வேதத்தின் சுருக்கம்:
மாதவன் பேர் சொன்னாலே அது வேதத்தின் சுருக்கம்தான் என்கிறார்
பூதத்தாழ்வார்; ஒத்து என்றால் வேதம் என்று பொருள்.
“ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்
எத்தும் திறம் அறிமின் ஏழைகாள், ஒத்து அதனை
எல்லீரேல் நன்று, அதை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு.”
(வேதத்தின் அர்த்தமும் முடிவும் இவ்வளவுதான். அது உத்தமமான
திருமாலின் பெயரை ஏற்றமாகச் சொல்கிறது. ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது.
இல்லையென்றாலும் பரவாயில்லை. மாதவன் பேர் சொன்னால் போதும், அதுதான் வேதத்தின் சுருக்கம்.)
**
No comments:
Post a Comment