பிரபோத சந்திரோதயம்:
வடமொழியிலே கிருஷ்ணமிசிர பண்டிதரால் செய்யப்பட்ட ஓர் அற்புத
வேதாந்த நாடகம். இதனைத் தமிழிலே விருத்தப்பாவால் மொழிபெயர்த்தவர் மாதை வேங்கடேச
பண்டிதர். ஆன்மாக்களிடத்தில் இருப்பதாகிய காமக் குரோதாதிகளையும், விவேகம்,
சாந்தம், முதலியவைகளையும் ரூபகாரம் பண்ணி (உருவகம் பண்ணி), பாரதக் கதையைப் போல
நாடுகவர்தல், காட்டுக்கோட்டல், தூதுபோக்கல், போர்புரிதல், வாகைசூடல்,
ஞானமுடிச்சூட்டு, எனக் கட்டி அமைத்துரைப்பது. 1300 வருடங்களுக்கு முன்னர்
வடமொழியில் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment