Protracted Litigation
வழக்குப் போடுபவர்,
தனது சட்ட உரிமையை நிலைநாட்டவே கோர்ட்டை நாடுகிறார். அப்படி வழக்குப் போட்டுவிட்டு,
வேறு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டு இருக்க கூடாது. வழக்கு
நடத்த தயாராக இருக்க வேண்டும். வழக்கை வேண்டுமென்றே நடத்தால் விட்டுவிடுவது, பின்னர்
ஒரு மனுவைப் போட்டு மறுவிசாரனைக்கு கேட்பது, அந்த மனுவையும் காலதாமதமாகப் போடுவது,
அந்த கால தாமதத்தை மன்னிக்கச் சொல்லி மனுப்போடுவது, அதற்கும் ஏதாவது பொய்யான காரணங்களைக்
கூறுவது, இவை எல்லாமே வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமே.
உண்மையிலேயே
சில நியாயமான காரணங்களால், வழக்கு நடத்த முடியாமல் விட்டிருப்பார். அப்போது அவ்வாறான
மனுவை போட்டு, மறுவிசாரனை கேட்கலாம். ஆனால் அதற்கு நம்பத்தகுந்த காரணமும், ஏற்றுக்
கொள்ளகூடிய காரணமும் வேண்டும்.
The
litigants cannot be abused for the purpose of prolongation and protection.
Litigants are approaching the Court for establishing their legal rights. While
doing so, they are expected to be vigilant and proper in disposal of the cases.
The Court cannot encourage prolongation of litigation at the instance of the
parties.
பொதுவாக, மனுக்களை
கால தாமதமாகப் போட்டால், அதற்கு தகந்த, நம்பும்படியான, நியாயமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய
காரணத்தைச் சொல்ல வேண்டும். கால தாமதத்தை மன்னிப்பது என்பது விசாரனை கோட்டின் தனிப்பட்ட
விருப்ப முடிவாகும். அந்த “விருப்ப முடிவில்” அப்பீல் கோர்ட் ஏதும் தலையிட முடியாது.
ஆனால் வேறு சட்ட சிக்கல் இருந்தால் மட்டுமே
அப்பீல் கோர்ட் தலையிட முடியும். மற்றும் அந்த விருப்ப முடிவை விசாரனை கோர்ட் தன்னிச்சையாக
காரண காரியங்களை கவனிக்காமல் எடுத்திருந்தால் அப்படிப்பட்ட முடிவில் அப்பீல் கோர்ட்
தலையிடலாம்.
காலதாமதத்தை
மன்னிக்கும் போது, கீழ்கோர்ட் கொஞ்சம் சலுகையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த எதிர்பார்ப்பு, வழக்குக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படாமல், வழக்கின் பார்ட்டிகளுக்கு
கஷ்டம் கொடுப்பதாக இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதற்காக பொய்யான காரணங்களை ஏற்றுக்
கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட் Rukmini v. Rajendran (2003) 1 LW
585 என்ற வழக்கில் தீர்ப்பாகச் சொல்லியுள்ளது.
வேறு ஒரு வழக்கான
பாங்க் வழக்கில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வழக்கில் (1990-1 LLN
457) Justice M.Srinivasan அவர்களின் தீர்ப்பில்,
“கால தாமதத்தை மன்னிப்பதால், எதிர் பார்ட்டிக்கு ஒரு நஷ்ட ஒன்றும் இல்லை என்று பொதுவாகச்
சொல்லி விட முடியாது. காலம் கடந்து தாக்கல் செய்யும் மனுவை, எதிர்பார்ட்டி புதிதாக
சந்திக்கும்போது, மிகுந்த சிரமத்துக்கும் ஆளாவார்” என்று கூறப்படுள்ளது.
“If a litigant
chooses to approach the Court long agter the time prescribed under the relevant
provisions of the law, he cannot say that ‘no prejudice would be caused to the
other side’ by the delay being condoned. The other side would have in all
probability destroyed the records thinking that the records would not be
relevant as there was no further proceedings in the matter. Hence, to view a
matter of condonation of delay the respondent in that application will be
fallacious.”
கால தாமதத்தை
மன்னிப்பதற்காக Limitation Act Sec.5 இருக்கிறது. அதில்,
Sufficient cause சரியான காரணம் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்
பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பல வழக்கின் தீர்ப்புகளில் “காலதாம மன்னிப்பு மனுக்களை
கொஞ்சம் விசாலமான மனதுடன் அணுக வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஏனென்றால், அந்த மனு
தள்ளுபடியானால், அவரின் “வழக்குப்போடும் உரிமையே” போய்விடும் என்பதால். எனவே கோர்ட்டுகள்
கொஞ்சம் காலத்துக்கு ஏற்ற சூழலையும் கவனிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.The
Court is to adopt a pragmatic approach to condone the delay when there is no
negligence, inaction, or want of bona fide on the part of the applicant. உண்மையில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யவில்லை என்றால், அவரிடம் கொஞ்சம் விசாலமான
மனதுடன் அணுகலாம்.
**
No comments:
Post a Comment