்கு) டிகிரி ஆகிறது. (அதாவது மொத்த டிகிரியான ரூ.19,000-த்தில், ரூ.15,000 என்ற அசல் தொகையை இரண்டு பேர் சேர்ந்தும், ரூ.4,000 ஆன வட்டியை 1-ம் பிரதிவாதி தனியே கொடுக்க வேண்டும் என்றும் கீழ்கோர்ட் தீர்ப்பு).
1956ல் சேட் இந்த டிகிரியை எக்சிகியூட் செய்கிறார். 1-ம் பிரதிவாதி லோவராஜூ மீது ஈபி போட்டு, அவர் சொத்தை அட்டாச் செய்து ஏலத்துக்கு கொண்டு வருகிறார்.
அநத ஈபி நிலுவையில் இருக்கும் போதே, சேட், மற்றொரு ஈபி போட்டு, 2-ம் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா மீது ரூ.19,000/- ஆன முழு டிகிரி பணத்தையும் கேட்டு அவரின் கார்கோ பைபர் பேல்களை (ஏற்றுமதிக்கு வைத்திருந்த சரக்கை) ஜப்தி செய்து விட்டார்.
எனவே 2-ம் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா ஈபி கோர்ட்டில் ஒரு மனுவைப் போடுகிறார். அதில், மொத்த டிகிரியே ரூ.19,000 ம்தான். அதில் 1-ம் பிரதிவாதி மீது ஏற்கனவே ரூ.15,000 க்கு ஈபி போட்டு அவர் சொத்தை அட்டாச் செய்து ஏலத்துக்கு கொண்டு வந்து நிலுவையில் உள்ளது. எனவே மீதி உள்ள ரூ.4,000 க்கு மட்டுமே என் மீது ஈபி போட முடியும் என்று ஆட்சேபனை தெரிவித்து மனு போட்டார். அதை ஈபி கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
அதை எதிர்த்து, 2-ம் பிரதிவாதி, ஐகோர்ட்டுக்கு அப்பீல் போகிறார். அங்கு ஒரு சிறு விஷயம் மட்டுமே அலசப் படுகிறது. “ஒரே நேரத்தில், ஒரு டிகிரியில் உள்ள இரண்டு பிரதிவாதிகள் மீது, வேறு வேறு ஈபி போட முடியுமா? என்பதே கேள்வி
அதைப்பற்றி இதுவரை ஒரு வழக்குத் தீர்ப்பும் (1957 வரை) முடிவாகவில்லை என்று ஐகோர்ட் சொல்கிறது. எனவே இருக்கும் தீர்ப்புகளை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று ஐகோர்ட் நினைக்கிறது.
ஏற்கனவே முதலில் 1-வது பிரதிவாதி மீது போட்ட ஈபி-ல் ரூ.15,000 கேட்டு விட்டதால், மீதி இருக்கும் ரூ.4,000 க்கு மட்டுமே 2-ம் பிரதிவாதி மீது கேட்க முடியும் என்றும், மொத்த டிகிரி தொகையான ரூ.19,000 க்கும் கேட்க முடியாது என்பது 2-ம் பிரதிவாதியின் வாதம்.
பொதுவாக, டிகிரி வாங்கியவர், ஒரே நேரத்தில் இரண்டு பிரதிவாதிகள் மீது வேறு வேறு ஈபி போட முடியும். அதற்காக கோர்ட்டின் முன் அனுமதியும் தேவையில்லை.
சிபிசி ஆர்டர் 21 ரூல் 11(2)(சி)ல் டிகிரி வாங்கியவர் ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். அதில், “இதுவரை வசூல் செய்த பணம் எவ்வளவு” என்று குறிப்பிட வேண்டும். ஏற்கனவே ஈபி நிலுவையில் இருந்தால், அது வசூல் செய்த பணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
சிபிசி-ல் ஒரே நேரத்தில் இரண்டு ஈபி-கள் போடலாம். சிபிசி ஆர்டர் 21 ரூல் 30-ல் இதைப் பற்றி சொல்லி உள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் மீது, அவரை அரஸ்ட் செய்யவும், அவரின் சொத்துக்களை அட்டாச் செய்யவும் தனித் தனி ஈபி மனுக்களைப் போடலாம் தவறில்லை என்று சொல்லி உள்ளது.
Om Prakash v. Tahera Begam, AIR 1955 All 382 என்ற வழக்கில், சிபிசி-ல் தடை இல்லை என்றால், ஒரே நேரத்தில் பல ஈபி-களை ஒருவர் மீதே போடலாம் என்று அந்த தீர்ப்பில் சொல்லப் பட்டுள்ளது.
It is only quite common that not only in suits but also in execution petitions all possible lines of fact and law are explored by parties concerned to gain success for themselves at the cost of the opposite party.
Consequently, if the law were to force a decree-holder to treat an execution petition which he has filed for a certain amount as equivalent to having realised the amount, it would be like forcing him to count the chickens before they are hatched.
எனவே 2-ம் பிரதிவாதியான இந்த அப்பீல் வழக்கைப் போட்டவர், வசூல் ஆகாத பணத்தை, வசூல் ஆன கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து கேட்பதை ஏற்க முடியாது. அவரின் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது.
**


கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்துக்களில் வாரிசு உரிமை:

கோபார்சனரி (Coparcenary) என்னும் பூர்வீகச் சொத்துக்களில் வாரிசு உரிமை:

1956 சட்டத்தின் பிரிவு 6ஐ – 2005ல் திருத்தி விட்டார்கள். (இந்த திருத்தல் சட்டத்தின்படி மகன்களைப் போலவே மகள்களுக்கும் சரி சம பங்கு உண்டு என்று திருத்தப்பட்டுள்ளது).

2005 திருத்தல் சட்டத்தின் படி புதிய பிரிவு 6:

(1) இந்து மித்தாக்சரா கூட்டு குடும்பத்தில், 2005 திருத்தல் சட்டம் வந்த பின்னர், மகனைப் போலவே மகளுக்கு பிறப்பால் சம பங்கு உண்டு.

இந்த 2005 சட்டத்துக்குப் பின்னர், இந்து மித்தாச்சரா கூட்டுக் குடும்பம் என்பது மகனையும், மகளையும் சேர்த்தே குறிக்கும்.

ஆனால், 20.12.2004 தேதிக்கு முன்னர், அந்த கூட்டுக் குடும்பச் சொத்தை அப்போது உள்ள கோபார்சனர்கள் பாகம் செய்து கொண்டிருந்தாலும், விற்பனை செய்து இருந்தாலும், மகள் அதில் பங்கு கேட்க முடியாது.

(2) அவ்வாறு மகளுக்கு கூட்டுக் குடும்பச் சொத்தில் உள்ள அவளின் பாகத்தை, அவள் தன் வாழ்நாளில் உயில் போன்றவைகள் மூலம் எழுதி வைக்கும் அதிகாரம் அவளுக்கு உண்டு.

(3) 2005 திருத்தல் சட்டம் வந்த பின்னர், ஒரு இந்து ஆண் தனது கூட்டுக் குடும்ப சொத்தை விட்டு விட்டு இறந்திருந்தால், அதில் இறந்த அவருக்கு உள்ள பங்கு மட்டும், அவரின் வாரிசுகளுக்கு இன்டஸ்டேட் அல்லது டெஸ்டமெண்டரி வழி மூலம் கிடைக்கும். (அவரின் பங்கு, மீதி இருக்கும் கோபார்சனர்களுக்கு போய் சேராது).

இந்த கோபார்சனர் இறந்த விட்ட நிலையில், அங்கு ஒரு கற்பனை பாகம் நடத்தி, அந்த பாகப்பிரிவினையில், இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கும், உயிருடன் இருக்கும் மற்ற கோபார்சனர்களுக்கு தலைக்கு ஒரு பங்கும் பிரித்துக் கொள்ள வேண்டும். இறந்த கோபார்சனரின் பங்கு மட்டும், அவரின் வாரிசுகளுக்கு இன்டஸ்டேட் அல்லது டெஸ்டமெண்டரி முறையில் கிடைக்கும். அதாவது இறந்தவரின் கோபார்சனரி பங்கு, மற்ற கோபார்சனர்களுக்கு போகாது; (1956-க்கு முன்னர் இறந்தவரின் கோபார்சனரி பங்கு, உயிருடன் இருக்கும் மற்ற கோபார்சனர்களுக்கே போய் சேரும், மாறாக இறந்தவரின் வாரிசுகளுக்குப் போகாது என்ற நிலை இருந்தது).

எனவே 2005 திருத்தல் சட்டத்துக்குப் பின்னர், ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், கற்பனை பாகப் பிரிவினையில், இறந்த கோபார்சனருக்கும், அவரின் மகன்கள், மகள்கள் எல்லாரும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்வர். 1956 சட்டப்படி, இறந்த கோபார்சனரும், அவரின் மகன்களும் மட்டுமே எடுத்துக் கொண்டனர். (2005 திருத்தல் சட்டப்படி, அதில் மகளையும் இப்போது சேர்த்துக் கொண்டனர்).

எனவே, மகனைப் போலவே மகளும் ஒரு கோபார்சனர் பங்குதாரர் ஆகி விட்டார்.

இறந்தவருக்கு மகனோ, மகளோ ஏற்கனவே இறந்து விட்டால், அவரின் பிள்ளைகள், கோபார்சனரி முறைப்படி அந்த தகப்பனின்/தாயின் பங்கை பெற்றுக் கொள்வார்கள்.

இதேபோல், இறந்தவரின் மகன்/மகள் இறந்து, அவரின் பிள்ளைகள் இருந்தால், அவர்களும், அதேபோல கோபார்சனரி முறைப்படி அந்த பாட்டன்/பாட்டி பங்கைப் பெறுவார்கள்.

(4) 2005 திருத்தல் சட்டத்துக்குப் பின்னர், பாயஸ் ஆப்ளிகேஷன் (Pious obligation) என்ற முறை ஒழிக்கப்பட்டது. அதாவது, தந்தையின்/பாட்டனின்/ பூட்டனின் கடனை அவரின் மகன்/ பேரன்/ கொள்ளுப் பேரன் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. 2005க்கு பின்னர் ஏற்பட்ட இந்த வகையான கடனை, அவரின் மகன்/பேரன்/கொள்ளுப்பேரன் கொடுக்க வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை.

ஆனாலும், 2005 சட்டம் வருவதற்கு முன்னர் ஏற்பட்ட கடனை, கொடுத்தாக வேண்டும்.

(5) 2005 சட்டம் வருவதற்கு முன்னர், அதாவது 20.12.2004 தேதிக்கு முன்னர், ஒரு கோபார்சனர் இறந்து விட்டிருந்தால், அப்போது ஒரு கற்பனை பாகப் பிரிவினை நடந்து, அவரின் மகன், பேரன் இவர்களுக்கு கோபார்சனரி சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படி பாகம் நடந்து இருந்தால், அந்த சொத்தில் மகளுக்கு பங்கு என்ற இந்த திருத்தல் சட்டம் செல்லாது.

பாகப்பிரிவினை என்று இங்கு சொல்வது – பதிவு செய்யப்பட்ட பாகப் பிரிவினைப் பத்திரங்கள் மட்டுமே. (வாய்மொழி பாகப் பிரிவினை செல்லாது; கூர்சீட்டு முறையில் பாகம் பிரித்துக் கொண்டாலும் செல்லாது; கோர்ட்டில் பாக வழக்குப் போட்டிருந்தாலும் செல்லாது; கோர்ட் வழக்கில் பைனல் டிகிரி கொடுத்திருந்தால் மட்டுமே அந்த பாகம் செல்லும்).

குறிப்பு: இந்த 2005 திருத்தல் சட்டம் வருவதற்கு முன்பே, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு இவைகள் ஒரு திருத்தல் சட்டம் கொண்டு வந்து, அதன்படி மகள்களுக்கும் கோபார்சனரி கூட்டுக் குடும்பச் சொத்தில் சம பங்கு கொடுத்து விட்டது.

