Saturday, March 29, 2014

ஜராசந்தன்

ஜராசந்தன்:

ஜராசந்தன் என்பவன் பிருகத்திரதன் புத்திரன்.

பிருகத்திரதன் மன்னன், தனக்கு புத்திரர் இல்லாமையால், தனது நாட்டை தனது மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு, காட்டுக்குச் சென்று தவம் செய்தான். சண்டகௌசிக முனிவரை வேண்டினான்.

முனிவரும் மனம் இரங்கி, இவனுக்கு ஒரு மாங்கனியை கொடுத்து, இதை மன்னனின் மனைவியை உண்ணுமாறு சொன்னார். அதை அவன் தன் மனைவியிடம் கொடுக்க, அவளோ, அந்த மாங்கனியை இரு கூறுகளாக வெட்டி, அதில் ஒரு துண்டை இவளை உண்டாள். மற்ற துண்டை இவளின் சக்களத்திக்கு கொடுத்து உண்ணச் செய்தாள். இவ்வாறு செய்ததால், அந்த கரு பாதி பாதியாக வளர்ந்து இருவர் வயிற்றிலும் பாதி பாதி குழந்தையாக வளர்ந்து பிறந்தது.

அந்த குறையுடன் பிறந்த இரு குழந்தைகளையும் ஜரை என்னும் ஒரு ராட்ச்சி திருடிச் சென்று ஒரு இடத்தில் வைத்திருந்தாள். அவை இரண்டும் ஒட்டிக் கொண்டு இருந்ததால், ஒரே குழந்தையாக மாறி விட்டது. இந்த அதியசத்தை கண்ட ராட்சசி அந்த குழந்தையை பிருகத்திரதனிடம் கொண்டு போய் கொடுத்தாள். இந்த குழந்தைக்கு 'ஜராசந்தன்' என பெயரிட்டான். சந்தி என்பது கூடுதல் என்பது பொருள்.

கஞ்சனை, கிருஷ்ணன் கொன்றதால், இந்த சராசந்தன், தன் மருகன் கஞ்சனைக் கொன்ற கோபத்தில், கிருஷ்ணனின் மதுராபுரிக்கு படையெடுத்துச் சென்றான். இவ்வாறு 18 முறை படையெடுத்தான். கடைசியாக கிருஷ்ணனை வென்றான்.

பின்னர், தருமர் ராச்சூய யாகம் செய்த போது இவன் வீனமால் கொல்லப்பட்டான். (கிருஷ்ணனின் தூண்டுதலால்). அது ஒரு தனிக்கதை.


பரசுராமர்

ஜமதக்கினி

ரிசிகனுக்கு சத்தியவதியிடம் பிறந்த புத்திரர் ஜமதக்கினி. இவர் ஒரு மகாரிஷி. அரிய தவம் செய்து நான்கு வேதங்களையும் பெற்றவர்.

ஒருமுறை, கந்தர்வ ராஜனாகிய சித்தரரதன் தனது மனைவியுடன் உல்லாசமாக வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த மகாரிஷி ஜமதக்கினியின் மனைவி 'ரேணுகை' அந்த தம்பதியரைப் பார்த்து அதிசயித்து தன் மனதைப் பறிகொடுத்து விட்டார். அதே நினைவுடன் திரும்பி வந்தார்.

அவளின் சிந்தனையில் வேற்றுமை இருப்பதைக் கண்ட அவர் கணவர் ஜமதக்கினி ரிஷி, இவள் தனது பதிவிரதா குணம் மங்கும்படி நடந்து கொண்டுள்ளார் என்று கோபம் கொண்டார்.

உடனே தனது மகன்களை நோக்கி, 'உங்களின் தாய் பதிவிரதை தன்மையை இழந்து விட்டார்; எனவே அவளின் தலையை வெட்டிக் கொல்லுங்கள்' என்று கட்டளையிட்டார். ஆனால், மற்ற எந்த மகனும் முன்வரவில்லை. ஒரே ஒரு மகன் 'பரசுராமர்' மட்டும் முன்வந்து தன் வாளை எடுத்து தன் தாயின் தலையை வெட்டி வீழ்த்தினார்.

