TRANSGENDER WOMAN LOST HER JOB
இன்றிலிருந்து சுமார்
58 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவன் பெயர் ஸ்டீபன்சன்ஸ்.
அவனுக்கு ஐந்து வயது ஆகும்போது, அவன் உடலில் ஏதோ மாற்றம் தெரிவதை உணர்கிறான். அவன்
பெண்ணின் இயல்பை அடைகிறான். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆண் உடையில் ஆணாகவே வாழ்கிறான்.
படிக்கிறான். வயது வந்தவுடன் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு
அரசாங்க வேலையும் கிடைக்கிறது. இடுகாட்டின் நிர்வாக அதிகாரி வேலையைப் பார்க்கிறான்.
வாழ்க்கை இப்படியே ஒடுகிறது.
ஆனால் அவனின் பெண்மைத் தன்மை தலைதூக்கி நிற்கிறது. வேலையில் ஆண் உடையில் வேலை பார்ப்பான்.
வீட்டுக்கு வந்ததும் பெண் உடைக்கு மாறிக் கொள்வான். கடைகளுக்குச் செல்லும் போதும் பெண்
உடைதான். அதுவே அவனுக்கு மனதுக்குப் பிடித்து விட்டது.
ஆக அவன் வாழ்வில் இரண்டு
வேடங்களில் வலம் வரவேண்டிய கட்டாயமாகிறது. வெளி உலகத்துக்கு ஆணாகவும், அவன் உள் உலக
வீட்டில் பெண்ணாகவும் வாழ்கிறான். இது அவனுக்கு மனச் சோர்வைக் கொடுக்கிறது. ஒருநாள்,
முழுவதும் மனம் உடைந்த நிலையில் தற்கொலைக்கும் முயன்று, துப்பாக்கியை தன் நெஞ்சில்
வைக்கிறான். ஆனாலும், அவன் அவன் என்ற அவளை விரும்புவதால், தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவில்லை.
2013-ல் அவன் மனம் ஒரு
தெளிவு பெறுகிறது. ஏன், நான் இதை வெளி உலகுக்கும் தெரிவிக்கக் கூடாது என்று நினைக்கிறான்.
நண்பர்களை கலந்து ஆலோசிக்கிறான். சரி என்ற முடிவுக்கு வருகிறான். தன் மேலதிகாரிக்கு
கடிதம் எழுதுகிறான். நான் ஒரு ட்ரான்ஸ்ஜென்டர் Transgender என்று. ஆணாக இருந்தாலும் நான் ஒரு பெண் தன்மை கொண்டவன். எனவே நான் என்னைப்
பெண்ணாகவே கருதுகிறேன். எனவே இனி நான் அலுவலகம் வரும்போது, பெண் உடையில் வரவே விரும்புகிறேன்.
எனக்கு பெண் அலுவலகச் சீருடை வழங்க வேண்டும் என்று கேட்கிறான்.
மேலதிகாரி, இதற்குப்
பதிலாக, “இது சாத்தியப்படாது. எனவே நீங்கள் வேலையை விட்டு நின்று விடுங்கள். மூன்று
மாதச் சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று பதில். அவன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
அதனால், மேலதிகாரி, அவனை வேலையை விட்டுத் தூக்கி விடுகிறார்.
அவனும் விடுவதாக இல்லை.
மாவட்ட கோர்ட்டில் வழக்குப் போடுகிறான். அரசாங்க வேலையில் ஆண், பெண் என்ற வித்தியாசம்
பார்க்கக் கூடாது என்பதே அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம். அப்படி இருக்கும்போது,
என்னை ஆண்-பெண் வித்தியாசம் பார்த்து வேலையில் இருந்து நீக்கியது செல்லாது என்று வழக்குப்
போடுகிறான். ஆனால் மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக இல்லை. “ஆண்-பெண்
வித்தியாசம் பார்க்கக் கூடாதுதான். ஆனால் அது பிறப்பால் ஆண்-பெண் வித்தியாசம் பார்க்கக்
கூடாது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். டிரான்ஸ்ஜென்டர் என்னும் ஆண், பெண்ணாக மாறியவருக்கு
பொருந்தாது” என்று தீர்ப்புச் சொல்லிவிட்டது.
இந்த மாவட்ட கோர்ட்டின்
தீர்ப்பை எதிர்த்து 2018-ல் பெடரல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். பெடரல் கோர்ட்,
இவரின் அப்பீல் வழக்கை ஏற்றுக் கொள்கிறது. “அமெரிக்க அரசியலைப்புச் சட்டத்தின் படி,
ஆண்-பெண் வித்தியாசம் என்பதை உத்தியோகத்தில் பார்க்க முடியாது” என்று தீர்ப்பு வழங்கி
விட்டது.
ஆனாலும், இந்த தீர்ப்பை
எதிர்த்து மேலதிகாரி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்திருக்கிறார். அந்த
அப்பீல் வழக்கு இன்னும் சில வாரங்களில் விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கிறார்.
அமெரிக்க அரசின் தற்போதைய
நிலைப்பாடு என்னவென்றால், பிறப்பால் ஆண்-பெண் என்ற வித்தியாசத்தை வேலையில் பார்க்கக்
கூடாது. ஆனால், டிரான்ஸ்ஜென்டர் என்னும் ஆண்-பெண்ணாக மாறுவதை இதில் சேர்க்க முடியாது
என்று கூறுகிறது.
Federal law barring
discrimination on the basis of sex only applies to biological sex, not sexual
identity or orientation.
ஆனால், இந்த ஸ்டீபன்ஸ்
நிலைப்பாடு என்னவென்றால், உலகின் எல்லா மனித இனமும் ஒரே உரிமையைப் பெற வேண்டும் என்பதே.
அமெரிக்க சுதந்திரம் அடைந்தபோது, அதன் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ எல்லாவித பாதுகாப்பையும்
வழங்கும் என்றே கூறியுள்ளது என்று சொல்கிறார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி
பாரக் ஒபாமா அவர்கள், டிரான்ஸ்ஜென்டர் வீரர்களை அமெரிக்க படைகளுக்கு சேர்த்துக் கொண்டது.
இப்போது வழக்கு அமெரிக்க
சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் ஒன்பது நீதிபதிகள்
இருப்பர். அதில் தற்போது ஐந்து நீதிபதிகள் பழைமைவாதம் கொண்டவர்கள் என்று கருதுகிறார்கள்.
எனவே தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
“நான் நானாக இருப்பதில்
அவர்களுக்கு என்ன இடைஞ்சல்” என்று புலம்புகிறார்.
**
No comments:
Post a Comment