சிற்பக்கலை
வேலைவாய்ப்பு பற்றிய வழக்கு
இந்தியாவில்
உள்ள கோயில்களின் கட்டிடக்கலையை பராமரிக்கவும், சிற்பங்களை உருவாக்கவும், சீரமைக்கவும்,
தேவை ஏற்பட்டு, 1957-ல் மாமல்லபுரத்தில் ஒரு கல்லூரி ஆரம்பிக்கபட்டது. The Tamil
Nadu Institute of Architecture and Sculpture, Mamallapuram. இங்கு
கோயில் பராமரிப்பு, சிற்ப வேலைப்பாடு முதலிய பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. மொத்தம்
58 துறைகளில் பட்டம் வழங்கப்படுகிறது. இது சென்னை பல்கலைகழத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
Bachelor of Fine Arts Degree என்பது 1981 முதல் தொடங்கபட்டுள்ளது.
இது நான்கு வருட படிப்பாகும். பின்னர் 8 வருடப் படிப்பாக ஆக்கப்பட்டது. இதற்கு தகுதி
எட்டாவது தேர்வு அல்லது தோல்வி இருந்தால் போதும் என்று இருந்தது. பின்னர் 1981-ல் இதை
Bachelor of Fine Arts in Traditional Architecture and Traditional Sculputure
என்று மாற்றி, அதற்குத் தகுதியாக +2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்
என்று கொண்டு வந்து, நான்கு வருடப் படிப்பாக ஆக்கப்பட்டது. இந்தியாவிலேயே இங்குதான்
இப்படிப்பட்ட கல்லூரி உள்ளது. 40 மாணவர்கள் வருடாவருடம் வெளிவருகிறார்கள். இது ஆரம்பிக்கப்பட்ட
1957-லிலிருந்து இதுவரை சுமார் 1800 மாணவர்கள் வெளிவந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில்
உள்ள கோயில்களுக்கு ஸ்தபதிகள் தேவைப்பட்டாலும், HR&CE துறை
மூலம் இவர்களைத் தேர்வு செய்வதில்லை. மாறாக வெளி ஆட்களிடம் ஒப்பந்தம் மூலமே தேவைப்படும்
வேலைகளைச் செய்து கொள்கிறார்கள். ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஸ்தபதிகளை அரசாங்கம் நியமனம்
செய்கிறது.
தமிழ்நாட்டில்
மொத்தம் சுமார் 38,615 இந்து கோயில்கள், ஜெயின் கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் அரசின்
HR
& CE துறையின் கீழ்தான் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. இங்குள்ள பல கோயில்கள் 100 வருடங்களுக்கும் மேலானவை.
சில கோயில்கள் 1000 வருடங்களுக்கும் மேலானவை.
எனவே இந்த கோயில்களுக்கு
அந்த பட்டப்படிப்பு படித்த ஸ்தபதிகளை நியமித்தால் என்ன என்று ஒருவர் சென்னை உயர்நீதி
மன்றத்தில் ரிட் மனுப் போட்டார். தமிழ்நாட்டில்
உள்ள எல்லா கோயில்களும் Joint Commissioner and Deputy Commissioner of the HR&CE
துறையின் நிர்வாகத்தில் உள்ளது. இங்கு இருக்கும் Engineers கோயில் கட்டிடத் துறை வல்லுநர்கள் அல்ல. அவர்களுடன் ஸ்தபதிகளையும் நியமிக்கலாமே
என்று கேட்கிறார். அவர்களுக்கு கோயில் கட்டிட நுணுக்கம், சிலை வடிவமைப்பு நுணுக்கம்
தெரியும் என்கிறார்.
ஆனால் அரசு
தரப்பில், ஸ்தபதிகளை ஒப்பந்தம் மூலமே நியமித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறது. அரசு,
கல்லூரிகளை உருவாக்கலாம், ஆனால் அவர்களுக்கு வேலைகளையும் உருவாக்க முடியாது என்கிறது.
தமிழ்நாட்டில்
50,000 கோயில்களுக்கு மேல் உள்ளன. அதில் சுமார் 38,000 கோயில்களுக்கு மேல் அரசின் நிர்வாகத்தில்
உள்ளது. அதில் சில கோயில்கள் சுமார் 2,000 வருடங்களைத் தாண்டியும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கோயில்களில்
கர்ப்பகிரகத்தில் உள்ள விக்கிரகங்கள் மட்டுமே சிலைகள் என்று கருத முடியாது. கடவுள்
சிலைகளும் இருக்கின்றன. (The temples not only consist of deities in the form
of idols, but also sculptures in the form of idols with marvelous architecture).
தமிழ்நாட்டில்
உள்ள பல கோயில்களை Archaeological temples ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Tamil
Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 & Act 1991 இவைகளின் நோக்கமே, “பழமையான இந்து கோயில்களை புரணமைப்பு செய்வதற்காக... என்ற
நோக்கில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
இடையில் கோயில்
கமிட்டிகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் அது நீக்கப்பட்டு இப்போது Commissioner,
Joint Commr., Dy Commr., Asst. Commr. என்ற வரிசையில் நிர்வாகம் நடக்கிறது.
இந்த வழக்கில்,
ஸ்தபதிகளையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகச் சட்டத்தை கொண்டுவரும்படி அரசுக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
**
No comments:
Post a Comment