பிருகு ரிஷி:
மகா ரிஷி. இவர்
வம்சத்தில் பரசுராமர் பிறந்தார். பிருகு ரிஷி ஒருகாலத்தில் சிவனைத் தரிசிக்குமாறு
சென்றபோது, அவர் தரிசனம் கொடாமையால் கோபித்துச் சிவனை லிங்காகாரமாகுக என்று
சபித்துவிட்டுப் பிரமாவைக் காணச் சென்றார். அவரும் இவரை மதிக்காததைக் கண்டு அவர்க்கு
ஆலயமும் பூஜையும் இல்லாது போகுக என்றும் சபித்து, பின் விஷ்ணுவிடம் செல்ல, அவரும்
நித்திரை செய்திருந்தார். அதுகண்டு மார்பிலே காலால் உதைத்தார். விஷ்ணு விழித்து
கோபம் செய்யாது உமது திருவடி என் மார்பில்பட நான் செய்த புண்ணியமே என்று உபசரிக்க
விஷ்ணுவே யாவராலும் வழிபடத்தக்க கடவுள் என அநுகிரகித்துப் போனார். அடிமுடி தேடப்
புகுந்தபோது பிரமா சொன்ன பொய்யுரைக்காக சிவன் அவருக்கு ஆலயம் இல்லாது சபித்தார்
என்றும் கந்தபுராணம் கூறும்.
No comments:
Post a Comment