இதைக் கண்ட ஜமதக்கினி, தன் சொல்லைத் தட்டாத தன் மகனைப் பார்த்து, 'ஆரியா, என் சொல்லை தட்டாமல் கேட்டாய்; உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார்.

அதற்கு, பரசுராமர், 'என் தாய்க்கு உயிர் கொடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளை மதித்து, ரேணுகையை உயிர் கொடுத்து எழுப்பினார் ஜமதக்கினி ரிஷி.

(ஜமதக்கினியின் புத்திரர்கள்: உறுமதி, உற்சாகன், விசுவாசன், பரசுராமன், என நால்வர்)


சைவ மதம்

சைவ மதம்:

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள ஒரு மதம். இந்த மதத்தை சேர்ந்தோரை சைவர் என்பர்.

பதி, பசு, பாசம், என்னும் மூன்றும் நிலையான (நித்திய) பொருள்கள்.

ஆன்மாக்கள் பசுக்கள். இவைகள் அவை செய்யும் புண்ணியத்தினால் ஞானம் பெற்று சிவனுடன் இரண்டற கலந்து முக்தி அடையும். பற்றை விடுவதே முக்திக்கு வழி.

சிவன், 'சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுகிரகம்' என்னும்  பஞ்சகிருத்தியங்களையும், ஆன்மாக்களையும் ஈடேற்றுபவர் என்றும் சொல்கிறது இந்த மதம்.


துற்பலை


துரியோதனன் தங்கை 'துற்பலை'. இவளைத் திருமணம் செய்து கொண்டவன் சைந்தவன். ஜயத்திரதன் என்றும் பெயர். இவன் சிந்து தேசத்து அரசன். இவனின் தந்தை விருத்தக்ஷத்திரன்.

பாண்டவர்கள் வனவாசத்தில் காட்டில் இருந்தபோது, இந்த சைந்தவன் திரௌபதியை பலவந்தமாக கவர்ந்து போனான். உடனே பாண்டவர்கள் அவனை தொடர்ந்து விரட்டிச் சென்று இடையிலேயே தடுத்து திரௌபதியை மீட்டு வந்தனர்.

பின்னர், பாரத யுத்தத்தில் இந்த சைந்தவனை அர்ச்சுனன் கொன்றான்.


குழவி இறப்பினும் . . .. .

சேரமான் கணைக்கால் இரும்பொறை:

இந்த மன்னனை, கோச்செங்கட் சோழனாலே சிறையிடப்பட்டான். சிறையில் சேரமான் தாகத்தால் தவித்தான். அவ்வாறு தாகம் அதிகமானபோதும், அங்கு கொடுத்த தண்ணீரை வாங்கி அருந்த மறுத்து விட்டான். உயிரே போனாலும், எதிரியிடம் தண்ணீர் அருந்த மாட்டேன் என்று வீரமாக இருந்தான்.

அரச பரம்பரையில், வயிற்றில் கருவில் இருந்த குழந்தை இறந்து பிறந்தாலும், அந்த குழந்தையை வாளால் பிளந்து, அதன் பின்னர் அந்த சிசுவை புதைப்பார்கள். இது மரபு. அவ்வளவு வீரபரம்பரையில் பிறந்த என்னை ஒரு நாய் போல சங்கிலியில் கட்டி கிடந்தாலும், என் எதிரியிடம் நீர் வாங்கி அருந்த மாட்டேன் என்று உறுதியாக இருந்து உயிரை விட்டவன் இந்து சேரமான் கணைக்கால் இரும்பொறை மன்னன்.

இவன் அவ்வாறு இறக்கும் தருவாயில், "குழவி இறப்பினும் மூன்றடி பிறப்பினும், ஆள் என்று வாளினால் பிளப்பர்.. .. . . தாம் இரந்து உண்ணும் புத்திரரை அரசர் விரும்பார்" என்ற கருத்துடைய பாடலை அவர் இறக்கும்போது பாடி இறந்தார்.

(புறநானூறு பாடல்)

சேக்கிழாரின் பெரியபுராணம்

சேக்கிழார்:
தொண்டை நாட்டிலே குன்றத்தூரிலே பிறந்தார். சேக்கிழார் என்பது அவருடைய மரபுப் பெயர். இவர் மிகுந்த கல்வி அறிவுடையவர். அப்போது இருந்த அநபாய சோழ மகாராஜா இவரைத் தமக்கு மந்திரியாக வைத்துக் கொண்டார். இவருக்கு 'உத்தமசோழப் பல்லவர்' என்ற வரிசைப் பெயரையும் கொடுத்தார் மன்னர்.
அப்போதுள்ள மக்கள் சீவக சிந்தாமணியை அதன் சொற்சுவைக்காக கற்பதைப் பார்த்து மன வேதனையானார்.
ஆகவே, முக்திக்கு சாதனமான சிவனடியார் சரித்திரமாகிய பெரியபுராணத்தை பாடி அருளினார்.
இந்த பெரியபுராணம் சிதம்பரத்திலே சபாநாயகர் சந்நிதியிலே திருவருளால் எழுந்த அசரீரி வாக்காகிய 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்னும் முதல் அடியை கொண்டு ஆயிரம் கால் மண்டபத்தில் பாடி முடிக்கப்பட்டது.
பக்தி பரவசம் பெருக பாடும் சக்தி பெற்றவர். பழம் கர்ண பாரம்பரியத்தில் இருந்து வந்த அடியாருடைய சரித்திரங்களை இவர் பாடி முடித்து இந்த சபாநாயகர் சபையிலே அரங்கேற்றினார். இதனாலேயே, சோழமகாராஜா இவருக்கு 'கனகாபிஷேகம்' நடத்தி, இவரையும், பெரியபுராணத்தையும் பட்டத்து யானை மேல் ஏற்றி தானும் அதில் ஏறிய மன்னன், சேக்கிழாருக்கு சாமரம் வீசிக் கொண்டே சென்றான். பின்னர், சேக்கிழாருக்கு ஞானமுடி சூடினான்.
(இது சுமார் 800 வருடங்களுக்கு முன்னர்).


திருத்தணிகை

திருத்தணிகை:
இது சூரனோடு சுப்பிரமணியர் செய்த செருத் தணிந்த இடம் என்பதால் 'செருத்தணி' அல்லது 'திருத்தணிஅல்லது 'திருத்தணிகை' என பெயர் பெற்றது.
இந்த தலத்தில், உதய காலத்தில் ஒரு பூவும், உச்சி காலத்தில் ஒரு பூவும், மாலையில் ஒரு பூவும் மலருகிற 'நீலோற்ப' மலர்களையுடைய ஒரு சுனை உள்ளது. அது ஒரு அற்புத தீர்த்தம் என்பர். 


விதானமாலை

விதானமாலை
விதானமாலை என்பது ஒரு ஜோதிடநூல். ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் ஒரு நியதி உண்டு என்றும், அதைச்செய்யும் போது உள்ள கோள்களின் இயக்கம், பஞ்சாங்க கணிதம் இவற்றைக் கொண்டு கணிக்கப்படுவது இது. இந்த நூலை சோழநாட்டு அமிர்தசாகரரின் புத்திரராகிய நாராயண சுவாமிகள் தமிழ்க்கவிகளால் யாத்துள்ளார்.

1-விதானமாலை (காப்பு)

பூமகள் கேள்வன்பொன் னைடையன் புட்கொடி யோன்புனித
னாமகள் கோனைத்தன் னாபியிற் றந்தவ னான்மறையின்
பாமய னச்சுதன் பங்கயந் கண்ணன்பஞ் சாயுதன்றாள்
சேமமன் றெண்ணியென் சிந்தையிற் சென்னியிற் சேர்த்துவனே.


(இலக்குமியின் நாயகரும், பீதாம்பரத்தை உடையவரும், கருடக் கொடியை உடையவரும், களங்கமற்றவரும், சரசுவதியின் நாயகனாகிய பிரமாவைத் தன் உந்திக் கமலத்தினின்று தோற்றுவித்தவரும், நான்கு வேதங்களின் வடிவானவரும், அழிவில்லாதவரும், செந்தாமரை மலர்போன்ற கண்களை உடையவரும், சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் பஞ்சாயுதங்களையும் உடையவருமாகிய நாராயணமூர்த்தியுடைய திருவடிகளை நான் நுதலிப் புகுந்த நூலுக்கு காவலாம் என்று நினைத்து, மனத்திலும் சிரசிலும் இருத்திக் கொள்வேன்.)

Friday, March 28, 2014

ஆன்மா எங்கு செல்லும்


இந்த ஜீவ-ஆன்மா முக்திபெற்று பேராத்மாவுடன் சேர்வதற்கு உபகாரமாக உபதேசித்த உபநிஷதங்களின் சாரமே ஸ்ரீகிருஷ்ணன் அருளிய கீதை.

உபநிஷதங்களினது உண்மையை உணரும் பக்குவம் கலியுகத்து மக்களுக்கு கைகூடாதென்பதால், கலியுகம் ஆரம்பத்தில், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்து அந்த உபநிஷதங்களின் சாரத்தை தந்தான்.
எந்த விருப்பும் வெறுப்பும் இன்றி கடமையை கடமையாகச் செய்து வந்தால் ஒருவன் ஞானியாக இருக்கலாம் என்பது கீதையின் சித்தாந்தம்.
கீதையை கேட்டு நமக்கு வெளியிட்டவர் சஞ்சயன்.
  

கீதைக்கு, ஆதிசங்கராச்சாரியார் ‘அத்வைத’ விளக்கமும், 
ஸ்ரீராமானுஜாச்சாரியார் ‘விசிஷ்டாத்வைத’ விளக்கமும், 
ஸ்ரீமத்வாச்சாரியார் ‘துவைத’ விளக்கமும் மிக விரிவாகச் செய்துள்ளனர். 


தொழில் பெயர்கள்

வைசியர் பெயர் = இளங்கோக்கள், மன்னர்பின்னர், இப்பர், எட்டியர், நாய்கர், வணிகர், ஆன்காவலர், உழவர், பரதர், வினைஞர், செட்டியர், சிரேட்டிகள்.
சூத்திரர் பெயர் = மண்மகள்புதல்வர், வளமையர், களமர், சதுர்த்தர், உழவர், மேழியர். வேளாளர், ஏரின்வாழ்நர், காராளர், வினைஞர், பின்னவர்.
மருத்துவர் பெயர் (வைத்தியர் பெயர்) = பிடகர், ஆயுள்வேதியர், மாமாத்திரர்.
குயவன் பெயர் = கும்பகாரன், குலாலன், வேட்கோவன், சக்கரி, மட்பகைவன்.
சித்திரகாரர் பெயர் = சிற்பர், ஓவியர், மோகர்.
கண்ணாளர் பெயர் = சிற்பியர், துவட்டா, ஓவர், தபதியர், அற்புதர், யவனர், கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர், கம்மியர், கண்ணுள்வினைஞர்.
கொல்லர் பெயர் = கருமர், மனுவர்.
தச்சன் பெயர் = மரவினையாளன், மயன், தபதி.
தட்டார் பெயர் = பொன்செய்யுங்கொல்லர், பொன்வினைமாக்கள், சொன்னகாரர், அக்கசாலையர்.
சிற்பாசாரியர் பெயர் = மண்ணீட்டாளர்.
பொருளினை உருக்கும் தட்டார் பெயர் = பொன் செய்யும் புலவர்.
பணித்தட்டார் பெயர் = கலந்தருநர்.
முத்தங்கோப்பார் பெயர் = மணிகுயிற்றுநர்.
கன்னார் பெயர் = கஞ்சகாரர், கன்னுவர்.
அநாரியர் பெயர் = மிலைச்சர், மிலேச்சர்.
சோனகர் பெயர் = யவனர், உவச்சர்.
உப்பு வணிகர் பெயர் = உமணர்.
வண்ணார் பெயர் = காழியர், தூசர், ஈரங்கோலியர்.
நாவிதன் பெயர் = பெருமஞ்சிகன், சீமங்கலி, ஏனாதி.வேதகாரர் பெயர் = பொருந்தர்.
நெய்வார் பெயர் = காருகர்.
துன்னர் பெயர் = பொல்லர்.
தோற்றுன்னர் பெயர் = செம்மார்.
கூவனூலோர் பெயர் = உல்லியர்.
சங்கறுப்போர் பெயர் = வளை போழநர்.
ஊன் விற்போர் பெயர் = சூனர்.
தோல்வினை மாக்கள் பெயர் = பறம்பர்.
சண்டாளர் பெயர் = கொலைஞர், களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞர்.
பாணர் பெயர் = சென்னியர், பண்டர், ஒவர், வந்தித்து நிற்போர், மதங்கர், சூதர், பண்ணவர்.
செக்கான் பெயர் = சக்கரி. நந்தி.
கள் விற்போர் பெயர் = சௌண்டிகர், துவசர், பிழியர், படுவர்.
மீகாமன் பெயர் = மீகான், மாலுமி, நீகான்.

பண்ணுவர் பெயர் = மாவலர், வதுவர், வாதுவர்.

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்
கல் மேல் எழுத்துப்போல் காணுமே -அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தாருக்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.

(நல்லவருக்கு செய்த உதவி எப்போதும் நிலைகொண்டு இருக்கும்; ஈரம் இல்லாதவருக்கு (இரக்கம் இல்லாதவர்)  செய்த உதவியானது நீரில் எழுதிய எழுத்துக்குச் சமம் (அப்போதே அழிந்துவிடும்).


வாக்குண்டாம்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
 நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார் வார் தமக்கு.

வாக்கு உண்டாம்.
நல்ல மனம் உண்டாம்.
மாமலராள் = தாமரையில் இருக்கும் திருமகள்.
நோக்கு (நல்ல அருள் பார்வை) உண்டாம் .
மேனி (உடல்) நுடங்காது (மெலியாது).
துப்பார் திருமேனி = பவளம் போன்ற சிவந்த உடல்.
தும்பிக்கையான் = விநாயகர்
பாதம் தப்பாமல் (தவறாது) சார்வார் தமக்கு(வணங்குபவருக்கு).

Wednesday, March 26, 2014

Woods

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
 நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே

 முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே

 தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

Woods

     கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
     செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
     எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்

     பொல்லாங் குரையாமை நன்கு.

வல்லமை பேசேல்


வல்லமை பேசேல். (ஔவையார்)

(தன் திறமையை தானே புகழ்ந்து வீராப்பு பேசக் கூடாது.)



Sunday, March 2, 2014

புராணம்:


புராணம்:

உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும், மனுவந்தரங்களும், பாரம்பரிய கதைகளும், ஆகிய இவ்வைந்தையும் கூறலால் பஞ்சலக்ஷணம் எனப்படுவது. புராணம் பதினெட்டு. அவை வேதங்களுக்கு வியாக்கியா ரூபமாய் உள்ளன. 

அவை: பிரமம், பத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பவிஷியம், பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மற்சம், கருடபுராணம், பிரமாண்டம், என பதினெண் புராணங்களாம். புராணம் என்பதன் பொருள் பண்டைய வரலாறு. 

அவற்றை வகுத்தவர் வியாசர். அவற்றுள் சிவபுராணம் பத்து, விஷ்ணுபுராணம் ஆறு, பிரமபுராணம் ஒன்று, சூரியபுராணம் ஒன்று;  (விஷ்ணுபுராணம் நான்கு, பிரம புராணம் இரண்டு, அக்கினி புராணம் ஒன்று என்றும் கூறுவர் சிலர்). 

புராணமாவது சாஸ்திரங்களிலே தலைமை பெற்றது. அது கிருத யுகத்திலே நூறு கோடி கிரந்தங்களினாலே பிரமாவினால் செய்யப்பட்டதால் ‘பிராமம்’ என்னும் பெயருடையாதாய் ஒன்றாய் இருந்தது. திரேத யுகத்திலே ஒரு கோடி கிரந்தங்களால் 118 சங்கிதைகளை உடைய 18 பாகங்களாக அது மகரிஷிகளால் வகுக்கப் பட்டது. 

அதனைத் துவாபர யுகத்திலே வியாசர் நான்கு லக்ஷம் கிரந்தங்களாக பதினெண் (18) புராணமாக்கினார். அப்பதினெட்டையும் ரோமகர்ஷணர் என்னும் முனிவர், வியாசரிடம் கேட்டார். அவர் சுமதி, அக்கினி வர்ச்சன் முதலியோருக்கு உபதேசித்தார். இப்படி குரு-சிஷ்ய பரம்பரையாக வெளிவந்தன. இறந்துபோன பல கற்பத்துச் (ஒரு பிரபஞ்சம் தோன்றி பின்னர் இது ஒடுங்குவதை ஒரு கற்பம் என்பர்) செய்திகளை எடுத்துக் கூறப்படுதலாலும் இறந்துபோன சிருஷ்டிகளும் ஒருவாறின்றிப் பேதப்படுதலும், கற்பந்தோறும் அநுகிரக மூர்த்திகளும் வேறாதலாலும், அந்த அந்தக் கற்பத்து வரலாற்றைக் கூறும் போது, அந்த கற்பத்துக்கு அதிகார மூர்த்திகளை விஷேடித்து துதிக்கப்படுதலாலும், புராணங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடு கொண்டுள்ளதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை ஒற்றுமை உடையனவே. 

பிருகு ரிஷி


பிருகு ரிஷி: 
மகா ரிஷி. இவர் வம்சத்தில் பரசுராமர் பிறந்தார். பிருகு ரிஷி ஒருகாலத்தில் சிவனைத் தரிசிக்குமாறு சென்றபோது, அவர் தரிசனம் கொடாமையால் கோபித்துச் சிவனை லிங்காகாரமாகுக என்று சபித்துவிட்டுப் பிரமாவைக் காணச் சென்றார்.  அவரும் இவரை மதிக்காததைக் கண்டு அவர்க்கு ஆலயமும் பூஜையும் இல்லாது போகுக என்றும் சபித்து, பின் விஷ்ணுவிடம் செல்ல, அவரும் நித்திரை செய்திருந்தார். அதுகண்டு மார்பிலே காலால் உதைத்தார். விஷ்ணு விழித்து கோபம் செய்யாது உமது திருவடி என் மார்பில்பட நான் செய்த புண்ணியமே என்று உபசரிக்க விஷ்ணுவே யாவராலும் வழிபடத்தக்க கடவுள் என அநுகிரகித்துப் போனார். அடிமுடி தேடப் புகுந்தபோது பிரமா சொன்ன பொய்யுரைக்காக சிவன் அவருக்கு ஆலயம் இல்லாது சபித்தார் என்றும் கந்தபுராணம் கூறும்.

பிரம்மா:

பிரம்மா:

சிருஷ்டி கிருத்தியத்தை நடத்தும் அதிகாரமூர்த்தி. இவர் விஷ்ணுவினது நாபிக் கமலத்தில் உதித்தவர். இவர் சக்தி சரஸ்வதி தேவி. இவருக்கு வாகனம் அன்னம். இவர்தான் சர்வ லோகங்களையும் சிருஷ்டிக்கு மாற்ற அதிகாரம் உள்ளவர் என கர்வித்து சிவனை மதியாதிருந்து சிவன் கோபாக்கினியில் தோன்றிய வைரவக் கடவுளாலே ஒரு தலை கொய்யப்பட்டு, நான்கு முகங்களை உடையவர் ஆனதால், நான்முகன், சதுர்முகன் என்னும் பெயரெடுத்தார். இவர் சிருஷ்டி முறை அறியாது மயங்கிச் சிவனை வழிபட்டு அவரைத் தமக்கு புத்திரராகப் பெற்றார் என்று சில புராணம் கூறும். இவருக்குப் புத்திரராக அமைந்ததால் இவருக்கு பிதாமகன் என்னும் பெயரும் உண்டாம். பிரமாவைச் சுப்பிரமணியக் கடவுள் சிறையிலிட்டு சிருஷ்டி கிருத்தியத்தை ஒரு காலத்தில் நடத்தினார் என்பது கந்தபுராணம். பிரம்மாவானவர் மகா பிரளய காலத்தில் ஒடுங்கி, சிருஷ்டி காலத்திலே தோன்றுதலின் அக்காலந் தோறும் அழிகின்ற பிரமாக்களின் கபாலங்களைச் சிவன் மாலையாக அணிவார் என்பதினால் தேவரெல்லோரும் அழியவும், அழியாது எஞ்சி நிற்பவர் சிவன் ஒருவரே என்பதும் பொருளாம்.

