சிவனும் விஷ்ணுவும் ஒன்றே!
பொய்கையாழ்வார், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்று ஒரு பாடல்
பாடியுள்ளார்.
“அரன் நாரணன் நாமம், ஆன்விடை புள் ஊர்தி,
உரைநூல் மறை, உறையும் கோயில் வரை நீர்,
கருமம் அழிப்பு அளிப்பு, கையது வேல் நேமி,
உருவம் எரி கார், மேனி ஒன்று.”
பெயர் – பரமசிவன், நாராயணன்.
வாகனம் – எருது, கருடன்.
பெருமை சொல்லும் நூல்கள் – ஆகமம், வேதம்.
இருக்கும் இடம் – கையாலயமலை, பாற்கடல்.
தொழில் – அழித்தல், காத்தல்.
ஆயுதம் – வேல், சக்கரம்.
உருவம் – நெருப்பின் சிவப்பு, மேகத்தின் கருப்பு.
உடல் – ஒன்றே!
**
No comments:
Post a Comment