திருவாலவாய்
மதுரைக்கு மற்றொரு பெயர். திரு ஆலவாய். சர்ப்பம் (பாம்பு) வளைந்து எல்லை இட்டுக் கொடுத்த நகரம் என்பதால், இது திரு ஆலவாய் என்று பெயர் பெற்றது என்றும் சொல்வர். வடமொழியில் இதை ஆலாசியம் என்றும் சொல்வர்.
திருவாலவாய், சிவனின் தலம். சிவன், இங்கு 64 திருவிளையாடல்கள் நடத்திக் காட்டிய இடம். இங்குள்ள சிவனுக்குப் பெயர் சொக்கநாதர். அவர் மனைவிக்குப் பெயர் மீனாட்சி. இதைச் சிறப்பித்து, பரஞ்சோதி முனிவர் தமிழில் பாடிய புராணமே திருவிளையாடல் புராணம். வைகை நதிக்கரையில் உள்ளது. பாண்டியர்கள் காலத்தில் இங்குள்ள சிவாலயம் உருவாக்கப்பட்டது.
மதுரை உருவாவதற்கு முன்னர், கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. எனவே இதைக் கடம்பவனம் என்றும் சொல்வர். இந்த கடம் வனத்தில்தான், முதன் முதலில் சிவன் வந்து இருந்தார். அவரை வழிபட தேவர்கள் அனைவரும் அங்கு கூடி விட்டனர். இதைக் கண்ட ஒரு வைசிய வியாபாரி, அதை பாண்டிய மன்னனுக்குக் கூற, மன்னரின் கனவிலும் சிவன் தோன்றி, தனக்கு அங்கு ஒரு ஆலயம் அமைக்கும்படியும், மன்னனுக்கு பெரிய அரண்மனையை ஏற்படுத்தும்படியும் கேட்டதால், பாண்டிய மன்னன், சிவனுக்கு ஆலயமும், பெரிய அரண்மனையும் ஏற்படுத்தி, அதற்கு மதுரை என்று பெயரும் வைத்தான் என்றும் சொல்வர்.
**
No comments:
Post a Comment