பிரபோத சந்திரோதயம்:

பிரபோத சந்திரோதயம்:

வடமொழியிலே கிருஷ்ணமிசிர பண்டிதரால் செய்யப்பட்ட ஓர் அற்புத வேதாந்த நாடகம். இதனைத் தமிழிலே விருத்தப்பாவால் மொழிபெயர்த்தவர் மாதை வேங்கடேச பண்டிதர். ஆன்மாக்களிடத்தில் இருப்பதாகிய காமக் குரோதாதிகளையும், விவேகம், சாந்தம், முதலியவைகளையும் ரூபகாரம் பண்ணி (உருவகம் பண்ணி), பாரதக் கதையைப் போல நாடுகவர்தல், காட்டுக்கோட்டல், தூதுபோக்கல், போர்புரிதல், வாகைசூடல், ஞானமுடிச்சூட்டு, எனக் கட்டி அமைத்துரைப்பது. 1300 வருடங்களுக்கு முன்னர் வடமொழியில் செய்யப்பட்டது. 

பிதிர்கணம்

பிதிர்கணம்:

அங்கிரச பிரசாபதிக்குச் சுவதையிடத்துப் பிறந்தவர்கள். இவர்களே உலகத்து பிரஜவிருத்திக்கு வித்தாய் இருப்பவர்கள். இவர்களே பிதிர் தேவதைகள். வசு, ருத்திரர், ஆதித்தியர், என்னும் இவர்களுடையு ரூபங்கள் உடையவர்களாய் சந்திர லோகத்தில் இருப்பவர்கள். பிதிர் லோகத்தை அடைபவர்கள் மீளும்போது, சந்திரனை விட்டு ஆகாசம், காற்று, புகை, மேகம், மழை, வித்து, இவற்றின் வழியாக ஸ்திரிபுருஷர்களை அடைந்து பிறப்பார்கள். 

பாண்டிதேசம்:

பாண்டிதேசம்:
சோழ தேசத்துக்கு தென்மேற்கிலே கன்னியாகுமரி வரை உள்ள தேசம். இதற்கு ராஜதானி மதுரை. பாண்டியர் அரசு செய்தமையின் இஃது இப்பெயர் பெற்றது. இதுவே தமிழ் பிறந்த நாடு. இது மிக்க பழமையும் பெருங்கீர்த்தியும் அநேக சரித்திரங்களும், புண்ணிய க்ஷேத்திரங்களும், நதிகளும் மலைகளும் உடைய நாடு. முச்சங்கம் இருந்ததும், அநேக புலவர்களைத் தந்ததும் இந்நாடே.
பாண்டியனின் பூர்வீகம்
துஷ்யந்தன் தம்பி திஷ்யந்தன்.
திஷ்யந்தனின் பேரன் ஆசிரதன்.
ஆசிரதன் புத்திரன் பாண்டியன்.
இவனே பாண்டி நாட்டின் ஸ்தாபகன்.
இவனது வம்சத்தில் வந்தவர்கள் பல்லாயிரம் பாண்டியர்.

பாண்டியன்:

துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தனுக்கு பௌத்திரனாகிய ஆசிரதன் புத்திரன். இவனே பாண்டி தேசத்தின் ஸ்தாபகன். இவன் வம்சத்தில் வந்தோர் பல்லாயிரம் பாண்டியர். இவனே குலசேகர பாண்டியன் போலும். இவன் தென்மதுரையை (தற்போதுள்ள மதுரை அல்ல, கடல்கொண்ட தென்மதுரை) நகராக்கி நான்கு வருணத்து ஜனங்களையும் ஸ்தாபனம் செய்து காசியிலிருந்து ஆதி-சைவர்களையும் கோயிற் பூசைக்காகக் கொணர்ந்து இருத்தி, அகஸ்தியர் அனுமதிப்படி அரசு புரிந்தவன். இவன் மகன் மலையத்துவச பாண்டியன். மலயமலையை தனது கொடியில் தீட்டிக் கொண்டமையால் மலயத்துவசன் என்னும் பெயர் அவனுக்கு உண்டாயிற்று. இவன் அகஸ்தியரை உசாவியே எக்கருமமும் செய்பவன் என்பது அக்கொடியின் குறிப்புப் பொருள். இப்பாண்டியன் காலம் துவாபர காலம்.