Saturday, March 29, 2014

பரசுராமர்

ஜமதக்கினி

ரிசிகனுக்கு சத்தியவதியிடம் பிறந்த புத்திரர் ஜமதக்கினி. இவர் ஒரு மகாரிஷி. அரிய தவம் செய்து நான்கு வேதங்களையும் பெற்றவர்.

ஒருமுறை, கந்தர்வ ராஜனாகிய சித்தரரதன் தனது மனைவியுடன் உல்லாசமாக வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த மகாரிஷி ஜமதக்கினியின் மனைவி 'ரேணுகை' அந்த தம்பதியரைப் பார்த்து அதிசயித்து தன் மனதைப் பறிகொடுத்து விட்டார். அதே நினைவுடன் திரும்பி வந்தார்.

அவளின் சிந்தனையில் வேற்றுமை இருப்பதைக் கண்ட அவர் கணவர் ஜமதக்கினி ரிஷி, இவள் தனது பதிவிரதா குணம் மங்கும்படி நடந்து கொண்டுள்ளார் என்று கோபம் கொண்டார்.

உடனே தனது மகன்களை நோக்கி, 'உங்களின் தாய் பதிவிரதை தன்மையை இழந்து விட்டார்; எனவே அவளின் தலையை வெட்டிக் கொல்லுங்கள்' என்று கட்டளையிட்டார். ஆனால், மற்ற எந்த மகனும் முன்வரவில்லை. ஒரே ஒரு மகன் 'பரசுராமர்' மட்டும் முன்வந்து தன் வாளை எடுத்து தன் தாயின் தலையை வெட்டி வீழ்த்தினார்.

இதைக் கண்ட ஜமதக்கினி, தன் சொல்லைத் தட்டாத தன் மகனைப் பார்த்து, 'ஆரியா, என் சொல்லை தட்டாமல் கேட்டாய்; உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார்.

அதற்கு, பரசுராமர், 'என் தாய்க்கு உயிர் கொடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளை மதித்து, ரேணுகையை உயிர் கொடுத்து எழுப்பினார் ஜமதக்கினி ரிஷி.

(ஜமதக்கினியின் புத்திரர்கள்: உறுமதி, உற்சாகன், விசுவாசன், பரசுராமன், என நால்வர்)


No comments:

Post a Comment