அல்லிராணி
சித்திரவாகன் என்னும் பாண்டியனின் புத்திரி. கல்வி
அறிவிலும், வில்வித்தையிலும், மதிநுட்பத்திலும் சிறந்து விளங்கி, தந்தையினது
அனுமதியுடன் பாண்டி நாட்டின் தென்பாகத்துக்கு அரசியாகி, இலங்கையில் ஒருபாகத்தை
வென்று கடலிலே முத்துவாருவித்தவள்.
அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையின் பொருட்டு பாண்டி நாட்டை
அடைந்தபோது, இவளைக்கண்டு சித்திரவாகன் அனுமதியுடன் இவளை மணம் புரிந்தான்.
சித்திராங்கதை என்னும் பெயருடையவளும் இவளே என்பர்.
No comments:
Post a Comment