அதன்படி தமிழ்நாடு திருத்தல் சட்டம் 1989ல் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு ஆண் கோபார்சனர் (தகப்பன் என்று வைத்துக் கொள்வோம்) இறந்து விட்டால், அவர் இறக்கும் போது, மகனை மட்டும் கோபார்சனர் என்று நினைக்காமல், மகளையும் ஒரு கோபார்சனர் என்று நினைத்து, அவளுக்கும் ஒரு கோபார்சனரி பங்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திருத்தல் சட்டம் சொல்கிறது. அதில், 1989-க்கு முன்னர் திருமணம் நடந்து கணவர் வீடு சென்ற பெண்ணை கோபார்சனர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை; திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டிலேயே இருக்கும் பெண்ணை மட்டுமே கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டது; இதை ஒட்டியேதான் 2005 மத்திய அரசின் திருத்தல் சட்டம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).

கோபார்சனரி சொத்தும், மகளின் உரிமையும் – ஒரு விளக்கம்:

1956-க்கு முன்னர், பழைய இந்து தர்ம சட்டமே அமலில் இருந்து வந்தது. அதன்படி பெண்களுக்கு சொத்தில் எந்த உரிமையும் கொடுக்கவில்லை. அதாவது, வாரிசு முறைப்படி ஒரு பெண்ணுக்கு சொத்தே கிடைக்காது. அவளாகவே தன் சேமிப்பைக் கொண்டு சொத்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். யாராவது உறவினர் அவளின் திருமணத்தின் போதோ, பின்னரோ, ஒரு சொத்தை அவளுக்கு சீதனமாக (செட்டில்மெண்டாக) கொடுக்கலாம். அதை சீதனச் சொத்து என்பர். அதன்படி, 1956-க்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு அவள் கிரயம் வாங்கிய சொத்தும், சீதனமாகக் கிடைத்த சொத்தும் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அவளின் தகப்பன், தாய், பாட்டன், பாட்டி சொத்துக்கள் எப்போதும் வாரிசு முறைப்படி கிடைக்காது. (ஏனென்றால், அவள் பிறந்த வீட்டிலேயே வாழும் பெண் இல்லை; புகுந்த வீட்டில் வாழும் பெண்). இதுதான் 1956-க்கு முன்னர் இருந்த பெண்களின் நிலை.

ஒரு ஆணின் சொத்தை அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் மட்டுமே சர்வைவர்ஷிப் (Survivorship) என்ற முறையில் அடைந்து கொள்வர். (அதாவது உயிருடன் இருக்கும் மகன், பேரன், இறந்த ஆணின் சொத்தை அடைவதை சர்வைவர்ஷிப் என்பர்). இதைத்தான் கோபார்சனரி சொத்து என்பர். இதில் அந்த ஆண்களின் மனைவி, மகள் போன்ற எந்தப் பெண்ணுக்கும் பங்கு கொடுக்க மாட்டார்கள். அதாவது சர்வைவர்ஷிப் முறைபடி பங்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி இறந்த ஒரு கோபார்சனரின் விதவை மனைவியை மற்ற கோபார்சனர்கள் பாதுகாத்து (உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து) வர வேண்டும். அது அவர்களின் சட்டக் கடமை. இப்படி இருந்த நிலையில், ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவி, மற்ற கோபார்சனர்களை (பங்காளிகளை) நம்பியே இருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. 1937-ல் இதை மாற்ற நினைத்து ஒரு புது சட்டத்தை கொண்டு வருகிறார்கள். அது கோபார்சனரி சொத்துக்களில் விதவையின் பங்கு உரிமைச் சட்டம் 1937 என்று கொண்டு வந்தார்கள். அதன்படி, ஒரு கோபார்சனரி ஆண் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவி, அந்த இறந்த கணவரின் கோபார்சனரி பங்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதை அவள், அவளின் வாழ் நாள் வரை ஆண்டு அனுபவித்து வரலாம் என்றும், ஆனாலும் அவள் அந்தப் பங்கை விற்பனை செய்ய முடியாது என்றும், (அப்படியே விற்பனை செய்தாலும், அது அவளின் வாழ்நாள் வரைதான் செல்லும் என்றும்), அவள் வாழ்நாளுக்குப் பின்னர், அந்தப் பங்கு சொத்தானது, அவளின் இறந்த கணவனின் மற்ற தாயாதிகள் என்னும் பங்காளிகளுக்குப் போய் சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக, விதவைகளை மட்டும் ஓரளவு பாதுகாத்தார்கள். முழுவதுமாக சொத்து உரிமை கொடுக்கவில்லை.

பின்னர், 1956-ல் பழைய இந்து சட்டத்தையே மாற்றி, பழைய பழக்க வழக்கங்களையும் மாற்றி, புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன்படி, 1956-க்கு பின்னர் ஒரு ஆண் சம்பாதித்த சொத்தில், அவரின் இறப்புக்குப் பின்னர், அவரின் எல்லா வாரிசுகளுக்கும் (மகன், மகள் உட்பட, மனைவி, தாய் இவர்களுக்கும்) சம பங்கு கொடுத்து விட்டார்கள். பெண் சம்பாதித்த சொத்தில், அவள் இறப்புக்குப்பின்னர், அவளின் கணவர், மகன், மகள் இவர்களுக்கு சம பங்கு கொடுத்து விட்டார்கள்).   ஆனால், பூர்வீக சொத்து என்று சொல்லும் கோபார்சனரி சொத்துக்களில் ஒரளவு சீர்திருத்தம் செய்தார்கள். அதை முழுமையாகச் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். 1956 இந்து வாரிசு உரிமை சட்டம், பழைய பிரிவு 6 இப்படியான கோபார்சனரி சொத்துக்களைப் பற்றிச் சொல்கிறது.

1956 சட்டத்தின் பழைய பிரிவு 6-ல் கோபார்சனரி சொத்துக்கள்:

1956 சட்டம் வருவதற்கு முன்னர், ஒரு ஆணின் கையில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் கோபார்சனரி சொத்துக்களே. ஒரு ஆண் 1956-க்கு முன்னர் இறந்து விட்டால், அது அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே கோபார்சனர்கள் என்ற முறையில் பிறப்பால் பங்கு உரிமை அவர்களுக்கே போய் சேர்ந்து விடும். அதில் பெண்களுக்கு (மனைவிகள், மகள்கள், தாய்கள்) இவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது. இந்த நிலையை 1956 சட்டம் பிரிவு 6 ஒரளவு மாற்றியது. அதன்படி, ஒரு கோபார்சனர் ஆண் இறந்து விட்டால், அப்போது இறந்தவருக்கும் அவரின் மகன், பேரன் இவர்களுக்குள் ஒரு கற்பனை பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டும் என்றும், அதில் இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கு கிடைக்கும். அந்தப் பங்கை அவரின் தனிச் சொத்தாகக் கருதி, அவரின் மனைவி, மகள், மகன், இறந்த மகன், மகள் இவர்களின் குழந்தைகள் இவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது. இதில் இறந்த கோபார்சனரி ஆணின் பங்கு மட்டுமே அவரின் மனைவி, மகள் இவர்களுக்குக் கிடைக்கும். அது ஒரு சிறு பங்குதான். ஆனால் மற்ற கோபார்சனர்கள் என்று சொல்லும் இறந்தவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் இவர்களுக்கு பெரிய பங்கு கிடைத்துவிடும் நிலை இருந்தது.

இதை மாற்றி, ஆந்திரா மாநிலம் 1987-ல் மகளையும் ஒரு கோபார்சனர் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண் என்ற காரணத்துக்காக  அவளை ஒதுக்கி விடக்கூடாது என்று 1956 சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. இது சரியான அணுகுமுறை என்று நினைத்த தமிழ்நாடு அரசும் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு 1989-ல் தமிழ்நாடு திருத்தல் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, மகளையும் கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டு அவளுக்கும் கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்தில், மகனைப் போலவே சரி சம பங்கு கொடுத்தது. ஆனாலும், திருமணம் ஆகி கணவர் வீட்டுக்குச் சென்றவரை எப்படி கோபார்சனர் என்று ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற தர்க்கவாதம் காரணமாக, திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருக்கும் பெண்ணையே கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டு, அவளுக்கும் மகனைப் போலவே சரிசம பங்கு கொடுத்தது.

இதற்குப்பின்னர், இந்த முறை சரியாக இருப்பதைக் கண்ட மத்திய அரசு, இந்து வாரிசு உரிமை திருத்தல் சட்டம் 2005ஐ கொண்டு வந்தது. அதில் மகளும் கோபார்சனர் என்றும், அவள் க்கும் மகனைப் போலவே சம பங்கு உண்டு என்று சட்டத்தை திருத்தியது.

**