Wednesday, December 18, 2013

தசரதனின் பூர்வீகம்

தசரதனின் பூர்வீகம்:

ரகுவின் புத்திரன் அஜன். அஜனின் புத்திரன் தசரதன். 

விதர்ப்ப நாட்டு ராஜபுத்திரியாகிய இந்துமதியின் சுயம்வரத்துக்கு போன அஜன், வழியில் எதிர்ப்பட்ட ஒரு யானை மீது பாணம் தொடுக்க, அந்த யானை தனது பூர்வ உருவமாகிய கந்தருவனாகி, ‘இருடி சாபத்தால், தான் யானையானதாகவும், அஜன் மன்னனால் தனக்கு விமோசனம் கிடைத்தது’ என்று கூறினான். அதனால் அவனுக்கு தெரிந்திருந்த அஸ்திர வித்தையின் நுணுக்கங்களை அஜன் மன்னனுக்கு உபதேசித்தான். இந்த அஸ்திர வித்தையின் திறமையால், சுயம்வரத்தில் மற்ற அரசர்களையெல்லாம் புறம்கண்டு இந்துமதியை அஜன் மணம்புரிந்தான். 

இந்துமதி தசரதனின் தாய். காளிதாசன் கவி, அஜனின் பிரதாபத்தை எல்லாம் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறி உள்ளார். 

No comments:

Post a Comment