Wednesday, December 18, 2013

பதுமவியூகமும் அபிமன்னியனும்:

பதுமவியூகமும் அபிமன்னியனும்:

அர்ஜூனனுக்கு சுபத்திரையிடத்து பிறந்த புத்திரன் அபிமன்னியன். இவனை சந்திர அம்சமாக பிறந்தவன் என்பர். விராடன் மகள் உத்தரையை மணம் புரிந்தவன். இவன் பாரத யுத்தத்தில் பதிமூன்றாம் நாள் பதுமவியூகத்தை அழித்து உட்புகுந்து அசகாயனாய் தனித்து நின்று கொடிய யுத்தம் செய்து ஈற்றில் உயிர் துறந்தவன். இவன் இறந்தபோது இவன் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இவன் புத்திரன் பரீக்ஷித்து  இருந்தான்.

போரில், ‘பதுமவியூகம்’ என்பது சேனைகளை சிலந்தி வலை போல பின்னி அணிவகுத்து நிறுத்தி, அதற்குள்ளே சத்ரு (எதிரி) சேனைகளை அகப்படுத்தி, யுத்தம் செய்யும் ஒரு உபாயம். 

No comments:

Post a Comment