மரியாதை தெரியாதா?
உக்கிரசிரவன் என்பவன் சௌனகாதி ரிஷிகளுக்கு சகல புராண இதிகாசங்களும்
உபதேசித்தவன்.
ஒருநாள் இவன் முனிகணங்களுக்கு உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கையில் பலராமர் அங்கு
வந்தார். அவருக்கு இவன் வரவேற்று உபசாரம் பண்ணாமல் இருந்ததால், பலராமர் கோபித்துக் கொண்டு தமது கையிலிருந்த
தர்ப்பையினால் இவனை கொன்றார்.
அப்போது அங்கிருந்த முனிகணங்கள் இவரை வேண்டி இரங்க, அவனுக்கு மீண்டும் உயிர்
கொடுத்தார்.
எவ்வளவு கற்றிருந்தாலும், கண்டிப்பாக மரியாதையும் கற்றிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment